நீங்கள் ஒரு அரசியல் ஆய்வாளராக திகழ்கின்றீர்கள். இன்றைய நிலையில் ஆய்வாளர்கள் மீது பரவலாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவர்கள் களநிலவரங்கள் பற்றி பொய்யான தகவல்களை தந்தார்கள், பிழையான எதிர்வுகூறல்களை செய்தார்கள் என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஆய்வாளர்கள் மீது குற்றம் சொல்வது தவறு. ஆய்வாளர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்பது விடுதலைப் புலிகளுக்கு தெரிந்துதான் இருந்தது. எனக்கு தெரிந்து பலர் வன்னிக்கு தொடர்பு கொண்டு பேசிவிட்டுத்தான் எழுதுவார்கள். அவர்கள் சொன்னதை அப்படியே எழுதியவர்களும் இருக்கின்றார்கள். நீங்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் கடைசி வரைக்கும் நாம் திருப்பி அடிப்போம் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்று எழுத முடியாது. அப்படி எழுதியிருந்தால் அது துரோகமாக பார்க்கப்பட்டிருக்கும்.
அதே வேளை விடுதலைப் புலிகளின் தோல்விகளை “நிகழ்ச்சி நிரல், பொறி, தீர்க்க தரிசனம்” என்றெல்லாம் சிலர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள் என்பது உண்மைதான். அது இப்பொழுதும் தொடர்வது வருந்தத் தக்கது.
மக்களை விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்தார்கள் என்றும், அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் புலிகளை காப்பதற்காக போரை நிறுத்தச் சொல்லி குரல் கொடுத்ததனால்தான் சர்வதேசம் தமிழ் மக்களை கண்டு கொள்ளவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். ஊர்வலங்களில் புலிக் கொடி பயன்படுத்துவது பற்றியும் விமர்சிக்கின்றார்கள். இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
அனைத்தும் பலத்தின் அடிப்படையில் நடப்பவைதான். நாம் பலமாக இருந்த பொழுது இணைத்தலைமை நாட்டின் பிரதிநிதிகள் வந்து புலிக்கொடியின் கீழ் அமர்ந்துதான் பேசினார்கள். அப்பொழுது அவர்களுக்கு புலிக்கொடி உறுத்தவில்லை.. நாம் பலவீனமான பொழுது புலிக்கொடி இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யுங்கள் என்று ஆலோசனை தருகிறார்கள். அவர்கள் எமது பக்கம் நிற்க விரும்பவில்லை என்றால் ஆயிரம் காரணங்களை சொல்வார்கள். உன்னுடைய தலை முடி சரியில்லை, கண் முழி நன்றாக இல்லை என்றெல்லாம் காரணம் சொன்னாலும் சொல்வார்கள். அவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டு, அதற்கு சாட்டு தேடுகின்றார்கள் என்பதுதான் உண்மை.
மக்களை விடுவிக்கச் சொல்லித்தான் நாம் அன்று போரடினோம்.. பாதுகாப்பு வலயங்கள் என்னும் மரணப் பொறியில் இருந்து மக்களை விடுவித்து அவர்களின் சொந்த இடங்களுக்கு போக விட வேண்டும் என்றுதான் நாம் கேட்டோம். ஆனால் சிறிலங்கா அரசு தடுப்பு முகாம்களை அமைத்து விட்டு அங்கே மக்களை வரச் சொன்னது. தடுப்பு முகாம்கள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று நாம் பார்க்கின்றோம். இது அன்றைக்கே தெரிந்த விடயம்தான். இந்த நிலையில் “மக்களை அனுப்புங்கள்” என்று நாம் எப்படி விடுதலைப் புலிகளைக் கோர முடியும்? இப்படியான தடுப்பு முகாம்களுக்கு மக்களை அனுப்பும்படி கோரியவர்களையும், இன்றைக்கு இந்த தடுப்புமுகாம்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களையும் மனிதநேயமற்றவர்கள் என்றுதான் நான் சொல்வேன். மனிதநேயம் உள்ளவர்கள் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு விடும்படிதான் கோருவார்கள்.
இன்றைய விடுதலை புலிகளின் அரசியல் இராணுவ வீழ்ச்சி எவ்வகையில் நிகழ்ந்தேறியது ..?
விடுதலைப் புலிகளுக்கு அரசியல் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நான் கருதவில்லை. விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியுள்ள அரசியல் வீச்சு பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். அதுதான் தமிழீழத்தையும் விடிவிக்கும். விடுதலைப் புலிகள் தமிழர்களால் ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்று நிறுவி விட்டார்கள். இந்தச் செய்தி தொடர்ந்து தமிழர்களின் மனங்களில் இருக்கும்.
தற்போது விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள இராணுவ ரீதியான வீழ்ச்சிக்கான காரணங்கள் நிறைய உண்டு. இதைப் பற்றி ஓரிரு வரிகளில் சொல்லி விட முடியாது.
பெரியாரை நீங்கள் போற்றுவதற்கு என்ன காரணம்?
தமிழர்களுக்கு சுயமாக சிந்திக்கக் கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார். மக்களின் விடுதலைதான் அவருடைய போராட்டமாக இருந்தது. மக்களின் விடுதலைக்கு எதிராக எது நின்றாலும் அவர் அதை எதிர்த்தார். மக்களின் விடுதலைக்கு எதிராக நின்ற மதம், கடவுள், புராணங்கள், வேதங்கள் என்று அனைத்தையுமே அவர் எதிர்த்துப் போராடினார். தன்னுடைய அடிப்படைக் கொள்கையில் சமரசம் செய்யாத ஒரு தலைவர் அவர். இன்றைக்கே சொல்வதற்கு தயங்குகின்ற கருத்துகளை அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே சாதரணமாக சொன்னவர். இறக்கும் வரை தன்னுடைய கொள்கைகளுக்காக ஓய்வின்றிப் போராடினார்.
பெரியாரியத்தை ஆதரிக்கும் நீங்கள் எதற்காக சைவ மதத்தை கொச்சை படுத்து விதமாக உங்கள் செயல் நெறி அமைந்தது ..?
நான் எதையும் கொச்சைப்படுத்துவது இல்லை. எது கொச்சையாக இருக்கிறதோ அதைச் சுட்டிக்காட்டுகிறேன். சைவத்தை உண்மையில் கொச்சைப்படுத்துபவர்கள் இந்துக்கள்தான். சைவமும் தமிழும் ஒன்று என்பார்கள். பின்பு சைவக் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் பூசை செய்து கொச்சைப்படுத்துவார்கள். இன்றுவரை சிதம்பரத்தில் தேவாரம் பாட விடாது கொச்சைப்படுத்துகிறார்கள். 63 நாயன்மார்கள் என்று சொல்லிவிட்டு நந்தனாரின் சிலையை சிதம்பரத்தில் இருந்து பெயர்த்தெடுத்து காற்படியாக செய்து கொச்சைப்படுத்துவார்கள். இப்படி கடவுளை நம்புவதாக சொல்கின்ற இவர்கள்தான் சைவ சமயத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். மதங்களில் உள்ள அழுக்குகளை நான் சுட்டிக் காட்டுகிறேன். அவ்வளவுதான்.
கருணாநிதியை இன்று வரை தாங்கள் ஆதரிப்பதாக சொல்லப்படுகிறது அப்படி ஆனால் எதற்காக அவரை ஆதாரிகின்றீர்கள் ..?
கலைஞரை மிகக் கடுமையாக எதிர்த்தவர்களில் நானும் ஒருவன். ஈழத் தமிழர்கள் பலரை அவரை போற்றிப் புகழ்பாடிக் கொண்டிருந்த காலங்களிலேயே கலைஞரை எதிர்த்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அவர் மீதான எதிர்ப்பைக் கைவிட்டு விட்டேன். அவரை ஒருமுறை எதிர்ப்பதும், தமிழ்செல்வனுக்கு கவிதை எழுதியவும் அவரை ஆதரிப்பதும், பின்பு திட்டித் தீர்ப்பதும், தமிழீழத்தை ஆதரிக்கின்றேன் என்று சொன்னதற்காக ஜெயலலிதாவை ஈழத் தாய் என்பதும்… இப்படியாகத்தான் எங்கள் நிலைப்பாடுகள் இருக்கின்றன. தமிழீழத்தை ஆதரித்த ஜெயலலிதா இன்றைக்கு எங்கே? தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ள மக்களைப் பற்றி இதுவரை அவர் ஏன் குரல் கொடுக்கவில்லை? இதில் கலைஞரை மட்டும் எதிர்த்துக் கொண்டிருப்பதால் எந்த பலனும் ஏற்படப் போவது இல்லை. அவருக்கு எதிராக அரசியல் செய்பவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்றார்கள். கலைஞர் இருக்கும் வரை அவரை எதுவும் செய்ய முடியாது. இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆட்சியில் அமரும் பலத்தோடு இருக்கின்ற அரசியல்வாதிகளில் கலைஞர் ஓரளவாவது பரவாயில்லை என்று நினைக்கின்றேன். இனிமேல் ராஜதந்திரப் போர் நடத்தப் போகிறோம் என்று நாம் சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சரை எதிர்ப்பது என்ன வகையான ராஜதந்திரமாக இருக்க முடியும்?
தாழ்த்தபட்ட சமூகத்தினர் தான் பகுத்தறிவு என்ற கருத்தை எடுத்து உயர்த்தப்பட்ட சமூகத்தினரை உதைப்பதாக சிலர் கூறுகிறார்களே இது பற்றிய உங்கள் பார்வை என்ன ..?
இது முட்டாள்தனமான கூற்று. தமிழர்கள்தான் இனவிடுதலை என்ற கருத்தை எடுத்துக் கொண்டு சிங்களவர்களை தாக்குகின்றார்கள் என்று சொல்வதைப் போன்று இது இருக்கின்றது.
படைப்பில் சாதி இல்லை என கூறுபவர்கள் ஏன் நியத்தில் சாதியத்தை பாக்கின்றார்கள் அப்படி பார்ப்பவர்கள் எவ்வாறு ஒரு சமுக சீர் திருத்த வாதியாக இருக்க முடியும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள் ..?
எந்தப் படைப்பை நீங்கள் கேட்கிறீர்கள்? கடவுளின் படைப்புப் பற்றிக் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். மனிதன் சாதியைப் படைத்தான். மனிதன் இன்றும் நியத்தில் சாதியைக் கடைப்பிடிக்கின்றான். சாதிகள் இருக்கின்றன. இதுதான் யதார்த்தம். இந்த சாதிகள் ஒழிய வேண்டும் என்பது எங்களின் போராட்டம். சாதிகளை எதிர்க்கும் இந்தப் போராட்டத்தில் சாதியத்தை இனம் காண வேண்டிய தேவையும் இருக்கின்றது. இதை சாதி பார்ப்பதாக சொல்ல முடியாது. வெளியில் சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் சாதியை வைத்திருப்பார்கள். சாதியத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இவற்றை நாம் இனம் காட்டுகிறோம். குறிப்பிட்ட செயற்பாடுகள் எதன் அடிப்படையில் வருகின்றன என்பதை விளக்குகின்றோம். சாதியம் இன்று பல வடிவங்களில் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதே ஒரு போராட்டம்தான். “நான் சாதி பார்ப்பது இல்லை” என்று ஒருவன் சொன்னால் அவன் அங்கே தான் ஒரு உயர்சாதியினன் என்பதை வெளிப்படுத்துகிறான். இதில் கூட சாதியம் இருக்கிறது. அதை விட எதுவரை சாதி பார்ப்பது இல்லை என்பதற்கும் அவன் ஒரு எல்லை வைத்திருப்பான். இவைகளை இனம்கண்டு நாம் போராட வேண்டும். சாதி பார்ப்பது வேறு. சாதியத்தை இனம் காண்பதும் இனம் காட்டுவதும் வேறு.
நீங்கள் பெண் படைப்பாளிகளையும் வளர்ந்து வரும் புதியவர்களையும் பரவலாக முறை கேடாக விமர்சனம் செய்து வந்துளீர்கள் ஏன் அவ்வாறு நடந்தீர்கள் ..?
ஒருவரின் படைப்பையும், படைப்பின் பின்னணிகளையும், படைப்பு உருவானதன் அடிப்படைக் காரணங்களையும் விமர்சனம் செய்வது முறைகேடானது இல்லை. படைப்பு சாராது தனிப்பட்டரீதியில் விமர்சிப்பதுதான் முறைகேடானது. அப்படியான விமர்சனங்களை நான் செய்வது இல்லை. பெண் படைப்பாளிகள் பலர் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறேன். அப்படி அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பதற்கு ஆணாதிக்க சமூகமே காரணம் என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். பரந்த தேடல்களையும் வாசிப்புக்களையும் செய்யும்படி அறைகூவல் விடுத்திருக்கிறேன். பெண் படைப்பாளிகள் பரந்த தேடல்களை செய்வதற்கு நாம் (ஆணாதிக்க சமூகம்) அனுமதிப்பது இல்லை. இந்தத் தடையை அவர்கள் உடைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விமர்சனத்தின் அடிப்படை. இந்த விமர்சனத்தைக் கூட ஒரே ஒரு முறைதான் செய்திருக்கிறேன். நீங்கள் அதை ஞாபகம் வைத்துக் கேட்கின்றீர்கள். புதியவர்கள் என்று பார்த்து யாரையும் நான் விமர்சிப்பது இல்லை. தமிழில் படைப்புகள் செய்பவர்கள் தமிழை சரியான முறையில் எழுத வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. எழுத்துப் பிழைகளைக் கண்டால் அதை சுட்டிக் காட்டுவேன். அவர்கள் திருந்த மறுத்தால் சற்றுக் காட்டமாக மீண்டும் சுட்டிக் காட்டுவேன். இது அவர்களை பாதித்ததோ தெரியவில்லை. மிக அண்மையில் தமிழுலகம் அறிந்த ஒரு பெரிய கவிஞர் விடுகின்ற எழுத்துப் பிழைகளையும் சுட்டிக் காட்டினேன். அவர் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். பிழை விடாமல் எழுதுவதாக வாக்குறுதி கொடுத்தார். இதில் புதியவர், பழையவர் என்று யாரையும் நான் பார்ப்பது இல்லை.
படைப்பாளிகளை அல்லது படைப்புக்களை விமர்சனம் செய்யும் ஒருவர் தன்னிலை சார் தேர்வில் எவ்வாறு இருக்க வேண்டும என கருதுகின்றீர்கள் ..?
ஒரு நல்ல ரசிகனாக இருந்தாலே போதும். நீங்கள் ஒரு உணவகத்திற்கு சாப்பிடச் செல்கிறீர்கள். சாப்பாடு ருசியாக இல்லை. இதைச் சொல்வதற்கு நீங்கள் நல்ல சமையற்காரனாக இருக்க வேண்டுமா? ருசியை அறிந்தவனாக இருந்தாலே போதும். ஒரு இசையைக் கேட்கிறீர்கள். அது உங்கள் மனதைக் கவரும்படி இல்லை என்று சொல்வதற்கு நீங்கள் பெரிய பாடகராக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆகவே படைப்பை விமர்சிப்பதில் தன்னிலை சார் தேர்வு என்பது எல்லாம் அவசியம் இல்லை. ஒருவர் ஒரு படைப்பை பாராட்டுகின்ற பொழுது அவருடைய தகமைகள் யாருக்கும் தேவைப்படுவது இல்லை. விமர்சிக்கின்ற போது மட்டும் அவருடைய தகமை பற்றி வினாவுகிறார்கள். இது மிகத் தவறானது. விமர்சனத்தை ஏற்றுக்கொள்வதற்கு பக்குமற்றவர்கள் செய்கின்ற செயல் இது.
தமிழ் நெறித் திருமண முறையில் தாங்கள் திருமணம் செய்துள்ளீர்கள் இந்த திருமண முறையை ஏன் நீங்கள் செய்தீர்கள் ? இந்தத் திருமணம் எவ்வகையான தாக்கங்களை வெளியில் ஏற்படுத்தியது?
இதைப் பற்றி சற்று விரிவாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நாம் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு இனம். தமிழினம் ஒரு தேசியம் இனம் என்று வேறு சொல்கிறோம். ஒரு தனித்துவமான பண்பாட்டையும் மொழியையும் கொண்டிருக்கின்ற ஒரு மக்கள் கூட்டமே “இனம்” எனப்படும். அந்த இனத்திற்கு உரித்துடைய ஒரு பாரம்பரிய நிலப் பரப்பும் இருக்குமாயின் அது தேசிய இனம் என்கின்ற தகமையைப் பெறும்.
ஆனால் நாம் எமது பண்பாட்டை இழந்து விட்டோம். எமது குடும்ப, சமூக நிகழ்வுகள் எதுவுமே தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இல்லை. கடவுளை ஏதோ ஒரு வேற்று மொழியில் வழிபடுகின்றோம். திருமணம் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் வேறு மொழியில்தான் செய்கின்றோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ ஒரு தேசத்தில் யாரோ சிலர் சோமபானமும் ,சுரபானமும் அருந்தி போதை தலைக்கேறிய நிலையில் உளறியவைகளை எல்லாம் மந்திரம் என்று சொல்லி எம்மை நாமே இழிவுபடுத்துகிறோம்.
தேசிய இனம் என்று அங்கீகரிக்கப்படுவதற்கு போராடுகின்ற நாம் எமது பண்பாட்டை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். தமிழர்களின் நிகழ்வுகள் தமிழ் மொழியில் தமிழ் பண்பாட்டிற்கு இணங்க நடத்தப்பட வேண்டும் என்பதை நான் எப்பொழுதும் வலியுறுத்தி வருகின்றேன்.. புலம்பெயர் நாடுகளில் ஓரிரு தமிழ்நெறித் திருமணங்கள் நடந்துள்ளன. இதில் என்னுடைய பங்களிப்பையும் வழங்கினேன். மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று காத்திருக்காமல் நாமே அதை செய்து காட்டுவது நல்லது அல்லவா?
உண்மையை சொன்னால் எனக்கு திருமணச் சடங்கில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்யாமலேயே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியும் என்பது என்னுடைய கருத்து. அப்படித்தான் நான் வாழ்ந்து வந்தேன். ஆனால் தமிழ்நெறித் திருமணம் பரவ வேண்டும் என்பதற்காக என்னுடைய கருத்தை தள்ளி வைத்து விட்டு இதில் இறங்கினேன். என்னுடைய துணைவியாரும் தமிழ்நெறித் திருமணத்திற்கு சம்மதித்தார்.
தமிழ்நெறித் திருமணத்தில் திருக்குறளுக்கு முக்கிய இடத்தை கொடுத்தேன். கடவுள்மறுப்பாளர்கள் மட்டும்தான் தமிழ்நெறித் திருமணம் செய்யலாம் என்று மக்கள் தவறாக புரிந்து கொண்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். கடவுளை நம்புபவர்களும் இந்த முறைத் திருமணத்தை செய்யலாம் என்பதை வலியுறுத்துவதற்காக தேவாரம், திருமந்திரம் போன்றவற்றில் இருந்தும் திருமணத்திற்கு பொருத்தமான பாடல்களை இணைத்தேன். உதாரணமாக “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற தேவாரத்தை பார்த்தீர்கள் என்றால் அது “பெண்ணில் நல்லாளொடு பெருந்தகை இருந்ததே” என்று முடியும். கடவுளை நம்புபவர்களுக்கு இது சிவனையும் உமையையும் குறிக்கும். எனக்கு மணமகனையும் மணமகளையும் குறிக்கும். இப்படிப் பார்த்து தெரிவு செய்தேன். எந்தக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் தமிழர்கள் தமிழ்நெறியில் திருமணத்தை செய்ய முடியும் என்கின்ற செய்தியைப் பரப்புவதே என்னுடைய முதல் நோக்கமாக இருந்தது.
திருமணம் முடிந்த கையோடு இந்த தமிழ்நெறித் திருமணம் பற்றி பத்திரிகை, இணையத்தளம் போன்றவற்றில் வரச் செய்தேன். என்னுடைய திருமணத்தை விளம்பரம் செய்வதாக சிலர் கிண்டல் செய்தார்கள். எனக்கு அது பற்றிக் கவலை இல்லை. தமிழர்கள் தமிழில் திருமணம் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு இயல்பான சாதாரண செய்தியை விளம்பரம் செய்ய வேண்டியிருக்கிறதே என்பதுதான் என்னுடைய வருத்தம்.
ஆனால் என்னுடைய திருமணத்திற்கு வருகை தந்திருந்த இருவர் தமது திருமணத்தை தமிழ்நெறியில் அமைத்துக் கொண்டார்கள். எனது திருமணம் பற்றி பத்திரிகையில் எழுதியிருந்ததை படித்த இன்னொருவரும் தன்னுடைய திருமணத்தை தமிழ்நெறியில் செய்தார். என்னுடைய திருமணம் நடந்து ஒரு ஆண்டுக்குள் அதன் தூண்டுதலில் மூன்று தமிழ்நெறித் திருமணங்கள் நடந்திருப்பது எனக்கு ஓரளவு திருப்தியைத் தருகிறது. இதில் இரண்டு திருமணங்களை நானும் முக்கியமான ஒருவராக நின்று நடத்திக் கொடுத்தேன். ஐரோப்பாவில் தமிழ்நெறித் திருமணம் செய்வதற்கு யாராவது விரும்பினால் என்னால் ஆன உதவியை செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்பதை இந்த இடத்தில் மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
இனமானம் உள்ள தமிழர்கள் தமது நிகழ்வுகளை தமிழில் செய்ய வேண்டும் என்பது என்னுடைய உரிமை மிகுந்த வேண்டுகோள்.
உங்கள் ஊடக படைப்பு சார் துறையில் நடந்தேறிய இன்னல்களை எம்முடன் பகிர முடியுமா ..?
என்னுடைய பதினாறு வயதில் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டேன். அந்த நேரத்தில் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது தவறு என்று சுட்டிக்காட்டி கட்டுரை எழுதினேன். இதையடுத்து இங்கே; உள்ள சிலர் என்னை “விடுதலை விரோதி” என்று முத்திரை குத்தினார்கள். ஜேர்மனிய மக்கள் மத்தியில் எமது விடுதலைக்கு ஆதரவு தேடி நான் செய்து கொண்டிருந்த பரப்புரைகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்கள். இவைகள் எனக்கு பெரும் மன உளைச்சலை தந்தன.
விடுதலைப் புலிகள் மீதும், விடுதலைப் போராட்டத்தின் மீதும் பெரும் பற்று வைத்திருப்பவன் நான். இவர்கள் என்னை “விடுதலை விரோதி” என்றதை என்னால் தாங்க முடியவில்லை. மிகவும் வேதனைப்பட்டேன். பதினாறு வயதுள்ள ஒருவனை “விடுதலை விரோதி” என்று முத்திரை குத்தக் கூடிய முட்டாள்கள்தான் இங்கே தமிழர்கள் மத்தியில் அரசியல் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்பதை நீங்கள் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.
இவர்கள் இப்படி முத்திரை குத்தியதுதான் எனக்கு பெரும் மனரீதியான இன்னலை ஏற்படுத்தியது. அப்பொழுது எனக்கு இது புதிதாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம். பின்பு நிர்வாகங்கள் மாறிய பொழுது முத்திரை குத்தியவர்களும் ஒதுக்கப்பட்டார்கள். எனக்கு அதன்பிறகுதான் சற்று நிம்மதி வந்தது.
இதன் பிறகு என்னுடைய சமூகம் மீதான விமர்சன எழுத்துக்களால் பல மிரட்டல்கள் வந்தன. அப்பொழுது நான் இவைகளுக்கு பக்குவப்பட்டுப் போயிருந்தேன். இந்த மிரட்டல்களை எள்ளி நகையாடி புறந்தள்ளினேன். இன்றைக்கும் அடாவடிகளையும் மிரட்டல்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். கடைசியாக திருமண மந்திரங்கள் பற்றி எழுதிய பொழுது என்னைக் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டினார்கள். ஆனால் இவைகளை நான் இப்பொழுது ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை.
மூட நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் நம்பிக்கை உண்டு என்பதன் பொருள் சூட்சுமத்தை விரிவாக விளக்குவீர்களா ..?
இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம், இயக்கம் போன்றவைகள் பற்றி தேடல்களை செய்கின்ற ஒரு சாதரண மனிதன் அதைக் கடவுளில் கொண்டு போய் முடிக்கின்றான். மனிதனை மீறிய ஒரு சக்தி இருக்கின்றது என்பதுதான் அவனுடைய நம்பிக்கை. மனிதனின் சக்தியை, மனிதனின் சிந்தனையை கடந்த ஒன்று உள்ளது. கடந்து உள்ளதால்தான் கடவுள். இப்படி நம்புபவர்கள் இருக்கின்றார்கள். இத்துடன் அவர்களின் நம்பிக்கை முடிந்து விடுகின்றது. இதனால் யாருக்கும் ஒரு பாதிப்பும் இல்லை.
ஆனால் மனிதனே கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு மனித உருவத்தைக் கொடுத்து, பின்பு நிறைய வேலைகளை செய்ய வேண்டும் என்பதற்காக நிறையக் கைகளை கொடுத்து, மனிதனின் கோபம், இரக்கம், பழிவாங்குதல், காதல், காமம் போன்ற குணங்களையும் கொடுத்து, பின்பு அந்தக் கடவுள்தான் உலகத்தில் எல்லாவற்றையும் நடத்துகிறது, அது தன்னுடைய பிரதிநிதிகளாக சிலரை நியமித்திருக்கிறது, அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் இப்படியெல்லாம் நம்பி தன்னுடைய நேரத்தையும் உழைப்பையும் இதற்கு செலவிடுகிறான். பல நேரத்தில் இதற்காக உயிரையும் விடுகிறான். இதுதான் மிகப் பெரிய மூட நம்பிக்கை. இது மனித குலத்திற்கு பெரும் பாதிப்பைக் கொடுக்கிறது.
பகுத்தறிவு கொள்கை உடைய ஒருவரின் பகுத்தறிவு சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என நீங்கள் எண்ணுகின்றீர்கள்..?
எதையும் பகுத்து அறியக் கூடிய சிந்தனை இருக்க வேண்டும். ஆராய்கின்ற தன்மை இருக்க வேண்டும். மற்றவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அது தன்னுடைய புத்திக்கு சரியாகப் படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். எந்த மனிதனும் யாருக்கும் அடிமை இல்லை என்கின்ற தன்மான உணர்வு வேண்டும்.
போராட்டமும் போராடும் குணமும் ஓயக்கூடாது!
ஒன்று தமிழன் அநியாயத்திற்கு நேர்மையாவும், நல்லவனாகவும் இருக்கிறான். இல்லையேல் அதற்கு நேர்மாராக அநியாயத்திற்கு துரோகியாகவும் இருக்கிறான். ஏன் இப்படி?
தமிழன் ஆயிரம் ஆண்டுகளாகவே தோற்று கொண்டுதான் இருக்கிறான். துரோகிகளுக்கு இது வசதியாகப் போய்விட்டது. இதற்கு முற்று புள்ளி வைக்க தமிழனுக்கு உடனடி தேவை ஒரு வெற்றி . அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்,
நாம் இழந்தது அதிகம்!
பின் எதற்கு மஞ்சல் துண்டுவிடம் நட்பு?
காதறந்த ஊசியும் கொலைஜன் ( மஞ்சல் துன்டு)வாசலுக்கு வராது
The only one responsible for our loss in the Eelam Thermopylae war is Kayamainidhi. The Tamil community needs to understand that fact. The people who are actively involved in our struggle should identify the real enemies and traitors to our people. Otherwise they should stay quiet. Like Paathiri Kaspar- eventhough he seems to have good intentions, he says that he is friends with Kayamainidhi. So when people like Sabesan and Kaspar say Kayamainidhi is OK, it is hiding the truth and misleading the people concerned. People need to know the truth. Sabesan Annar mannikkkavum.
Sabesan Annan, Can you please tell us what actually happened when they say Muslims were expelled from North?
malam thinnum manithan:manjal thundu
Pudukottayan, You asked about ‘muslims were expelled from north’. I will explain the circumstances according to what I found out at the time and later. I was around 15-16 years old living in Jaffna in 1990 when it happened. In the east, particularly in Batticaloa, sinhala government had taken some muslim politicians on their side, and groomed Muslim armed groups to sabotage and betray tiger activities. This armed group also involved in killing tamil people in the east with SLA when the Eelam War II broke out in June 1990. In retaliation, Karuna (LTTE’s commander in east at the time, and now the main traitor) ordered the shooting of Muslims and killing of muslims associated with mercenary group. This also involved killing some muslims in the mosques (I think it was a horrible mistake by Karuna to order this type of revenge in a place of worship without getting the approval of leadership - Prabhakaran should have removed him then). But, the Sri Lankan government did not stop with eastern muslims. They also found traitors among northern muslims and got them to transport lorry loads of knives and machetes secretly in to Jaffna and kept it safe - why? To attack tamil civilians by some muslim mobs organized by some traitors in Jaffna under the orders of Premadasa government, when the army was about to capture Jaffna.
Tiger intelligence found out this plot and had reasons to believe that a part of Jaffna muslim community was either supportive of SLA in this or just kept silent about it. LTTE did not have the resources to immediately identify all the traitors, so decided to send all the muslims to south to avoid a tamil - muslim bloodbath as it happened in the east. From a good muslim point of view it was really bad. They had to leave within a day. But, from LTTE’s point of view, they could not do any thing better at that late stage to avoid a carnage. This is what I know.
good!i like ur comment about our tamil calture…i like tamil wedding!
Nandri, Meikandaare!
Bulding a state with in western state and tryed to impose its will on immigrant Tamils is an act of Terrorism
அன்புள்ள ஐயா, தாங்கள் கூறியுள்ளபடி தமிழர்கள் தங்களது தனித்தன்மையை பாதுகாத்துக்கொள்ள தனி பண்பாட்டை மீட்டெடுக்கவேண்டும் எனவும் அதற்காகவே தமிழ் முறை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளீர்கள். அத்துடன் திருக்கோவில்களில் சமஸ்கிருத மொழியில் வழிபாடு செய்வதையும் அதற்கான மந்திரங்களையும் குடிபோதையில் உளரியவைகள் என கூறியுள்ளீர்கள். ஐயா, தமிழர்கள் யார்? அவர்கள் உலகெங்கும் வழங்கிவரும் மதங்களின் அடிப்படையில் தமிழர்கள் ஹிந்துக்கள் ஆவார்கள். இதற்கு ஆதாரம் தமிழ் மண்ணில் விளங்கும் பல்லாயிரம் திருக்கோவில்களே சாட்சி.அந்த கோவில்களெல்லாம் ஏதோ புறம்போக்கு இனவெறியர்களால் உருரவாக்கப்பட்ட சாதாரண மத அல்லது மரபு ஆக்கிரமிப்பு கூடங்களல்ல. அந்த தெய்வீக உன்னத திருக்கோவில்கள் ஆக்கிவைத்தவர்கள் நமது தமிழ் மாமன்னர்கள் ஆவார்கள். அவர்கள் ஒன்றும் அறிவிலிகள் அல்லவே. இமையவரம்பன் ஈரான இனிய சோழர்களும், தீரமிகு பாண்டிய வேந்தர்களும், சேரமான்பெருந்தகைகளுமான நமது மன்னர்கள் ஏன் இவ்வளவு திருக்கோவில்களை நிர்மாணித்ததுள்ளார்கள். அவர்கள் என்ன மடையர்களா? அல்லது மரபு அல்லது மத ஆக்கிரமிப்பை எதிர்க்க திராணியற்றவர்களா? இமையத்தையும் வென்றவனுக்கும், கங்கைகொண்டவனுக்கும் கடாறம் வென்றவனுக்கும் எந்த எதிரி இருந்தான் அவர்களை அன்னிய மரபுகழுக்கு பணிந்து கிடையாக்க? அந்த மாமன்னர்கள் ஏன் திருக்க்கோவில்களில் சமஸ்கிருதத்தை ஆதரித்தார்கள். இங்கு அதிகம் விவரிக்க இடமில்லை. சமஸ்கிருதம் வேதவாஷை. அது அற்புதமான மந்திரசக்தி வாய்ந்தது. சமஸ்கிருத மந்திரங்களில் அடங்கிய பதங்களின் உச்சரிப்பாலும் அதன்கண் விழையும் அதி தெய்வீக அதிர்வலைகளாலும் பிரபஞ்சத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு பல நன்மைகளை அடையமுடியும் என்பது ஆராய்ச்சியின் மூலம் விளங்கும். இதையெல்லாம் உணர்ந்தே நமது மாமன்னர்களும் அறிஞர் பெருமான்களும் இவ்வளவு உன்னத திருக்கோவில்களையும் அதற்கான சமஸ்கிருத அடிப்படையிலான வழிபாட்டு முறைகளையும் படைத்துச்சென்றுள்ளனர். நாம் இன்னும் ஆழ்ந்து உறைக்குமிடத்து ஒருவேளை குடிபோதையில் உளரப்பட்டவைகளாக இருந்தால் சமஸ்கிருதமும் திருக்கோவில்களும் வெறும் கலாச்சார மரபு ஆக்கிரமிப்பு மட்டுமாக இருந்தால் எவ்வாறு இந்த திருக்கோவில்களும் அதன் உன்னத வழிபாட்டு முறைகளும் இவ்வளவு உன்னத பிராயங்கள் நிலைத்திருக்கும்? பொருளற்ற குடிபோதை உளறல்கள் எவ்வாறு பல்லாயிரமாண்டுகள் நிலைத்திருக்கும்? சிந்திக்கவேண்டாமா? நாம் நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற அம்சங்களை பகுத்தறிவு என்றெல்லாம் கூறிக்கொண்டு வாய்க்கு வந்தபடி விமர்சிப்பது நமது முன்னோர்களை இழிவுபடுத்தும் செய்யலாகும். இதில் குறிப்பிட வேண்டியது நமது உயிரினும் மேலான தாய் தமிழும் தெய்வீக வேதபாஷையான சமஸ்கிருதமும் தாயும் பிள்ளையுமாகவே நமது முன்னோர்களால் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே தகுந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உண்மையை உணரும்படி வேண்டுகிறேன்.