சர்வதேச கூட்டுச் சதி மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை போரில் தோற்கடித்த சிறிலங்கா அரசு தற்பொழுது அவ்வாறானதொரு சர்வதேச கூட்டுச் சதியின் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலாளர் செல்வராஜா பத்மநாதன் அவர்களை (கேபி) கடத்தியுள்ளது. பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்ட கேபி அவர்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
 
 கேபி அவர்களை சுட்டுக் கொல்லும் திட்டத்துடனேயே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஆனால் உள்நாட்டு புலனாய்வாளர்களும் அங்கே நின்றதால் அது நடைபெறவில்லை என்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகள் ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள்.
 
 தேசியத் தலைவரும் மூத்த தளபதிகள் பலரும் வீரச் சாவடைந்ததன் பின்னர் கேபி அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக மூத்த உறுப்பினராகிய கேபி அவர்கள் தேசியத் தலைவரால் இந்த ஆண்டு ஜனவரியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பன்னாட்டு உறவுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
 
 தேசியத் தலைவரின் மறைவுக்குப் பின்பு புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலாளராக கேபி அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டிருந்த பல குழப்பங்களை நிதானமான முறையில் தீர்த்து வைத்தபடி புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகளை கேபி அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
 
 இப்படியானதொரு நிலையில் கேபி அவர்கள் சிறிலங்கா அரசினால் கடத்தப்பட்டுள்ளார். இந்தக் கடத்தலால் ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
 
 இன்றைய நிலையில் அனைத்து தமிழர்களால் அறியப்பட்ட ஆளுமை மிக்க ஒரு தலைவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, தேசியத் தலைவரின் மிகுந்த நம்பிக்கைக்கு பத்திரமாக விளங்கிய கேபி அவர்களையே சிலர் ஏற்றுக் கொள்ள மறுத்து பல குழப்பங்களை விளைவித்ததை அனைவரும் அறிவர்.
 
 தேசியத் தலைவரால் அனைத்துலக உறவுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஒருவர் சிறிலங்கா அரசினால் கடத்தப்பட்ட செய்தியைக் கூட சில தமிழ் ஊடகங்கள் வெளியிடாது, எதுவுமே நடக்காதது போன்று இருக்கின்றன.
 
 இப்படி ஒற்றுமை குலைந்து போய் இருக்கின்ற நிலையில் வெளிநாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை இன்னொருவர் தலைமை தாங்கி நடத்த முடியுமா என்னும் கேள்வி எழுந்து நிற்கின்றது.
 
 விரைவில் விரிவான கட்டுரை இடம்பெறும்………….
 
 வி.சபேசன் (07.08.09)

Posted in தமிழீழம் | Read More »

Comments

k.pathi on 8 August, 2009 at 10:44 am #

i feel so sad!
what we are going to do?


rana on 9 August, 2009 at 6:28 pm #

sabasan ple i want to contact with u


manimagan on 10 August, 2009 at 3:48 pm #

virivaana katturaiyai ethirparkiren


mayuran on 10 August, 2009 at 6:08 pm #

I think I am ready to lead the tamils and the eelam is there any follwers.
how are u sabesan, i miss talkign to you during the most heated time of the tamils . Take care man, you are one in a million.


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99