சர்வதேச கூட்டுச் சதி மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை போரில் தோற்கடித்த சிறிலங்கா அரசு தற்பொழுது அவ்வாறானதொரு சர்வதேச கூட்டுச் சதியின் ஊடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலாளர் செல்வராஜா பத்மநாதன் அவர்களை (கேபி) கடத்தியுள்ளது. பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளின் உதவியுடன் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்ட கேபி அவர்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
தேசியத் தலைவரும் மூத்த தளபதிகள் பலரும் வீரச் சாவடைந்ததன் பின்னர் கேபி அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக மூத்த உறுப்பினராகிய கேபி அவர்கள் தேசியத் தலைவரால் இந்த ஆண்டு ஜனவரியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பன்னாட்டு உறவுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.
தேசியத் தலைவரின் மறைவுக்குப் பின்பு புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலாளராக கேபி அவர்கள் பொறுப்பேற்றிருந்தார். புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டிருந்த பல குழப்பங்களை நிதானமான முறையில் தீர்த்து வைத்தபடி புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பணிகளை கேபி அவர்கள் மேற்கொண்டிருந்தார்.
இந்த ஆண்டு மே மாதம் வரை கேபி அவர்கள் பின்னரங்கிலேயே தமது செயற்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் அமைப்புக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் அவரை வெளியரங்குக்கு வரவேண்டிய நிலைக்கு தள்ளியது. சில நாடுகளின் செயற்பாட்டாளர்கள் அவருக்கு கட்டுப்பட மறுத்து, தன்னிச்சியையாக இயங்க முற்பட்டதானால் ஏற்பட்ட குழப்பங்களை தீர்த்து வைப்பதற்கு அவர் பலரை சந்தித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. முரண்பாடுகளால் இயக்கம் அழிந்து விட்டதாக கருத்து பரவிய பொழுது அதை மறுப்பதற்கு ஊடகங்களை சந்திக்க வேண்டி ஏற்பட்டது.
தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லி தமது நலன்களை பாதுகாக்க முனைந்த சக்திகளை முறியடித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதனுடைய இலட்சியப் பாதையில் தொடர்ந்து வீறுநடை போட வைக்கும் உறுதியோடு கேபி அவர்கள் வெளியில் வந்தார்.
உண்மையை ஏற்று தமிழீழ நலனை மட்டும் கருத்தில் கொண்டு தமிழர் அமைப்புகள் இயங்கியிருந்தால் கேபி அவர்கள் சிறிலங்கா அரசிடம் சிக்கியிருக்க மாட்டார். கேபி அவர்களை கடத்துவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாகியிருக்க மாட்டாது.
கேபி அவர்கள் கடத்தப்பட்டிருப்பதால் ஏற்கனவே மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இன்றைய நிலையில் அனைத்து தமிழர்களாலும் அறியப்பட்ட ஆளுமை மிக்க ஒரு தலைவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி, தேசியத் தலைவரின் மிகுந்த நம்பிக்கைக்கு பத்திரமாக விளங்கிய கேபி அவர்களையே சிலர் ஏற்றுக் கொள்ள மறுத்து பல குழப்பங்களை உருவாக்கினார்கள். இப்படியான ஒரு நிலையில் வேறொருவரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டமைத்து கட்டுக்கோப்பாக வழிநடத்திச் செல்வது சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை.
கேபி அவர்கள் உண்மையாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதில் உறுதியாக நின்றார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சிறிலங்கா அரசுக்கு சவாலாக விளங்கினார்.அதனாலேயே சிறிலங்கா அரசு கேபி அவர்களை இலக்கு வைத்து இந்தக் கடத்தல் நடவடிக்கையை நடத்தியிருக்கிறது.
கேபி அவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் புலம்பெயர் தமிழர்களின் அரசியற் செயற்பாடுகளை ஆபத்து மிகுந்த ஒன்றாகவும் மாற்றியுள்ளது.
கேபி அவர்களை சுட்டுக் கொல்லும் திட்டத்துடனேயே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஆனால் உள்நாட்டு புலனாய்வாளர்களும் அங்கே நின்றதால் அது நடைபெறவில்லை என்றும் சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரிகள் ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்திருக்கின்றார்கள்.
சிறிலங்கா அரசின் திட்டப்படி கேபி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிறிலங்கா அரசு இந்தக் கொலைப் பழியை கேபியுடன் முரண்பட்டுக்கொண்டிருப்பவர்கள் மீது போட்டிருக்கும். புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் நடக்கின்ற பிரச்சனைகள் விரைவில் கொலைகள் நடைபெறுகின்ற அளவிற்கு தீவிரம் அடையும் என்று சிறிலங்கா அரச சார்பு தமிழ் ஊடகங்கள் அடிக்கடி எழுதி வந்ததும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கக் கூடும்
இப்படி தாமே கொலை செய்து விட்டு பழியை தமிழர்கள் மீதே போட்டிருந்தால், அதனால் ஏற்படுக்கூடிய குழப்ப நிலை மிகவும் ஆபாயகரமானதாக இருந்திருக்கும். தற்பொழுது திரு உருத்திரகுமாரன் போன்றவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தாம் தொடங்கியுள்ளதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது.
நிலைமையின் ஆபாயகரத்தை உணர்ந்து இனியாவது தமிழர்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.
கேபி அவர்கள் சிறிலங்கா அரசின் சிறையில் வாடும் இந்த நேரத்தில் அவரை துரோகி என்றவர்கள் தமது செயலை நினைத்து வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டும். ஆனால் அவர்களோ சற்றும் சளைக்காது கேபி தானாகவே சரணடைந்தார் என்று கயிறு திரிக்க வெளிக்கிட்டுள்ளார்கள். தேசியத் தலைவரும் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த பின்பே கொல்லப்பட்டார் என்று ஒரு கும்பல் சொல்லிக் கொண்டு திரிகிறது. கேபியும் சரணடைந்தார் என்று இன்னொரு கும்பல் இப்பொழுது சொல்லத் தொடங்கியிருக்கிறது. மக்கள் இந்தக் கும்பல்களின் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.
அத்துடன் சில தமிழ் ஊடகங்கள் கேபி அவர்கள் கடத்தப்பட்டது பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிடாது கள்ள மௌனம் சாதிக்கின்றன. தேசியத் தலைவரால் அனைத்துலக உறவுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஒருவர் சிறிலங்கா அரசினால் கடத்தப்பட்டுள்ளார் என்பது கூட இந்த ஊடகங்களுக்கு உறைக்கவில்லை. செய்தி ஊடகங்கள் என்றோ, தேசிய ஆதரவு ஊடகங்கள் என்றோ தம்மை அழைப்பதற்கான தார்மீக உரிமையை இந்த ஊடகங்கள் முற்று முழுதாக இழந்து விட்டன.
மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க முடியாத ஒரு வெறுமை நிலைக்குள் இந்தக் குழப்பவாதிகள் தமிழர்களை தள்ளி விட்டார்கள்.
ஆயினும் தமிழீழத்தில் உள்ள மக்கள் இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். உள்ளுராட்சித் தேர்தல்களில் அந்த மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கின்றார்கள். உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கைகளைத் தவிர பெரிதாக ஒன்றும் அந்த மக்களுக்கு செய்திருக்கவில்லை. கொழும்பிலும், வெளிநாடுகளிலுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பெரும்பாலும் இருந்தார்கள். அப்படியிருந்தும் வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள்.
யாழ் குடா மக்கள் தேர்தலில் அக்கறை காட்டவில்லை. 80வீதமான மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. புத்தளத்தில் வசிக்கும் யாழ் குடாவை சேர்ந்த இஸ்லாமிய மக்களும், ஈபிடிபியினரால் வசதி வாய்ப்புகளைப் பெற்ற சில ஆயிரம் பேரும்; ஆளும்கட்சிக்கு வாக்களித்தனர். அப்படியிருந்தும் ஏறக்குறைய 40 வீதமான வாக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு விழுந்தன. தமது வெற்றி உண்மையானது அல்ல என்று டக்ளஸ் தேவானந்தாவும், தமிழ் மக்கள் இன்னமும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று சித்தார்த்தனும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழீழ மக்கள் தமிழ் தேசியத்தை நேசிக்கின்றார்கள் என்பதை தேர்தல் உணர்த்தியிருக்கிறது. தமிழீழப் போராட்டத்திற்கான அடுத்த வடிவத்தையும் தலைமையையும் தமிழீழத்தில் வாழும் மக்களே இனி வழங்க வேண்டும்.
- வி.சபேசன் (12.08.09)
Yes Sabesan Kuliril odoodi ulaiththaalum pinpu kudiththup Purandatum Pulaththil irukkum Thamilan Viduthalai Vedkkaiayai Maranthu Vidukiraan.
Valikalai Sumanthavarkalai Viduthalaiyayum ValiNadaththa Vendum..
Iniyaavathu Enchiyulla Raam anna Uruththira annayaiaam Kaappaatti emathu iyakkaththai Konjam Thakka Vaiththuk Kolvom.
Mr.Sabesan!
Malayalees in Indian admn, has tightenend their rope towards the neck of tamil community!
we find it very difficult in creating awareness for tamileelam!
ஆயினும் தமிழீழத்தில் உள்ள மக்கள் இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றார்கள். உள்ளுராட்சித் தேர்தல்களில் அந்த மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கின்றார்கள்.
சபேசன்,
தமிழீழத்தில் போரால் பாதிக்கப்பட்ட எந்த மக்களும் இப்போது இலட்சியங்களுடன் இல்லை. உயிர் வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில்தான் உள்ளார்கள்.
உள்ளுராட்சித் தேர்தலில் மக்கள் வவுனியாவில் வாக்களித்த விகிதம் எவ்வளவு ? வாக்களிக்காத விகிதம் எவ்வளவு ?
இனியாவது உசுப்பாமல் அந்த மக்களுக்கு உயிர்வாழ்தலுக்கு வேண்டியவற்றில் ஒரு துளியை செய்தால் போதும். அவர்கள் விடுதலைக்கான பாதையை தாம் தேர்வு செய்வார்கள்.
கே.பியை வெளிய வா வெளிய வாவென்று கூப்பிட்டு கடத்தும் வரை புதினம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு இப்போது கண்டனம் செய்யும் கயமைத்தனங்களை கே.பி அறிந்திருக்க நியாயமில்லைத்தான்.
தேசியத்தலைவரையே சாகும் வரை இதோ வாறம் அதோ வாறம் என்று பசப்புக்காட்டிய ஆய்வாளர்கள் அக்கறையாளர்கள் தான் கே.பி யின் கைதுக்கு காரணமானார்கள்.
இந்த இனத்துக்காக இனி யாரும் போராட வேண்டாம். அவர்களும் இந்தச் சுயநலம் பிடித்தவர்கள் போல் தங்களை வாழ்ந்துவிட்டுச் செல்லட்டும்.
PLS UPDATE UR NEWS DAILY. IS THERE IS ANY CHANCE IO REWIN THE WAR AGAINST SL ARMY.PLS SELECT ANOTHER LEADER FOR LTTE, IT MAKES THE TAMIL PEOPLE IO HAPPY.