தமிழீழம் - ஆயுதப் போராட்டம் - மூன்றாவது யோசனை
எதையும் எழுதக் கூடிய மன நிலையில் நான் இல்லையென்றும், அதனாலேயே மூன்று மாதங்களாக என்னுடைய இணையத் தளத்தை அப்படியே கிடப்பில் போட்டேன் என்றும் கடந்த கட்டுரையில் எழுதியருந்ததை வாசித்த சிலர் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். என்னை தொடர்ந்து எழுதும் படியும் அத்துடன் வெப்ஈழம் இணையத்தில் தொடர்ந்தும் ஆக்கங்கள் இடம் பெறுவதற்கு தம்மால் முடிந்த பங்களிப்பை செய்கிறோம் என்று அன்போடு கூறினார்கள்.

அவர்களின் ஆர்வத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த நான் அவர்களிடம் நிபந்தனைகளுடன் கூடிய சில கோரிக்கைகளை முன்வைத்தேன்.

என்னுடைய தளத்தில் எழுதுகின்ற பொழுது “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்பது போன்ற மோசடியான கட்டுரைகளை எழுதக் கூடாது”, “மறுவாசிப்பு என்ற பெயரிலோ வேறு வகையிலோ தேசியத் தலைவரை கொச்சைப்படுத்தக் கூடாது” இப்படியான கோரிக்கைகளோடு மூடநம்பிக்கைகளை வளர்க்கின்ற கட்டுரைகளையும் எழுதக் கூடாது என்பது போன்ற என்னுடைய வழமையான நிபந்தனைகளையும் கூறினேன். அவர்களும் சம்மதித்திருக்கிறார்கள். உண்மையிலேயே எழுதுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என்னோடு தொடர்பு கொண்ட இன்னும் ஒருவர் செய்திகளை எழுதித் தருவதாகக் கூறினார். வெப்ஈழத்தை ஆரம்பித்த பொழுது தொடர்ந்து செய்திகளையும் இணைத்து வந்தேன். செய்திகளை முந்தித் தருவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தேன். போர் ஆரம்பித்த பொழுது செய்திகளை மக்களுக்கு உடனுக்குடன் தருகின்ற பணியையும் மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் ஒரு நேரத்தில் வன்னியில் இருந்து போர் குறித்த செய்திகளை பெறுவது கடினமாகிப் போனது. தமிழர் தரப்பில் பல நேரங்களில் மௌனம்தான் நிலவியது. தமிழர்களின் செய்தி ஊடகங்களை விட “டிபென்ஸ்.எல்கே” இணையத்தளம் நம்பகரமானதாக மாறிப் போன துர்ப்பாக்கிய நிலையும் நேர்ந்தது. இப்படியான ஒரு நேரத்தில் செய்திகளை இணைப்பதை நிறுத்திக் கொண்டு கட்டுரைகளை மட்டும் வெப்ஈழத்தில் வெளியிட்டு வந்தேன்.

தற்பொழுது ஒருவர் செய்திகளை தொடர்ந்து வழங்குவதாக கூறியிருக்கிறார். போர் நின்று போய் ஸ்கோர்களும் வெளிவராத ஒரு நிலையில் மக்கள் செய்திகளை ஆர்வமாக வாசிப்பார்களா என்பது தெரியவில்லை. ஆயினும் இலங்கைத் தீவில் அரசியற் களம் சற்று சூடு பிடித்திருப்பதாலும், நான் கட்டுரைகள் எழுதுவதற்கு எடுக்கின்ற இடைவெளிகளை நிரப்பும் என்பதனாலும் செய்திகளை தருவதாக அவர் சொன்னதை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

முள்ளிவாய்க்காலில் போர் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் நான் என்னுடைய தொடர்பு வட்டத்திற்குள் விவாதித்த மூன்று யோசனைகளைப் பற்றி மீண்டும் தொடர்கின்றேன். இதிலே புறநிலை அரசு ஒன்றை அமைக்கின்ற திட்டத்தைப் பற்றித்தான் பலர் ஆர்வமாகப் பேசினார்கள். இந்த யோசனை பலருக்குள் முன்னமேயே இருந்தது இதற்கு ஒரு முக்கிய காரணம்.

இரண்டாவது யோசனையாகிய “குடியேற்றத் தமிழீழ நாடு” அமைப்பது பற்றி பலர் ஆதரவாகப் பேசினாலும் அதை நடைமுறையில் செயற்படுத்துவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருப்பதாகவே அவர்கள் கருதினார்கள்.

“குடியேற்றத் தமிழீழ நாடு” பற்றி நான் கடந்த முறை தந்த இணைப்பை படிக்காதவர்களுக்கு இதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். பரப்பளவில் பெரிதாக இருக்கின்ற மூன்றாம் உலக நாடு ஒன்றிடம் “சிங்கப்பூர் அல்லது யாழ் குடா” அளவிற்கான ஒரு சிறிய நிலப் பகுதியை வாங்கி, அதில் குறிப்பிட்டளவிலான தமிழர்கள் குடியேறி, அங்கேயிருந்தபடி தமிழீழத்தை மீட்பதற்கான ஏற்பாடுகளை செய்வதை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தத் திட்டம்.

இது பற்றி கடந்த கட்டுரையில் தந்திருக்கின்ற இணைப்பில் பலர் பலவிதமான தகவல்களை தந்திருக்கிறார்கள். ஒருமுறை கட்டாயம் படித்துப் பாருங்கள்.

இப்படி முதலாவது யோசனைக்கு வரவேற்பும், இரண்டாவது யோசனைக்கு கொள்கை அளவிலான ஆதரவும் இருந்த நிலையில் முன்றாவது யோசனைக்கு என்னுடைய நட்பு வட்டாரத்தில் பெரிதளவான வரவேற்பு இருக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி விட்டார்கள். இதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

இந்த மூன்றாவது யோசனை பற்றி எனக்குள்ளேயே நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் இருந்தன. தமிழினம் போரினால் பேரழிவை சந்தித்திருக்கின்ற ஒரு நிலையில் இதைப் பற்றி பேசலாமா என்கின்ற தயக்கம் எனக்குள் பெரியளவில் அன்றைக்கு இருந்தது. இன்றைக்கும் இருக்கின்றது. எங்கே என்னை ஒரு “மொக்கன்” என்று நினைத்து விடுவார்களோ என்ற அச்சமும் இருக்கிறது.

சரியோ, தவறோ, சாதகமானதோ, பாதகமானதோ, நல்லதோ, கெட்டதோ, எதுவாயினும் தமிழீழப் போராட்டத்தை உயிரோடு வைத்திருக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய யோசனைகளும் விவாதங்களும் மிக அவசியமாகத் தேவைப்படுகின்ற இன்றைய நிலையில் என்னுடைய தயக்கங்களை தள்ளி வைத்து விட்டு அந்த மூன்றாவது யோசனை பற்றியும் சொல்கிறேன்.

புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற குடியுரிமை பெற்றுள்ள தமிழ் இளைஞர்கள் அந்தந்த நாடுகளில் இராணுவப் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் அது.

இதைப் பற்றி சற்று விளக்கமாகச் சொல்லி விடுகிறேன். தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற சில நாடுகளில் கட்டாய இராணுவப் பயிற்சி என்பது நடைமுறையில் இருக்கின்றது. சில நாடுகளில் சுயவிருப்போடு குறிப்பிட்ட கால இராணுவப் பயிற்சி எடுப்பதற்கான வழிவகைகள் இருக்கின்றன. இளைஞர்கள் இராணுவப் பயிற்சி எடுத்திருப்பதை பெரும்பாலான நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.

உதாரணமாக ஜேர்மனியை எடுத்துக் கொள்வோம். ஜேர்மனியில் கட்டாய இராணுவப் பயிற்சி நடைமுறையில் இருக்கின்றது. பதினெட்டு வயது நிரம்பிய ஜேர்மனிய இளைஞர்கள் இராணுவப் பயிற்சி எடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் இராணுவப் பயிற்சி எடுக்க விரும்பாதவர்கள் அதற்கான காரணங்களை விளக்கி ஒரு மனு கொடுப்பதோடு, ஒரு சமூக சேவை சார்ந்த நிறுவனம் ஒன்றில் தொண்டாற்றி இராணுவப் பயிற்சி எடுப்பதிலிருந்து விலக்குப் பெறலாம்.

இராணுவப் பயிற்சி எடுப்பதலிருந்து விலக்குப் பெறுவதற்கான மனுக்களை குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞர்களுக்கு பலமுறை நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன். “என்னுடைய மதம் ஆயுதம்  ஏந்துவதை தடுக்கிறது, எனக்கு காந்தி மீதும் அகிம்சை மீதும் பெரும் பற்று இருக்கிறது” என்று பொய்களை அடுக்கியபடி அந்த மனுவை எழுத வேண்டும்.

இப்பொழுது அப்படியான மனு ஒன்றை எழுதித் தரும்படி வருகின்ற இளைஞர்களிடம் இராணுவப் பயிற்சி எடுப்பது பற்றி சிந்திக்கும்படி மெதுவாக கூறி வருகின்றேன்.

மீண்டும் விடயத்திற்கு வருகிறேன். உலகில் பல இனங்களும் மதங்களும் சில செயற்பாடுகளை ஒரு கடமையாக மேற்கொண்டு வருகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாம் எமது இளைஞர்கள் இராணுவப் பயிற்சி பெறுவதை ஒரு இனக் கடமையாக ஆக்குவோம். பதினெட்டு வயது நிரம்பிய தமிழ் இளைஞர்கள் தாம் வாழ்கின்ற நாடுகளில் ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் என்றாலும் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்பதை ஒரு சட்டமாக ஆக்குவோம்.

கட்டாய இராணுவப் பயிற்சி நடைமுறையில் உள்ள நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் மனுப் போட்டு சமூக சேவை செய்யப் போகாது இராணுவப் பயிற்சியை எடுக்கட்டும். சுய விருப்போடு படைப் பயிற்சி எடுக்கும் வசதி உள்ள நாடுகளில் தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து பயிற்சியைப் பெற்றுக் கொள்ளட்டும். இந்த வசதிகள் ஏதும் இல்லாத நாடுகளில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இணைந்து பயிற்சிகைளப் பெற்றுக் கொள்ளட்டும்.

தமிழீழத்தில் சிங்கள வெறியர்கள் நிகழ்த்திய பேரழிவை எமது இளைஞர்களுக்கு சொல்லி சொல்லி தமிழீழக் கனவோடு அவர்களை வளர்த்தெடுத்து இராணுவப் பயிற்சி பெற வைப்போம். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் உலகம் உள்ள தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் ஒன்று கூடி தமிழீழம் அமைக்கின்ற உறுதிமொழியை எடுப்போம்.

இப்பொழுது ஒரு அண்ணளவான கணக்கைப் பார்ப்போம். ஏறக்குறைய பத்து இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். இதில் ஒரு இலட்சம் பேர் இளைஞர்களாக இருப்பார்கள். இதில் ஒரு பத்தாயிரம் பேர் இராணுவப் பயிற்சி பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பத்து ஆண்டுக்குள் இராணுவப் பயிற்சி பெற்ற ஐம்பதினாயிரம் இளைஞர்களை உருவாக்க முடியும்.

இதில் பெரும்பாலானவர்கள் அடிப்படையான இராணுவப் பயிற்சிகளைப் பெற்றிருக்க, குறிப்பிடத்தக்க அளவினர் நிச்சயமாக அதையும் தாண்டி உயர் பயிற்சிகளும் பெற்று, அதிகாரிகள் தரத்திலான நிலையையும் அடைந்திருப்பார்கள். சிலர் கள அனுபங்களையும் பெற்றிருப்பார்கள். தரைப்படை, கடற்படை, வான்படை போன்றவற்றில் அனுபவம் வாய்ந்தவர்கள் உருவாகியிருப்பார்கள்.

சரி! இவர்களை கொண்டு சிறிலங்கா மீது படையெடுப்பதா அடுத்த திட்டம் என்று யாரும் அவசரப்பட்டு கேட்க வேண்டாம். பொருளாதார வளத்தோடு “இராணுவப் பயிற்சி பெற்ற பெரும் இளைஞர் படை” என்ற பலத்தையும் துணையாகக் கொண்டு சிறிலங்காவை எம்மோடு “பனிப் போருக்குள்” இழுத்து ஒரு “மிரட்டல் அரசியல்” நடத்துவதுதான் அடுத்த திட்டம்.

தமிழர்கள் தமிழீழக் கனவை கைவிடவில்லை என்பதும் இராணுவப் பயிற்சி பெற்ற பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் என்பதும், அதில் சில ஆயிரம் இளைஞர்களாவது தம்பாட்டில் திடிரென்று இலங்கைத் தீவில் நுழைந்து கிளர்ச்சியை ஆரம்பிக்கின்ற சாத்தியங்கள் இருக்கின்றன என்பதும் சிறிலங்கா அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் நெருக்கடியாகவும் அமையும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

ஈழத்தில் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் அதிகரித்தால் மீண்டும் ஒரு முறை ஈழப் போருக்கான சாத்தியங்கள் உடனடியாகவே உருவாகிவிடும் என்கின்ற அச்சம் சிறிலங்காவிற்கு என்றைக்கும் இருக்க வேண்டும். தாம் போரில் வென்று விட்டோம் என்ற மமதையில் இருக்கின்ற சிறிலங்காவை ஒரு தற்காப்பு நிலைக்குள் தள்ள வேண்டும். பேரம் பேசுகின்ற பலம் தமிழர்களுக்கு இருக்கின்றது என்பதை சிறிலங்கா அரசு நம்பும்படி செய்ய வேண்டும்.

தமிழர்களுக்கு ஓரளவாவது உரிமைகளை வழங்குவதற்கு சிறிலங்கா அரசை தூண்டக் கூடிய இப்படியான ஒரு மிரட்டல் அரசியலுக்கோ அல்லது தமிழீழத்தை விடுவிக்கும் போராட்டத்திற்கான ஒரு படிநிலைக்கோ இந்த மூன்றாவது யோசனை பயன்படும் என்று நம்புகின்றேன். கடந்த கட்டுரையில் கூறியது போன்று மூன்று யோசனைகளில் ஏதாவது ஒன்றை செயற்படுத்துவது என்றாலும் தமிழர்களுக்குள் இனப் பற்றும், ஓர்மமும், ஓற்றுமையும் மிக அவசியம். இல்லையென்றால் சராணாகதி அரசியல் செய்வதே எமக்கு உள்ள வழியாக மிஞ்சும்.

இந்த மூன்றாவது யோசனையின் சாதக பாதகங்கள் பற்றி நாம் தொடர்ந்து பேசவோம். சில நாட்கள் கழித்து இது பற்றி மீண்டும் எழுதுகிறேன்.

- வி.சபேசன் BA.Pol.Sci.

தமிழீழம் - ஆயதப் போராட்டம் - மூன்று யோசனைகள்
கடந்த மூன்று மாதங்களாக வெப்ஈழத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பத்திரிகைகளிலோ எதையும் நான் எழுதுவில்லை. என்னுடைய தளத்தையும் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு என் பாட்டுக்கு இருந்து விட்டேன்.

வெப்ஈழம் தளத்தை நான் ஆரம்பித்த பொழுது நிறையக் கனவுகளும் நோக்கங்களும் இருந்தன. இன்றைய யதார்த்தம் அந்தக் கனவுகளையும் நோக்கங்களையும் கடுமையாக அச்சுறுத்துகின்றன.

அரசியல் குறித்து எழுதுவதை நிறுத்தி விட்டு வேறு விடயங்களை எழுதுவோமா என்றும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வெளிநாட்டவர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்கு பயன்படும் என்பதனாலும், அரசியல் குறித்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரத்தை தரும் என்பதனாலும் இடையில் நிறுத்தியிருந்த அரசியற் படிப்பை தொடர்ந்து மேற்கொண்டு அதில் இளங்கலை பட்டம் வரை முடித்து விட்டு முதுகலைப் பட்டத்திற்கான படிப்பையும் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில்தான் இந்தக் கேள்வியும் எனக்குள் எழுகின்றது.

அரசியல் பற்றி மட்டும் என்று இல்லை, பகுத்தறிவு குறித்து எழுதுவதற்கான ஊக்கமும் இன்றைய நிலையில் என்னிடம் இல்லை. தமிழீழ விடுதலையே தமிழினத்திற்கு சமூக விடுதலையையும் சுயமரியாதையையும் பெற்றுக் கொடுக்கும் என்பதனால் பகுத்தறிவு பற்றி நம்பிக்கையோடு எழுதிக் கொண்டிருந்த என்னிடம் இன்றைக்கு பெரும் சோர்வே எஞ்சி நிற்கிறது.

முள்ளிவாய்க்காலில் எமது தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நேரத்திலும் நான் தைரியமாகவே இருந்தேன். நடக்கப் போகின்ற விபரீதங்களுக்கு என்னுடைய மனதை முற்கூட்டியே தயார்படுத்தியிருந்தேன்

போர் தொடங்கிய பொழுது விடுதலைப் புலிகள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எல்லோரைப் போன்றும் எனக்கும் இருந்தது. கிழக்கை சிங்களப் படைகள் கைப்பற்றும் என்பதை நான் எதிர்பார்த்திருந்தாலும் வன்னி முழுவதையும் சிங்களம் கைப்பற்றும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆயினும் சிங்களப் படைகள் பூநகரி வரை வந்த பிற்பாடு, அதுவரை நடந்த களப்போக்கையும் கவனித்து வன்னி முழுவதும் பறிபோகின்ற ஒரு நிலைக்கு என்னுடைய மனதை தயார்படுத்திக் கொண்டேன். அப்பொழுதும் விடுதலைப் போராட்டம் மரபுவழிப் போரில் இருந்து கரந்தடிப் போர் முறைக்குப் மாறப் போகிறது என்றே நம்பியிருந்தேன்.

விடுதலைப் புலிகளை „ஓயாத அலைகள் 5“இன் மூலம் சிறிலங்காப் படைகளை மீண்டும் விரட்டி அடிப்பார்கள் என்று அன்றைக்கு பலர் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மாறாக கரந்தடிப் போர் முறைக்கு தமிழீழப் போராட்டம் மாறப் போகிறது என்றும் அதற்கு எம்மை தயார்படுத்த வேண்டும் என்று எழுதத் தொடங்கியிருந்தேன்.

இதைப் பற்றி அப்பொழுது யாழ் களத்தில் நான் ஆரம்பித்திருந்த விவாதத்தை இதில் பார்க்கலாம்

ஒரு நேரத்தில் கரந்தடிப் போருக்குள் கூட தமிழீழப் போராட்டம் நுழையப் போவதில்லை என்பதும் மாறாக பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையும் புரிந்தது. இந்த நிலையில் வெளிநாட்டில் இயங்குகக் கூடிய தமிழீழத்தின் புறநிலை அரசை உருவாக்குகின்ற திட்டங்கள் பற்றி ஏப்ரல் மாத நடுப்பகுதியில் என்னுடைய வட்டத்திற்குள் விவாதிக்க ஆரம்பித்திருந்தேன்.

எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையில் நிகழ்காலத்தின் அவலங்கள் என்னைக் கலங்கச் செய்வது இல்லை.

மே 19இற்கு பின்பு போராட்டத்தை வழிநடத்த தேசியத் தலைவரும் இல்லை என்கின்ற கோரமான உண்மையும் முன்னே வந்து நின்றது. அந்த நிலையிலும் எனக்குள் நம்பிக்கை இருந்தது. தேசியத் தலைவர் தமிழினத்தை ஒன்றுபடுத்தி பலப்படுத்தி விடுதலைக்கான பாதையையும் காட்டி விட்டு சென்றிருக்கின்ற நிலையில் தமிழினம் அவர் இல்லாத நிலையிலும் அந்தப் பாதையில் தொடர்ந்து நடைபோடும் என்று நம்பியிருந்தேன்.

தேசியத் தலைவருக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யமுடியாத நிலை இன்றுவரை நிலவுகின்ற நிலையில் „வளரி“ இணையத் தொலைக்காட்சி வெளியிட்டிருந்த „என் இனமே என் சனமே“ என்கின்ற பாடற் காட்சியை என்னுடைய தளத்திலும் இணைத்து என் மனதிற்குள் அஞ்சலியை செலுத்தி விட்டு அடுத்தக் கட்டப் போராட்டம் பற்றி என்னுடைய தொடர்பு வட்டத்திற்குள் தீவிரமான உரையாடலை நடத்திக் கொண்டிருந்தேன்.

அன்றைய நாட்களில் நண்பர்கள் பலர் கலக்கத்தோடு என்னோடு தொலைபேசுவார்கள். அவர்களுக்கு தைரியம் சொல்லி தொலைபேசியில் ஒரு „வீர“உரையே நிகழ்த்துவேன். என்னுடன் பேசிய பிறகு சற்று ஆறுதலாக இருப்பதாக சொன்னவர்கள் உண்மையாகவே பலர் இருக்கிறார்கள்.

இப்படி தொலைபேசியில் பலருக்கு தைரியம் சொன்ன நான் இன்றைக்கு தமிழினத்தின் எதிர்காலம் பற்றி பெரும் அச்சத்தில் இருக்கிறேன். பேசாமல் அதி உத்தமர் மகிந்தவிடம் சரணாகதி அடைந்து விடலாமா என்ற சிந்தனை வேறு இடையிடையே வந்து தொலைக்கிறது.

முள்ளிவாய்க்காலிற்கு பிற்பாடு மூன்று யோசனைகள் பற்றி என்னுடைய நண்பர்களுடன் விவாதித்தேன். இந்த யோசனைகளில் இரண்டு யோசனைகள் புதியவைகள் அல்ல. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே சிலரால் முன்வைக்கப்பட்டவைதான்.

1. தமிழீழப் புறநிலை அரசை உருவாக்குதல்

இது பற்றிய ஒரு விவாதத்தை இங்கே காணலாம். (தமிழீழ அரசை நடத்தியவர்களால் வெளிநாட்டு அங்கீகாரத்தோடு ஒரு புறநிலை அரசை உருவாக்க முடியாத நிலை இருப்பதனால் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களினால் “நாடு கடந்த அரசு” ஒன்றை உருவாக்கும் ஒரு சிறப்பான திட்டம் கேபி மற்றும் உருத்திரகுமாரன் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது)

2. தமிழீழக் குடியேற்ற அரசை உருவாக்குதல்

இது பற்றிய விவாதத்தை இங்கே காணலாம்

மூன்றாவது யோசனை பற்றி சொல்வதற்கு முன்னர் தமிழீழப் போராட்டம் பற்றிய என்னுடைய நிலைப்பாட்டை சொல்லிவிடுகிறேன். ஆயுதப் போராட்டம் இல்லாமல் தமிழீழம் கிடைக்காது. இதை நான் உறுதியாக அடித்துச் சொல்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் பற்றி பேசுவதே மகா பாவமான செயலாக பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழீழமோ அல்லது ஒரு சுயாட்சியோ அல்லது ஒரளவு ஆதிகாரங்கள் கொண்ட மாகாணசபையோ எது வேண்டும் என்றாலும் ஆயுதப் போராட்டத்தை நடத்தாது சிங்கள அரசிடம் இருந்து அவற்றை பெற்று விட முடியாது.

சிலர் ராஜதந்திரப் போராட்டம் நடத்தி தமிழீழம் பெறுவது பற்றிப் பேசுகிறார்கள். அப்படி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஏதோ பேசி மக்களை ஆறுதல் படுத்த வேண்டுமே என்பதற்காகப் பேசுகிறார்கள்.

தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் மிகப் பலமாக நடந்த வேளையில் நாங்கள் இங்கே ராஜதந்திரப் போராட்டம் நடத்தவில்லை. அதனால் மிகப் பலமாக இருந்தும் கடைசியில் தோல்வியைத் தழுவினோம். இப்பொழுது ராஜதந்திரப் போராட்டம் நடத்துவது பற்றி நாம் பேசுகின்ற பொழுது தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான் ஏதோ ஒரு இலக்கை நாம் அடைய முடியும்.

ஆயுதப் போராட்டத்தை இன்றைய நிலையில் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம். ஆயுதப் போராட்டம் தமிழர்களை களைப்படையச் செய்து விட்டது என்பதும் உண்மையாக இருக்கட்டும். ஆனால் தேசிய உணர்வை தமது மனதுக்குள் தேக்கி வைத்திருக்கின்ற தமிழினம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தும் என்கின்ற அச்ச உணர்வாவது எதிரிகளிடம் இருக்கும்படி நாம் செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில்தான் அந்த மூன்றாவது யோசனை பற்றி சிலரிடம் உரையாடினேன். உண்மையில் இந்த யோசனை செயற்படுத்தப்பட்டிருந்தால் உலகம் அதிர்ச்சியோடு தமிழர்களைப் பார்த்திருக்கும் என்கின்ற நம்பிக்கை எனக்குள் இருக்கின்றது.

மூன்றாவது யோசைன பற்றி சொல்வதற்கு முன்னர் ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த மூன்று யோசனைகளில் ஏதாவது ஒன்றை செயற்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு தமிழர்களின் ஒற்றுமை என்பது மிக அவசியம். போட்டி பொறாமைகள் இல்லாத திறந்த விவாதங்கள் அவசியம். ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் வழங்குவதை நிறுத்தி அனைத்துத் தமிழர்களும் “விடுதலை” என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒன்றுபடுதல் அவசியம்.

“நாடு கடந்த அரசு” பற்றிய அறிவிப்பு வெளியானதும் சிறிலங்கா அரசும் சில வெளிநாடுகளும் அதை ஓரளவு அச்சத்தோடு பார்த்தன. இதை குழப்புவதற்கான வேலைத் திட்டங்களை போட்டன. இன்றைக்கு எமது எதிரிகளுக்கு வேலை வைக்காமல் எமது தமிழர்களே நாடு கடந்த அரசை பலவீனப்படுத்தும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பல வல்லரசுகளின் துணையோடு வந்த சிறிலங்காப் படைகளை வென்று, இந்தியப் படைகளை வென்று, வன்னியை மூன்று நாட்களில் கைப்பற்றி, ஆனையிறவை வீழ்த்தி, கடற்படை கண்டு, வான்படை உருவாக்கி உயர்ந்து நின்ற ஒரு இனம் இன்றைக்கு செய்கின்ற கோமாளித்தனங்கள் மிகவும் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன. தமிழீழப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எல்லாவற்றையும் சாதித்தது பிரபாகரன் என்ற தனிமனிதன் மட்டும்தானா? தமிழினத்திற்கு இதில் பங்கேதும் இல்லையா? தமிழினம் என்பது ஒரு குரங்குக் கூட்டமா?

தமிழர்களை ஒரு யூத இனம் போன்று நினைத்துக் கொண்டு கனவு காணாதே என்று நண்பர்கள் எச்சரித்த போதும் தமிழினத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. மனிதன் இசைவாக்கம் உள்ள ஒரு பிராணி. மற்ற இனங்களை விட இசைவாக்கம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்வதில் தமிழர்கள் சிறந்தவர்கள். ஈழத்தில் நடக்கின்ற இன்றைய சமரசங்கள் அனைத்தையும் இதன் அடிப்படையிலேயே பார்க்கின்றேன். இன்றைக்கு தம்மை தக்க வைத்தால்தான் நாளைய கிளர்ச்சியும் வரும்.

தமிழினத்தின் மீது வைத்திருக்கின்ற அதீத நம்பிக்கையில் நான் முன்வைத்த மூன்றாவது யோசனை பற்றி சொல்ல வேண்டும். இரண்டு நாட்களுக்குள் கட்டாயம் சொல்கிறேன்.

- வி.சபேசன் B.A.Pol.Sci.

இந்தியாவை மீறி தமிழீழம் அடைவதற்கான இரண்டு வழிகள்
லண்டனில் இருந்து வெளிவருகின்ற “ஒரு பேப்பர்” என்னும் பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் நிறைய இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். கட்டுரை எழுதி அனுப்பிய பிற்பாடுதான் „அவரும் இந்தியாவைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார், இவரும் இந்தியா சம்பந்தமாகத்தான் எழுதியிருக்கிறார்“ என்று சொல்வார்கள். அந்த அந்த நேரங்களில் பரப்பாக இருக்கின்ற விடயங்கள் பற்றி பலரும் எழுதுவது இயல்பான விடயம்தான்.

இப்படித்தான் „நாடு கடந்த அரசு“ பற்றிய அறிவிப்பு வந்தவுடன் ஒரு பேப்பரில் அதைப் பற்றி ஏழு கட்டுரைகள் வந்தன. என்னுடைய கட்டுரையும் அதற்குள் அடக்கம். அதே போன்று கடந்த முறை பல இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் ஒரு பேப்பரில் இடம் பெற்று விட்டன. இந்திய எதிர்ப்புப் பரப்புரையை ஒரு பேப்பர் முன்னின்று நடத்துவது போன்று ஒரு தோற்றத்தையும் இது ஏற்படுத்தியிருக்கலாம்.

இதில் அப்படி ஒன்றும் தவறும் இல்லை. இந்தியா பற்றிய தெளிவை தமிழ் மக்களுக்கு வழங்குவது ஊடகங்களின் கடமை. இந்தியாவின் காலில் விழுந்தால் தமிழ் மக்களின் உரிமை கிடைத்து விடும் என்று நம்புகின்ற அரசியல் அறிவிலிகள் பல மட்டங்களில் காணப்படுகின்ற நிலையில் இது மிகவும் தேவையானது.

„இந்தியா என்கின்ற வந்தி“ என்று நான் எழுதிய கட்டுரைக்கு பல தமிழ்நாட்டுத் தோழர்கள் வரவேற்பை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் சில ஈழத் தமிழர்களுக்கு ஒரு அச்சம் வந்து விட்டது. இப்படி தொடர்ந்து இந்தியாவை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தால்;, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சுற்றுலா செல்வதற்கு விசா பெறுவது சிக்கலாகி விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

இப்படியான மனிதர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. தினம் தினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றியும்;, இந்திய வல்லாதிக்கத்தின் பிடியில் சிக்குப்பட்டிருக்கும் பல இனங்களின் விடுதலை பற்றியும் பேசுகின்ற பொழுது தமது சுற்றுலா பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று எண்ணுகின்ற மனிதர்களும் எமக்குள் இருக்கின்றார்கள் என்பது வேதனையானது.

தமிழீழத்திற்கான ஆயதப் போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தவர்கள் சொன்ன காரணங்களில் ஒன்று „இந்தியாவை மீறி தமிழீழத்தை எம்மால் அடைய முடியாது“ என்பது. ஆகவே தமிழீழப் போராட்டத்தைக் கைவிட்டு இந்தியா அனுமதிக்கின்ற ஒரு அரைகுறைத் தீர்வோடு தமிழர்களை இணங்கிப் போகும்படி இவர்கள் அறிவுறித்தினார்கள்.

அரைகுறைத் தீர்வுகள் தமிழினத்திற்கு நீண்ட கால நோக்கில் பலத்த அழிவையே கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்த விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உறுதியாக நின்றார்கள். இப்பொழுதும் அப்பொழுதும் இந்தியாவை மீறி தமிழீழத்தை அமைப்பதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன.

இந்தியாவால் வெல்லப்பட முடியாத ஒரு படையணியை கட்டி எழுப்புவது என்பது அதில் ஒரு வழி. இதையே விடுதலைப் புலிகள் முயற்சித்தார்கள் என்று சொல்ல வேண்டும். இந்தியா தமிழீழத்தை அமைக்க விடாது என்பதிலும் ஒரு நேரத்தில் இந்தியாவோடு மோத வேண்டி வரும் என்பதில் தேசியத் தலைவர் தெளிவாகவே இருந்தார்.

முடிந்தவரை மோதலை தவிர்க்க முயல்வது என்பதன் அடிப்படையில் சில விட்டுக் கொடுப்புக்களையும் அவர் செய்தார். ஆயினும் 87இல் இந்திய ஈழப் போர் மூண்டது. கரந்தடிப் போர் முறையில் சண்டையிட்டபடி ராஜதந்திர வழிகளையும் கையாண்டு அந்த நெருக்கடியில் இருந்து தமிழீழப் போராட்டத்தை தேசியத் தலைவர் காப்பாற்றினார்.

அதன் பின்பு நடைபெற்ற ராஜீவ்காந்தி அழித்தொழிப்பு நடவடிக்கையின் பயனாக இந்தியா ஒரு பத்தாண்டு காலம் தமிழீழப் போராட்டத்தில் தலையிடாமல் சற்றுத் தள்ளியே நின்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழீழப் விடுதலைப் புலிகளின் படைபலத்தை தேசியத் தலைவர் அதிகரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா மீண்டும் தலையிட்டு தமிழீழப் போராட்டத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கத் தொடங்கியது. ஓயாத அலைகள் மூன்றில் இந்தியாவின் தலையீட்டை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியாவோடு முடிந்தளவு நட்பாக போவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தனர். இந்தியாவால் வெல்லப்பட முடியாத பலத்தை அடையும் வரை இந்தியாவுடனான மோதலை தவிர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் அனைத்து வழிகளையும் கையாண்டனர். வெல்லப்பட முடியாத பலம் என்கின்ற இலக்கை அடைந்து விட்டால் இந்தியா வேறு வழியின்றி தமிழீழத்தை சகித்துக் கொள்ளும் என்பது விடுதலைப் புலிகளின் கணிப்பாக இருந்திருக்கக் கூடும்

இன்றைக்கு இந்தியா சொந்தம் கொண்டாடும் காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் வைத்திருக்கிறது. ஒரு பகுதியை சீனா வைத்திருக்கிறது. இந்தியா வாயை மூடிக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவாவது இந்தியாவை விட பலமானது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா அளவிற்கு பலமானது அல்ல. அப்படியிருந்தும் பாகிஸ்தானுடனான போரில் தனக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை கணக்குப் போட்டு விட்டு இந்தியா வாயை மூடிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தான் காஸ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நின்று விடவில்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு போராளிகளை பயிற்சி கொடுத்து அனுப்புகிறது. மும்பை போன்ற இடங்களில் நடத்தப்படுகின்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால் இந்தியா பாகிஸ்தானோடு போருக்குப் போகவில்லை.

இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது.

இதைப் பற்றி பின்பு பார்ப்போம். இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். வெல்லுவது கடினம் என்றாலோ, போரில் தனக்கு ஈடு செய்ய முடியாத அழிவு வரும் என்றாலோ எதிரியை சகித்துக் கொண்டு இந்தியா பேசாது இருந்து விடும். தமிழீழ தேசத்தையும் வெல்லப்பட முடியாத ஒரு நாடாக விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றமும், தமிழீழப் போராட்டத்தை இல்லாமல் செய்வதில் இந்தியா காட்டிய உறுதியும் எமது இலக்கை நாம் அடைய முடியாதபடி செய்து விட்டது.

இந்தியாவை அனுசரித்தும் சமாளித்தும் குறுக்கால் ஓடி தமிழீழத்தை உருவாக்கும் எமது முயற்சி வெற்றியை தரவில்லை. மிகப் பெரிய அழிவுகளைத்தான் எமக்கு தந்திருக்கின்றது. இப்பொழுது மீண்டும் சிலர் இந்தியாவின் மனதை மாற்ற முடியும் என்று புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வெளியுறவு பற்றி வகுப்பெடுக்க முனைகின்றார்கள்.

சீனா சிறிலங்காவை பயன்படுத்தி இந்தியாவின் தென்பகுதியை அச்சுறுத்துமாம். ஆகவே இந்தியா தமிழீழத்தை ஆதரிக்க வேண்டுமாம் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் எழுதியும் கூறியும் வருகிறார்கள். இதனால் இந்தியாவின் மனது மாறி விடும் என்று நம்புகின்றார்கள். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காத ஒன்றை தாம் சிந்தித்து விட்டதாகவும் இவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவினை ஆள்கின்ற ஆரிய பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையை பற்றி சிந்திக்காது, இந்தியாவை தமிழீழத்திற்கு ஆதரவாக மாற்றலாம் என்று நம்புவது மிகப் பெரும் ஏமாற்றத்தையே மீண்டும் கொடுக்கும்.

இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி தமிழீழத்தை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது இல்லை. அவர்கள் இந்தியா பற்றி தெளிவாகவே இருந்தார்கள். கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி பலர் பலவிதமாகப் பேசுவார்கள். காங்கிரஸ் கட்சி தோற்று பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியா தம்மை ஆதரிக்கும் என்று விடுதலைப் புலிகள் நம்பியதாக சிலர் கூறுகிறார்கள். இது மிகப் பெரிய தவறான கூற்று. விடுதலைப் புலிகள் ஒருபோதும் அப்படி நம்பியிருக்கவில்லை.

இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டில் பெரிதான மாற்றம் எதுவும் வந்துவிடப் போவது இல்லை என்பது விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரியும். ஆயினும் விடுதலைப் புலிகள் காங்கிரஸ் கட்சி தோற்பதை விரும்பினார்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிடுவது போன்று அறைகூவலும் விடுத்தார்கள். ஆனால் இதற்கான காரணம் வேறு. காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களைப் பெறுவதன் மூலம் ஒரு வலுவற்ற ஆட்சி இந்தியாவில் உருவாகும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்தியாவில் வலுவற்ற ஆட்சி உருவானால் அப்பொழுது ஏற்படும் குழப்பங்களை சமாளிப்பதற்கே இந்தியாவிற்கு நேரம் போதுமாக இருக்கும். இந்த நிலையில் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஈழப் பிரச்சனையில் தலையிடுவதற்கு துணியும் என்றும் அவர்கள் கணித்திருந்தார்கள். மேற்குலக நாடுகள் தலையிடுவதன் மூலம் அழிவுகளை தடுப்பதோடு ஒரு தற்காலிக ஓய்வையும் அமைதியையும் உருவாக்க முடியும் என்று விடுதலைப் புலிகள் நினைத்தார்கள். ஆனால் முன்பு இருந்ததை விட இந்;தியாவில் ஒரு வலுவான ஆட்சியே உருவானது. இதனால் மேற்குலக நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்னடித்தன.

மொத்தத்தில் இந்தியாவை அருகில் வைத்துக் கொண்டே அதைக் கையாள்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனைத் தரவில்லை. எமது முதலாவது  வழி முறை தோல்வியை தழுவி விட்டது. பலத்த அழிவையும் தந்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ளாது மீண்டும் இந்தியாவை நம்பிக் கொண்டு யாராவது புறப்பட்டால் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தான் தெரிவிக்க முடியும்.

இப்பொழுது இரண்டாவது வழி பற்றி நாம் பேச வேண்டும். இரண்டாவது வழி என்பது இந்தியாவை இல்லாமல் செய்வதுதான். ஏற்கனவே சொன்னது போன்று இந்தியா தமிழீழத்திற்குப் பக்கத்தில் இருக்கக் கூடாது. தமிழீழ தேசத்திற்கு இன்றைக்கு இருப்பது இரண்டு எதிரிகள்தான். ஒன்று சிறிலங்கா மற்றது இந்தியா. இந்தியாவை வெற்றி கொள்ளாது எம்மால் சிறிலங்காவை வெற்றி கொள்ள முடியாது.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல நாடுகள் விருப்பத்தோடும் கட்டாயத்தோடும் இணைக்கப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் இந்தியா. தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து வடபகுதியில் உள்ள காஸ்மீர் வரை விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். ஒரிசாவில் இருந்து புதுடில்லிக்குப் போவதை “இந்தியாவிற்கு போகிறோம்” என்று சொல்கின்ற மக்கள் வாழ்கின்ற நிலப்பரப்புதான் இந்தியா.

பீகாரில் இருந்து ஆந்திரா வரை மாவோயிச தீவிரவாதிகளின் ஆதிக்கம் வேறு இருக்கின்றது. இந்தியாத் துணைக் கண்டத்தின் பல காடுகளும் கிராமங்களும் இவர்களின் செல்வாக்கில்தான் இருக்கின்றன. சிறிலங்காப் படைகளின் முற்றுகை இறுக்கமடைந்திருந்த நிலையில் தேசியத் தலைவர் தப்பிச் செல்லக் கூடிய இடமாக மாவோயிச தீவிரவாதிகளின் காடுகள் சிலரால் சுட்டிக்காட்ப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கின்றார்கள்.

ஆயினும் விடுதலைப் புலிகள் இந்தியாவில் உள்ள போராளி இயக்கங்களோடு சரியான முறையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. அவர்களின் காடுகளில் தமது தளங்களை உருவாக்கியருக்கவில்லை. இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், இந்தியாவை அதிகம் கோபப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையில் இவைகளை தவிர்த்து விட்டார்கள்.

இப்பொழுது நாம் விடுதலைப் புலிகள் செய்யத் தவறியவைகள் பற்றியும் பேச வேண்டும். இந்தியாவில் விடுதலைக்குப் போராடும் மக்களோடு இணைந்து வேலை செய்வது பற்றி நாம் விவாதிக்க வேண்டும். தமிழீழ தாகத்தை கைவிடாது விடுதலைக்கான வழிகள் பற்றி தொடர்ந்து பேசுவோம்.

-வி.சபேசன்

இந்தியா என்கின்ற வாந்தி
ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் மா. செங்குட்டுவன் வந்திருந்தார். கவிக்கொண்டல் செங்குட்டவன் என்று அவரை அழைப்பார்கள். திமுகவின் ஏதோ ஒரு இலக்கியப் பிரிவில் அவர் இருப்பதாக ஞாபகம். அவர் யேர்மனியோடு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று விட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையில் கவிக்கொண்டல் செங்குட்டுவன் இலக்கியப் பயணத்தை முடித்திக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் என்று பெட்டிச் செய்தியும் வந்திருந்தது.

திமுகவில் ஏதோ ஒரு மட்டத்தில் ஓரளவு முக்கியமானவராக அவர் இருக்கின்றார் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். யேர்மனியில் உள்ள அன்னை பூபதி படிப்பகத்திற்கான பெருந்தொகை நூல்களையும் அவர் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி உதவியிருக்கின்றார்.

இவர் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு வந்த போது கண்ணதாசனின் மகள் விசாலியும் வந்திருந்தார். அவரை வைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விசாலி மேடையில் நின்றபடி ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்ற போதெல்லாம் „சிலோன் தமிழர்கள்“ என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார்.

எனக்கு அருகில் உட்காந்திருந்த கவிஞர் செங்குட்டுவனிடம் மெதுவாகச் சொன்னேன் „எங்களை சிலோன் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் தமிழீழத் தமிழர்கள், இப்படி அழைப்பதற்கு விசாலிக்கு தயக்கமாக இருந்தால் ஆகக் குறைந்தது ஈழத் தமிழர்கள் என்றாவது அழைக்கச் சொல்லுங்கள்“ என்றேன். அவரும் தன்னுடைய உரை வருகின்ற பொழுது இதைச் சுட்டிக் காட்டுகிறேன் என்று சொன்னார்.

அவருடைய உரை தொடங்கியது. நான் குறிப்பிட்ட விடயத்திற்கும் வந்தார். „தங்களை சிலோன் தமிழர்கள் என்று அழைக்க வேண்டாம் என்று எனக்கு இங்கே சொல்லப்பட்டது. அது மிகச் சரியானது. நீங்கள் தமிழீழத் தமிழர்கள், உங்களை ஈழத் தமிழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும். அதே வேளை இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். நீங்களும் எங்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைக்காதீர்கள். நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள், எங்கள் நாடு தமிழ்நாடு“ இப்படி அவர் சொன்னார்.

தந்தை பெரியார் எழுப்பிய தனித் தமிழ்நாட்டுச் சிந்தனை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு அந்த மனிதர் சாட்சியாக நின்றார்.

அவர் அதைக் கூறியதன் பிற்பாடு நான் இன்றுவரை தமிழ்நாட்டுத் தமிழர்களை „தமிழ்நாட்டுத் தமிழர்கள்“ என்றுதான் அழைத்து வருகின்றேன். தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற தமிழர்களைக் காணுகின்ற பொழுது „நீங்கள் தமிழ்நாடா?“ என்றுதான் கேட்பேன். „தமிழ்நாட்டில் எந்த இடம்?“ என்று கேட்பேன். “இந்தியா” என்றும் மறந்தும் உச்சரிப்பது இல்லை.

கவிஞர் செங்குட்டுவன் கூறினார் என்பதற்காக மட்டும் என்று இல்லை. „இந்தியா“ என்பது என்ன என்கின்ற தெளிவான புரிதலும் எனக்கு இருப்பது இதற்கு முக்கியமான ஒரு காரணம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் ஒரு எழுத்தாள நண்பரை சந்தித்தேன். „இந்தியன் என்று சொல்லடா! இமயமாக நில்லடா!“ என்ற கோசத்தை தன்னுடைய பெயரோடு இணைத்திருந்தார்.

நாங்கள் இணையத்தில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கடுமையாக வைக்கின்ற பொழுது எம்மை எதிர்த்து வாதிடுவார். இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கண்டால் பொங்கிக் கொண்டு வந்து விடுவார். அவர் யார் என்று தெரியாமலேயே அவர் மீது உச்சக்கட்ட வெறுப்பு எனக்குள் படர்ந்திருந்தது.

ஆனால் வேறு இணையங்களில் தமிழீழத்திற்கு ஆதரவாகவும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் அவர் எழுதிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். எனக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது.

அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த பொழுது இதை நேரடியாகவே கேட்டேன். „திராவிடக் கொள்கைகளை ஆதரிக்கின்ற நீங்கள் எப்படி இந்தியத் தேசியத்தை ஆதரிக்கின்றீர்கள்“ என்ற என்னுடைய கேள்வியைக் கேட்டு அவர் சிரித்தார்.

சிரித்துக் கொண்டே „உண்மையில் எனக்கு இந்தியத் தேசியம் என்றாலே வாந்திதான் வரும். நான் இந்திய தேசியத்தை வெறுப்பவன், ஆனால் விடுதலைப் புலிகள் இந்தியாவோடு நட்பை நாடி நின்ற சூழலில் உங்கபை; போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறிக் கொண்டு திரிந்தது எனக்கு சரியான ராஜதந்திர நகர்வாகப் படவில்லை, அதனாற்தான் வேண்டுமென்றே இந்தியா தேசியத்தை ஆதரிப்பது போன்று நடித்து உங்களோடு முரண்பட்டேன்“ என்றார்.

அந்த நேரம் உண்மையாகவே விடுதலைப் புலிகள் இந்தியாவின் நட்பை நாடித்தான் நின்றார்கள். இந்தியாவை „தந்தையர் நாடு“ என்று வேறு சொன்னார்கள். கடைசியில் தந்தையர் நாடு தமிழர்களின் உச்சந் தலையில் ஆணி அறைந்து விட்டது. இது ஒருபுறம் இருக்கட்டும். மீண்டும் அந்த எழுத்தாள நண்பரிடம் வருவோம்.

„இந்தியா“ என்ற சொல்லைக் கேட்டால் எனக்கு எப்படியான உணர்வு ஏற்படும் என்பதை விளக்குவதற்கு சொல்லைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன விதம் மிகவும் பிடித்துப் போய் விட்டது.

„வாந்தி வரும்“ இதை விட அழகாக அந்த உணர்வைச் சொல்ல முடியாது. ஈழத் தமிழன் தன்னை „சிறிலங்கன்“ என்று சொல்கின்ற பொழுதும் எனக்கு வாந்தி வரும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் யாராவது „இந்தியா“ என்று பிதற்றினாலும் வாந்தி வரும். இதையே மாறி ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை „இந்தியர்கள்“ என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மை „சிலோன்காரர்கள்“ என்றும் அழைக்கின்ற போதும் வாந்தி வரும்.

அந்த எழுத்தாள நண்பரின் பெயரை இங்கே நான் குறிப்பிடவில்லை. இப்பொழுது அவர் தமிழ்நாட்டின் வெகுசன ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். பலர் கவனிக்கும் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வருகின்றார். அவருடைய „இந்திய வாந்தி நிலைப்பாடு“ பற்றி இப்பொழுது வெளிப்படையாகப் பேசுவாரா என்று தெரியவில்லை. இன்னும் வளர்ந்த பிற்பாடு பேசக் கூடும்.

பலரைப் போன்று அவரும் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு விடிவுக்காக காத்திருக்கிறார் என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற விடயம்.

இப்படியான உணர்வுகள் இருப்பது இந்திய அதிகார வர்க்கத்திற்கு தெரியாமல் இல்லை. அது தன்னுடைய பங்கிற்கு „தேச பக்தியை“ ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகளில், புத்தகங்களில், தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் என்று எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தேசபக்தியை அது விளம்பரம் செய்கின்றது.

அண்மையில் „பசங்க“ என்று ஒரு படம் பார்த்தேன். சிறுவர்கள் கதை நாயகர்களாக நடித்த ஒரு நல்ல படம். ஆனால் படம் முழுவதும் ஒரே இந்திய தேசிய மயம். இந்தியக் கொடிகள், ராஜீவ்காந்தி படங்கள், சிறுவர்களின் சண்டையை நிறுத்துவதற்கு ஜனகணமண என்கின்ற உச்சக்கட்ட நகைச்சுவை என படம் முழுவதும் இந்திய வாந்தி மயம். படம் முடிவதற்குள் எனக்கு அடிக்கடி குமட்டி விட்டது.

„பசங்க“, „உன்னைப் போல் ஒருவன்“ என்று இந்திய அதிகார வர்க்கம் தன்னுடைய பரப்புரையில் திறைமையாகத்தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழ் தேசிய சிந்தனை வளரக் கூடிய நேரத்தில் இப்படியான திரைப்படங்கள் தொடர்ந்து வருவதை கவனித்துப் பார்க்க வேண்டும்.

திரைப்படங்கள் என்று இல்லை. ஏற்கனவே சொன்னது போன்று அனைத்து வழிகளிலும் இந்திய அதிகார வர்க்கம் தன்னுடைய வாந்தியை மக்கள் மீது எடுக்கிறது. இதை சுத்தம் செய்ய யாராவது புறப்பட்டால் „தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்“ உள்ளே செல்ல வேண்டியதுதான்.

சிறிலங்காவின் பயங்கரவாதச் சட்டத்திற்கு இணையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம். ஒருவரை விசாரணை இன்றியே ஓராண்டு காலம் உள்ளே வைத்திருக்கலாம். ஆனால் இதுவரை யாரும் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு துணியவில்லை. அப்படிச் செல்பவர்களை „தேசத் துரோகிகளாக“ இந்திய அதிகார வர்க்கம் முத்திரை குத்தி விடும்.

ஆனால் இவைகளை எல்லாம் மீறி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் விடுதலையை நாடி நிற்கின்ற மக்கள் இருக்கின்றார்கள்.

வழமையாக நான் எழுதுவது போன்று இல்லாமல் என்னுடைய சில அனுபவங்களையும் கருத்துக்களையும் சேர்த்து இங்கே எழுதியிருப்பதற்கு காரணம் இருக்கின்றது.

„இந்தியா எமக்குப் பக்கத்தில் இருக்கின்ற வரை தமிழீழத்தை எம்மால் பெற முடியாது“ என்று சிலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. உலகத்திலே இருக்கின்ற மிகப் பெரிய உண்மைகளில் இதுவும் ஒன்று. இந்தியா எமக்கு அருகில் இருக்கின்ற வரை எம்மால் தமிழீழத்தை அமைக்க முடியாது. இந்தியாவோடு நாம் கெஞ்சினாலும் சரி, கொஞ்சினாலும் சரி, அது தமிழீழத்தை அமைக்க விடாது.

ஆகவே இந்தியா எமக்கு அருகில் இருக்கக் கூடாது. தமிழீழம் அமைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு யாராவது இருந்தால் அவர்கள் இதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் இருந்து இந்தியாவை எப்படி பெயர்த்து எடுக்கலாம் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதை நோக்கி எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்த நலன் சார்ந்து எமது நட்புக் கூட்டணியை உருவாக்க வேண்டும்.

இதைப் பற்றி ஆழமாக விரிவாக எழுத வேண்டும். ஒரு வரைவை உருவாக்க வேண்டும். அப்படி எழுதுவதற்கான முன்னுரையின் ஒரு சிறிய பகுpதியே மேலே எழுதியிருப்பது. இத்தனை இழப்புகளுக்குப் பின்னரும் தோல்விகளுக்குப் பின்னரும் தமிழீழம் அமைவதற்காக மிச்சம் இருக்கின்ற வழிகளைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுவோம்.

- வி.சபேசன்

எதிரி.கொம் (ethiri.com) இணையத்தளத்திற்கு நான் வழங்கிய பேட்டி
நீங்கள் ஒரு அரசியல் ஆய்வாளராக திகழ்கின்றீர்கள். இன்றைய நிலையில் ஆய்வாளர்கள் மீது பரவலாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவர்கள் களநிலவரங்கள் பற்றி பொய்யான தகவல்களை தந்தார்கள், பிழையான எதிர்வுகூறல்களை செய்தார்கள் என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஆய்வாளர்கள் மீது குற்றம் சொல்வது தவறு. ஆய்வாளர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரிந்துதான் இருந்தது. எனக்கு தெரிந்து பலர் வன்னிக்கு தொடர்பு கொண்டு பேசிவிட்டுத்தான் எழுதுவார்கள். அவர்கள் சொன்னதை அப்படியே எழுதியவர்களும் இருக்கின்றார்கள். நீங்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் கடைசி வரைக்கும் நாம் திருப்பி அடிப்போம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று எழுத முடியாது. அப்படி எழுதியிருந்தால் அது துரோகமாக பார்க்கப்பட்டிருக்கும்.

அதே வேளை விடுதலைப் புலிகளின் தோல்விகளை “நிகழ்ச்சி நிரல், பொறி, தீர்க்க தரிசனம்” என்றெல்லாம் சிலர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள் என்பது உண்மைதான். அது இப்பொழுதும் தொடர்வது வருந்தத் தக்கது.

மக்களை விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள் என்றும், அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் புலிகளை காப்பதற்காக போரை நிறுத்தச் சொல்லி குரல் கொடுத்ததனால்தான் சர்வதேசம் தமிழ் மக்களை கண்டு கொள்ளவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஊர்வலங்களில் புலிக் கொடி பயன்படுத்துவது பற்றியும் விமர்சிக்கின்றார்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

அனைத்தும் பலத்தின் அடிப்படையில் நடப்பவைதான். நாம் பலமாக இருந்த பொழுது இணைத்தலைமை நாட்டின் பிரதிநிதிகள் வந்து புலிக்கொடியின் கீழ் அமர்ந்துதான் பேசினார்கள். அப்பொழுது அவர்களுக்கு புலிக்கொடி உறுத்தவில்லை.. நாம் பலவீனமான பொழுது புலிக்கொடி இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யுங்கள் என்று ஆலோசனை தருகிறார்கள். அவர்கள் எமது பக்கம் நிற்க விரும்பவில்லை என்றால் ஆயிரம் காரணங்களை சொல்வார்கள். உன்னுடைய தலை முடி சரியில்லை, கண் முழி நன்றாக இல்லை என்றெல்லாம் காரணம் சொன்னாலும் சொல்வார்கள். அவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டு, அதற்கு சாட்டு தேடுகின்றார்கள் என்பதுதான் உண்மை.

மக்களை விடுவிக்கச் சொல்லித்தான் நாம் அன்று போரடினோம்.. பாதுகாப்பு வலயங்கள் என்னும் மரணப் பொறியில் இருந்து மக்களை விடுவித்து அவர்களின் சொந்த இடங்களுக்கு போக விட வேண்டும் என்றுதான் நாம் கேட்டோம். ஆனால் சிறிலங்கா அரசு தடுப்பு முகாம்களை அமைத்து விட்டு அங்கே மக்களை வரச் சொன்னது. தடுப்பு முகாம்கள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று நாம் பார்க்கின்றோம். இது அன்றைக்கே தெரிந்த விடயம்தான். இந்த நிலையில் “மக்களை அனுப்புங்கள்” என்று நாம் எப்படி விடுதலைப் புலிகளைக் கோர முடியும்? இப்படியான தடுப்பு முகாம்களுக்கு மக்களை அனுப்பும்படி கோரியவர்களையும், இன்றைக்கு இந்த தடுப்புமுகாம்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களையும் மனிதநேயமற்றவர்கள் என்றுதான் நான் சொல்வேன். மனிதநேயம் உள்ளவர்கள் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு விடும்படிதான் கோருவார்கள்.

இன்றைய விடுதலை புலிகளின் அரசியல் இராணுவ வீழ்ச்சி எவ்வகையில் நிகழ்ந்தேறியது ..?

விடுதலைப் புலிகளுக்கு அரசியல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நான் கருதவில்லை. விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள அரசியல் வீச்சு பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அதுதான் தமிழீழத்தையும் விடிவிக்கும். விடுதலைப் புலிகள் தமிழர்களால் ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்று நிறுவி விட்டார்கள். இந்தச் செய்தி தொடர்ந்து தமிழர்களின் மனங்களில் இருக்கும்.

தற்போது விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இராணுவ ரீதியான வீழ்ச்சிக்கான காரணங்கள் நிறைய உண்டு. இதைப் பற்றி ஓரிரு வரிகளில் சொல்லி விட முடியாது.

பெரியாரை நீங்கள் போற்றுவதற்கு என்ன காரணம்?

தமிழர்களுக்கு சுயமாக சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார். மக்களின் விடுதலைதான் அவருடைய போராட்டமாக இருந்தது. மக்களின் விடுதலைக்கு எதிராக எது நின்றாலும் அவர் அதை எதிர்த்தார். மக்களின் விடுதலைக்கு எதிராக நின்ற மதம், கடவுள், புராணங்கள், வேதங்கள் என்று அனைத்தையுமே அவர் எதிர்த்துப் போராடினார். தன்னுடைய அடிப்படைக் கொள்கையில் சமரசம் செய்யாத ஒரு தலைவர் அவர். இன்றைக்கே சொல்வதற்கு தயங்குகின்ற கருத்துகளை அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சாதரணமாக சொன்னவர். இறக்கும் வரை தன்னுடைய கொள்கைகளுக்காக ஓய்வின்றிப் போராடினார்.

பெரியாரியத்தை ஆதரிக்கும் நீங்கள் எதற்காக சைவ மதத்தை கொச்சை படுத்து விதமாக உங்கள் செயல் நெறி அமைந்தது ..?

நான் எதையும் கொச்சைப்படுத்துவது இல்லை. எது கொச்சையாக இருக்கிறதோ அதைச் சுட்டிக்காட்டுகிறேன். சைவத்தை உண்மையில் கொச்சைப்படுத்துபவர்கள் இந்துக்கள்தான். சைவமும் தமிழும் ஒன்று என்பார்கள். பின்பு சைவக் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்து கொச்சைப்படுத்துவார்கள். இன்றுவரை சிதம்பரத்தில் தேவாரம் பாட விடாது கொச்சைப்படுத்துகிறார்கள். 63 நாயன்மார்கள் என்று சொல்லிவிட்டு நந்தனாரின் சிலையை சிதம்பரத்தில் இருந்து பெயர்த்தெடுத்து காற்படியாக செய்து கொச்சைப்படுத்துவார்கள். இப்படி கடவுளை நம்புவதாக சொல்கின்ற இவர்கள்தான் சைவ சமயத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். மதங்களில் உள்ள அழுக்குகளை நான் சுட்டிக் காட்டுகிறேன். அவ்வளவுதான்.

கருணாநிதியை இன்று வரை தாங்கள் ஆதரிப்பதாக சொல்லப்படுகிறது அப்படி ஆனால் எதற்காக அவரை ஆதாரிகின்றீர்கள் ..?

கலைஞரை மிகக் கடுமையாக எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். ஈழத் தமிழர்கள் பலரை அவரை போற்றிப் புகழ்பாடிக் கொண்டிருந்த காலங்களிலேயே கலைஞரை எதிர்த்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அவர் மீதான எதிர்ப்பைக் கைவிட்டு விட்டேன். அவரை ஒருமுறை எதிர்ப்பதும், தமிழ்செல்வனுக்கு கவிதை எழுதியவும் அவரை ஆதரிப்பதும், பின்பு திட்டித் தீர்ப்பதும், தமிழீழத்தை ஆதரிக்கின்றேன் என்று சொன்னதற்காக ஜெயலலிதாவை ஈழத் தாய் என்பதும்… இப்படியாகத்தான் எங்கள் நிலைப்பாடுகள் இருக்கின்றன. தமிழீழத்தை ஆதரித்த ஜெயலலிதா இன்றைக்கு எங்கே? தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ள மக்களைப் பற்றி இதுவரை அவர் ஏன் குரல் கொடுக்கவில்லை? இதில் கலைஞரை மட்டும் எதிர்த்துக் கொண்டிருப்பதால் எந்த பலனும் ஏற்படப் போவது இல்லை. அவருக்கு எதிராக அரசியல் செய்பவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றார்கள். கலைஞர் இருக்கும் வரை அவரை எதுவும் செய்ய முடியாது. இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் அமரும் பலத்தோடு இருக்கின்ற அரசியல்வாதிகளில் கலைஞர் ஓரளவாவது பரவாயில்லை என்று நினைக்கின்றேன். இனிமேல் ராஜதந்திரப் போர் நடத்தப் போகிறோம் என்று நாம் சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சரை எதிர்ப்பது என்ன வகையான ராஜதந்திரமாக இருக்க முடியும்?

தாழ்த்தபட்ட சமூகத்தினர் தான் பகுத்தறிவு என்ற கருத்தை எடுத்து உயர்த்தப்பட்ட சமூகத்தினரை உதைப்பதாக சிலர் கூறுகிறார்களே இது பற்றிய உங்கள் பார்வை என்ன ..?

இது முட்டாள்தனமான கூற்று. தமிழர்கள்தான் இனவிடுதலை என்ற கருத்தை எடுத்துக் கொண்டு சிங்களவர்களை தாக்குகின்றார்கள் என்று சொல்வதைப் போன்று இது இருக்கின்றது.

படைப்பில் சாதி இல்லை என கூறுபவர்கள் ஏன் நியத்தில் சாதியத்தை பாக்கின்றார்கள் அப்படி பார்ப்பவர்கள் எவ்வாறு ஒரு சமுக சீர் திருத்த வாதியாக இருக்க முடியும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் ..?

எந்தப் படைப்பை நீங்கள் கேட்கிறீர்கள்? கடவுளின் படைப்புப் பற்றிக் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். மனிதன் சாதியைப் படைத்தான். மனிதன் இன்றும் நியத்தில் சாதியைக் கடைப்பிடிக்கின்றான். சாதிகள் இருக்கின்றன. இதுதான் யதார்த்தம். இந்த சாதிகள் ஒழிய வேண்டும் என்பது எங்களின் போராட்டம். சாதிகளை எதிர்க்கும் இந்தப் போராட்டத்தில் சாதியத்தை இனம் காண வேண்டிய தேவையும் இருக்கின்றது. இதை சாதி பார்ப்பதாக சொல்ல முடியாது. வெளியில் சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் சாதியை வைத்திருப்பார்கள். சாதியத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவற்றை நாம் இனம் காட்டுகிறோம். குறிப்பிட்ட செயற்பாடுகள் எதன் அடிப்படையில் வருகின்றன என்பதை விளக்குகின்றோம். சாதியம் இன்று பல வடிவங்களில் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதே ஒரு போராட்டம்தான். “நான் சாதி பார்ப்பது இல்லை” என்று ஒருவன் சொன்னால் அவன் அங்கே தான் ஒரு உயர்சாதியினன் என்பதை வெளிப்படுத்துகிறான். இதில் கூட சாதியம் இருக்கிறது. அதை விட எதுவரை சாதி பார்ப்பது இல்லை என்பதற்கும் அவன் ஒரு எல்லை வைத்திருப்பான். இவைகளை இனம்கண்டு நாம் போராட வேண்டும். சாதி பார்ப்பது வேறு. சாதியத்தை இனம் காண்பதும் இனம் காட்டுவதும் வேறு.

நீங்கள் பெண் படைப்பாளிகளையும் வளர்ந்து வரும் புதியவர்களையும் பரவலாக முறை கேடாக விமர்சனம் செய்து வந்துளீர்கள் ஏன் அவ்வாறு நடந்தீர்கள் ..?

ஒருவரின் படைப்பையும், படைப்பின் பின்னணிகளையும், படைப்பு உருவானதன் அடிப்படைக் காரணங்களையும் விமர்சனம் செய்வது முறைகேடானது இல்லை. படைப்பு சாராது தனிப்பட்டரீதியில் விமர்சிப்பதுதான் முறைகேடானது. அப்படியான விமர்சனங்களை நான் செய்வது இல்லை. பெண் படைப்பாளிகள் பலர் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறேன். அப்படி அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பதற்கு ஆணாதிக்க சமூகமே காரணம் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். பரந்த தேடல்களையும் வாசிப்புக்களையும் செய்யும்படி அறைகூவல் விடுத்திருக்கிறேன். பெண் படைப்பாளிகள் பரந்த தேடல்களை செய்வதற்கு நாம் (ஆணாதிக்க சமூகம்) அனுமதிப்பது இல்லை. இந்தத் தடையை அவர்கள் உடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விமர்சனத்தின் அடிப்படை. இந்த விமர்சனத்தைக் கூட ஒரே ஒரு முறைதான் செய்திருக்கிறேன். நீங்கள் அதை ஞாபகம் வைத்துக் கேட்கின்றீர்கள். புதியவர்கள் என்று பார்த்து யாரையும் நான் விமர்சிப்பது இல்லை. தமிழில் படைப்புகள் செய்பவர்கள் தமிழை சரியான முறையில் எழுத வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. எழுத்துப் பிழைகளைக் கண்டால் அதை சுட்டிக் காட்டுவேன். அவர்கள் திருந்த மறுத்தால் சற்றுக் காட்டமாக மீண்டும் சுட்டிக் காட்டுவேன். இது அவர்களை பாதித்ததோ தெரியவில்லை. மிக அண்மையில் தமிழுலகம் அறிந்த ஒரு பெரிய கவிஞர் விடுகின்ற எழுத்துப் பிழைகளையும் சுட்டிக் காட்டினேன். அவர் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். பிழை விடாமல் எழுதுவதாக வாக்குறுதி கொடுத்தார். இதில் புதியவர், பழையவர் என்று யாரையும் நான் பார்ப்பது இல்லை.

படைப்பாளிகளை அல்லது படைப்புக்களை விமர்சனம் செய்யும் ஒருவர் தன்னிலை சார் தேர்வில் எவ்வாறு இருக்க வேண்டும என கருதுகின்றீர்கள் ..?

ஒரு நல்ல ரசிகனாக இருந்தாலே போதும். நீங்கள் ஒரு உணவகத்திற்கு சாப்பிடச் செல்கிறீர்கள். சாப்பாடு ருசியாக இல்லை. இதைச் சொல்வதற்கு நீங்கள் நல்ல சமையற்காரனாக இருக்க வேண்டுமா? ருசியை அறிந்தவனாக இருந்தாலே போதும். ஒரு இசையைக் கேட்கிறீர்கள். அது உங்கள் மனதைக் கவரும்படி இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் பெரிய பாடகராக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆகவே படைப்பை விமர்சிப்பதில் தன்னிலை சார் தேர்வு என்பது எல்லாம் அவசியம் இல்லை. ஒருவர் ஒரு படைப்பை பாராட்டுகின்ற பொழுது அவருடைய தகமைகள் யாருக்கும் தேவைப்படுவது இல்லை. விமர்சிக்கின்ற போது மட்டும் அவருடைய தகமை பற்றி வினாவுகிறார்கள். இது மிகத் தவறானது. விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதற்கு பக்குமற்றவர்கள் செய்கின்ற செயல் இது.

தமிழ் நெறித் திருமண முறையில் தாங்கள் திருமணம் செய்துள்ளீர்கள் இந்த திருமண முறையை ஏன் நீங்கள் செய்தீர்கள் ? இந்தத் திருமணம் எவ்வகையான தாக்கங்களை வெளியில் ஏற்படுத்தியது?

இதைப் பற்றி சற்று விரிவாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நாம் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு இனம். தமிழினம் ஒரு தேசியம் இனம் என்று வேறு சொல்கிறோம். ஒரு தனித்துவமான பண்பாட்டையும் மொழியையும் கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் கூட்டமே “இனம்” எனப்படும். அந்த இனத்திற்கு உரித்துடைய ஒரு பாரம்பரிய நிலப் பரப்பும் இருக்குமாயின் அது தேசிய இனம் என்கின்ற தகமையைப் பெறும்.

ஆனால் நாம் எமது பண்பாட்டை இழந்து விட்டோம். எமது குடும்ப, சமூக நிகழ்வுகள் எதுவுமே தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இல்லை. கடவுளை ஏதோ ஒரு வேற்று மொழியில் வழிபடுகின்றோம். திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் வேறு மொழியில்தான் செய்கின்றோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ ஒரு தேசத்தில் யாரோ சிலர் சோமபானமும் ,சுரபானமும் அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் உளறியவைகளை எல்லாம் மந்திரம் என்று சொல்லி எம்மை நாமே இழிவுபடுத்துகிறோம்.

தேசிய இனம் என்று அங்கீகரிக்கப்படுவதற்கு போராடுகின்ற நாம் எமது பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தமிழர்களின் நிகழ்வுகள் தமிழ் மொழியில் தமிழ் பண்பாட்டிற்கு இணங்க நடத்தப்பட வேண்டும் என்பதை நான் எப்பொழுதும் வலியுறுத்தி வருகின்றேன்.. புலம்பெயர் நாடுகளில் ஓரிரு தமிழ்நெறித் திருமணங்கள் நடந்துள்ளன. இதில் என்னுடைய பங்களிப்பையும் வழங்கினேன். மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று காத்திருக்காமல் நாமே அதை செய்து காட்டுவது நல்லது அல்லவா?

உண்மையை சொன்னால் எனக்கு திருமணச் சடங்கில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்யாமலேயே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியும் என்பது என்னுடைய கருத்து. அப்படித்தான் நான் வாழ்ந்து வந்தேன். ஆனால் தமிழ்நெறித் திருமணம் பரவ வேண்டும் என்பதற்காக என்னுடைய கருத்தை தள்ளி வைத்து விட்டு இதில் இறங்கினேன். என்னுடைய துணைவியாரும் தமிழ்நெறித் திருமணத்திற்கு சம்மதித்தார்.

தமிழ்நெறித் திருமணத்தில் திருக்குறளுக்கு முக்கிய இடத்தை கொடுத்தேன். கடவுள்மறுப்பாளர்கள் மட்டும்தான் தமிழ்நெறித் திருமணம் செய்யலாம் என்று மக்கள் தவறாக புரிந்து கொண்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். கடவுளை நம்புபவர்களும் இந்த முறைத் திருமணத்தை செய்யலாம் என்பதை வலியுறுத்துவதற்காக தேவாரம், திருமந்திரம் போன்றவற்றில் இருந்தும் திருமணத்திற்கு பொருத்தமான பாடல்களை இணைத்தேன். உதாரணமாக “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற தேவாரத்தை பார்த்தீர்கள் என்றால் அது “பெண்ணில் நல்லாளொடு பெருந்தகை இருந்ததே” என்று முடியும். கடவுளை நம்புபவர்களுக்கு இது சிவனையும் உமையையும் குறிக்கும். எனக்கு மணமகனையும் மணமகளையும் குறிக்கும். இப்படிப் பார்த்து தெரிவு செய்தேன். எந்தக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் தமிழர்கள் தமிழ்நெறியில் திருமணத்தை செய்ய முடியும் என்கின்ற செய்தியைப் பரப்புவதே என்னுடைய முதல் நோக்கமாக இருந்தது.

திருமணம் முடிந்த கையோடு இந்த தமிழ்நெறித் திருமணம் பற்றி பத்திரிகை, இணையத்தளம் போன்றவற்றில் வரச் செய்தேன். என்னுடைய திருமணத்தை விளம்பரம் செய்வதாக சிலர் கிண்டல் செய்தார்கள். எனக்கு அது பற்றிக் கவலை இல்லை. தமிழர்கள் தமிழில் திருமணம் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு இயல்பான சாதாரண செய்தியை விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறதே என்பதுதான் என்னுடைய வருத்தம்.

ஆனால் என்னுடைய திருமணத்திற்கு வருகை தந்திருந்த இருவர் தமது திருமணத்தை தமிழ்நெறியில் அமைத்துக் கொண்டார்கள். எனது திருமணம் பற்றி பத்திரிகையில் எழுதியிருந்ததை படித்த இன்னொருவரும் தன்னுடைய திருமணத்தை தமிழ்நெறியில் செய்தார். என்னுடைய திருமணம் நடந்து ஒரு ஆண்டுக்குள் அதன் தூண்டுதலில் மூன்று தமிழ்நெறித் திருமணங்கள் நடந்திருப்பது எனக்கு ஓரளவு திருப்தியைத் தருகிறது. இதில் இரண்டு திருமணங்களை நானும் முக்கியமான ஒருவராக நின்று நடத்திக் கொடுத்தேன். ஐரோப்பாவில் தமிழ்நெறித் திருமணம் செய்வதற்கு யாராவது விரும்பினால் என்னால் ஆன உதவியை செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்பதை இந்த இடத்தில் மீண்டும் கூறிக் கொள்கிறேன்.

இனமானம் உள்ள தமிழர்கள் தமது நிகழ்வுகளை தமிழில் செய்ய வேண்டும் என்பது என்னுடைய உரிமை மிகுந்த வேண்டுகோள்.

உங்கள் ஊடக படைப்பு சார் துறையில் நடந்தேறிய இன்னல்களை எம்முடன் பகிர முடியுமா ..?

என்னுடைய பதினாறு வயதில் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டேன். அந்த நேரத்தில் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தவறு என்று சுட்டிக்காட்டி கட்டுரை எழுதினேன். இதையடுத்து இங்கே; உள்ள சிலர் என்னை “விடுதலை விரோதி” என்று முத்திரை குத்தினார்கள். ஜேர்மனிய மக்கள் மத்தியில் எமது விடுதலைக்கு ஆதரவு தேடி நான் செய்து கொண்டிருந்த பரப்புரைகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்கள். இவைகள் எனக்கு பெரும் மன உளைச்சலை தந்தன.

விடுதலைப் புலிகள் மீதும், விடுதலைப் போராட்டத்தின் மீதும் பெரும் பற்று வைத்திருப்பவன் நான். இவர்கள் என்னை “விடுதலை விரோதி” என்றதை என்னால் தாங்க முடியவில்லை. மிகவும் வேதனைப்பட்டேன். பதினாறு வயதுள்ள ஒருவனை “விடுதலை விரோதி” என்று முத்திரை குத்தக் கூடிய முட்டாள்கள்தான் இங்கே தமிழர்கள் மத்தியில் அரசியல் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.

இவர்கள் இப்படி முத்திரை குத்தியதுதான் எனக்கு பெரும் மனரீதியான இன்னலை ஏற்படுத்தியது. அப்பொழுது எனக்கு இது புதிதாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம். பின்பு நிர்வாகங்கள் மாறிய பொழுது முத்திரை குத்தியவர்களும் ஒதுக்கப்பட்டார்கள். எனக்கு அதன்பிறகுதான் சற்று நிம்மதி வந்தது.

இதன் பிறகு என்னுடைய சமூகம் மீதான விமர்சன எழுத்துக்களால் பல மிரட்டல்கள் வந்தன. அப்பொழுது நான் இவைகளுக்கு பக்குவப்பட்டுப் போயிருந்தேன். இந்த மிரட்டல்களை எள்ளி நகையாடி புறந்தள்ளினேன். இன்றைக்கும் அடாவடிகளையும் மிரட்டல்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். கடைசியாக திருமண மந்திரங்கள் பற்றி எழுதிய பொழுது என்னைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டினார்கள். ஆனால் இவைகளை நான் இப்பொழுது ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை.

மூட நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு என்பதன் பொருள் சூட்சுமத்தை விரிவாக விளக்குவீர்களா ..?

இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம் போன்றவைகள் பற்றி தேடல்களை செய்கின்ற ஒரு சாதரண மனிதன் அதைக் கடவுளில் கொண்டு போய் முடிக்கின்றான். மனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கின்றது என்பதுதான் அவனுடைய நம்பிக்கை. மனிதனின் சக்தியை, மனிதனின் சிந்தனையை கடந்த ஒன்று உள்ளது. கடந்து உள்ளதால்தான் கடவுள். இப்படி நம்புபவர்கள் இருக்கின்றார்கள். இத்துடன் அவர்களின் நம்பிக்கை முடிந்து விடுகின்றது. இதனால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை.

ஆனால் மனிதனே கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு மனித உருவத்தைக் கொடுத்து, பின்பு நிறைய வேலைகளை செய்ய வேண்டும் என்பதற்காக நிறையக் கைகளை கொடுத்து, மனிதனின் கோபம், இரக்கம், பழிவாங்குதல், காதல், காமம் போன்ற குணங்களையும் கொடுத்து, பின்பு அந்தக் கடவுள்தான் உலகத்தில் எல்லாவற்றையும் நடத்துகிறது, அது தன்னுடைய பிரதிநிதிகளாக சிலரை நியமித்திருக்கிறது, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் இப்படியெல்லாம் நம்பி தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் இதற்கு செலவிடுகிறான். பல நேரத்தில் இதற்காக உயிரையும் விடுகிறான். இதுதான் மிகப் பெரிய மூட நம்பிக்கை. இது மனித குலத்திற்கு பெரும் பாதிப்பைக் கொடுக்கிறது.

பகுத்தறிவு கொள்கை உடைய ஒருவரின் பகுத்தறிவு சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள்..?

எதையும் பகுத்து அறியக் கூடிய சிந்தனை இருக்க வேண்டும். ஆராய்கின்ற தன்மை இருக்க வேண்டும். மற்றவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அது தன்னுடைய புத்திக்கு சரியாகப் படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். எந்த மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை என்கின்ற தன்மான உணர்வு வேண்டும்.