Posted on 17:14 Hrs,October 17th, 2009 by webeelam

ஒரு பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் மா. செங்குட்டுவன் வந்திருந்தார். கவிக்கொண்டல் செங்குட்டவன் என்று அவரை அழைப்பார்கள். திமுகவின் ஏதோ ஒரு இலக்கியப் பிரிவில் அவர் இருப்பதாக ஞாபகம். அவர் யேர்மனியோடு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று விட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பிச் சென்றதும் முரசொலி மற்றும் தினகரன் பத்திரிகையில் கவிக்கொண்டல் செங்குட்டுவன் இலக்கியப் பயணத்தை முடித்திக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் என்று பெட்டிச் செய்தியும் வந்திருந்தது.
 
திமுகவில் ஏதோ ஒரு மட்டத்தில் ஓரளவு முக்கியமானவராக அவர் இருக்கின்றார் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறேன். யேர்மனியில் உள்ள அன்னை பூபதி படிப்பகத்திற்கான பெருந்தொகை நூல்களையும் அவர் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி உதவியிருக்கின்றார்.
 
இவர் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யேர்மனிக்கு வந்த போது கண்ணதாசனின் மகள் விசாலியும் வந்திருந்தார். அவரை வைத்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விசாலி மேடையில் நின்றபடி ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேசுகின்ற போதெல்லாம் „சிலோன் தமிழர்கள்“ என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தார்.
 
எனக்கு அருகில் உட்காந்திருந்த கவிஞர் செங்குட்டுவனிடம் மெதுவாகச் சொன்னேன் „எங்களை சிலோன் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் தமிழீழத் தமிழர்கள், இப்படி அழைப்பதற்கு விசாலிக்கு தயக்கமாக இருந்தால் ஆகக் குறைந்தது ஈழத் தமிழர்கள் என்றாவது அழைக்கச் சொல்லுங்கள்“ என்றேன். அவரும் தன்னுடைய உரை வருகின்ற பொழுது இதைச் சுட்டிக் காட்டுகிறேன் என்று சொன்னார்.
 
அவருடைய உரை தொடங்கியது. நான் குறிப்பிட்ட விடயத்திற்கும் வந்தார். „தங்களை சிலோன் தமிழர்கள் என்று அழைக்க வேண்டாம் என்று எனக்கு இங்கே சொல்லப்பட்டது. அது மிகச் சரியானது. நீங்கள் தமிழீழத் தமிழர்கள், உங்களை ஈழத் தமிழர்கள் என்றுதான் அழைக்க வேண்டும். அதே வேளை இன்னும் ஒன்றைச் சொல்ல வேண்டும். நீங்களும் எங்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைக்காதீர்கள். நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள், எங்கள் நாடு தமிழ்நாடு“ இப்படி அவர் சொன்னார்.
 
தந்தை பெரியார் எழுப்பிய தனித் தமிழ்நாட்டுச் சிந்தனை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு அந்த மனிதர் சாட்சியாக நின்றார்.
 
அவர் அதைக் கூறியதன் பிற்பாடு நான் இன்றுவரை தமிழ்நாட்டுத் தமிழர்களை „தமிழ்நாட்டுத் தமிழர்கள்“ என்றுதான் அழைத்து வருகின்றேன். தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற தமிழர்களைக் காணுகின்ற பொழுது „நீங்கள் தமிழ்நாடா?“ என்றுதான் கேட்பேன். „தமிழ்நாட்டில் எந்த இடம்?“ என்று கேட்பேன். “இந்தியா” என்றும் மறந்தும் உச்சரிப்பது இல்லை.
 
கவிஞர் செங்குட்டுவன் கூறினார் என்பதற்காக மட்டும் என்று இல்லை. „இந்தியா“ என்பது என்ன என்கின்ற தெளிவான புரிதலும் எனக்கு இருப்பது இதற்கு முக்கியமான ஒரு காரணம்.
 
……………………
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் ஒரு எழுத்தாள நண்பரை சந்தித்தேன். „இந்தியன் என்று சொல்லடா! இமயமாக நில்லடா!“ என்ற கோசத்தை தன்னுடைய பெயரோடு இணைத்திருந்தார்.
 
நாங்கள் இணையத்தில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கடுமையாக வைக்கின்ற பொழுது எம்மை எதிர்த்து வாதிடுவார். இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கண்டால் பொங்கிக் கொண்டு வந்து விடுவார். அவர் யார் என்று தெரியாமலேயே அவர் மீது உச்சக்கட்ட வெறுப்பு எனக்குள் படர்ந்திருந்தது.
 
ஆனால் வேறு இணையங்களில் தமிழீழத்திற்கு ஆதரவாகவும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் அவர் எழுதிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். எனக்கு சற்றுக் குழப்பமாக இருந்தது.
 
அவரோடு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்த பொழுது இதை நேரடியாகவே கேட்டேன். „திராவிடக் கொள்கைகளை ஆதரிக்கின்ற நீங்கள் எப்படி இந்தியத் தேசியத்தை ஆதரிக்கின்றீர்கள்“ என்ற என்னுடைய கேள்வியைக் கேட்டு அவர் சிரித்தார்.
 
சிரித்துக் கொண்டே „உண்மையில் எனக்கு இந்தியத் தேசியம் என்றாலே வாந்திதான் வரும். நான் இந்திய தேசியத்தை வெறுப்பவன், ஆனால் விடுதலைப் புலிகள் இந்தியாவோடு நட்பை நாடி நின்ற சூழலில் உங்கபை; போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை கூறிக் கொண்டு திரிந்தது எனக்கு சரியான ராஜதந்திர நகர்வாகப் படவில்லை, அதனாற்தான் வேண்டுமென்றே இந்தியா தேசியத்தை ஆதரிப்பது போன்று நடித்து உங்களோடு முரண்பட்டேன்“ என்றார்.
 
அந்த நேரம் உண்மையாகவே விடுதலைப் புலிகள் இந்தியாவின் நட்பை நாடித்தான் நின்றார்கள். இந்தியாவை „தந்தையர் நாடு“ என்று வேறு சொன்னார்கள். கடைசியில் தந்தையர் நாடு தமிழர்களின் உச்சந் தலையில் ஆணி அறைந்து விட்டது. இது ஒருபுறம் இருக்கட்டும். மீண்டும் அந்த எழுத்தாள நண்பரிடம் வருவோம்.
 
„இந்தியா“ என்ற சொல்லைக் கேட்டால் எனக்கு எப்படியான உணர்வு ஏற்படும் என்பதை விளக்குவதற்கு சொல்லைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன விதம் மிகவும் பிடித்துப் போய் விட்டது.
 
„வாந்தி வரும்“ இதை விட அழகாக அந்த உணர்வைச் சொல்ல முடியாது. ஈழத் தமிழன் தன்னை „சிறிலங்கன்“ என்று சொல்கின்ற பொழுதும் எனக்கு வாந்தி வரும். தமிழ்நாட்டுத் தமிழர்கள் யாராவது „இந்தியா“ என்று பிதற்றினாலும் வாந்தி வரும். இதையே மாறி ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களை „இந்தியர்கள்“ என்றும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மை „சிலோன்காரர்கள்“ என்றும் அழைக்கின்ற போதும் வாந்தி வரும்.
 
அந்த எழுத்தாள நண்பரின் பெயரை இங்கே நான் குறிப்பிடவில்லை. இப்பொழுது அவர் தமிழ்நாட்டின் வெகுசன ஊடகங்களில் எழுதிக் கொண்டிருக்கின்றார். பலர் கவனிக்கும் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வருகின்றார். அவருடைய „இந்திய வாந்தி நிலைப்பாடு“ பற்றி இப்பொழுது வெளிப்படையாகப் பேசுவாரா என்று தெரியவில்லை. இன்னும் வளர்ந்த பிற்பாடு பேசக் கூடும்.
 
பலரைப் போன்று அவரும் மனதுக்குள் புழுங்கிக் கொண்டு விடிவுக்காக காத்திருக்கிறார் என்பதுதான் இங்கே சொல்ல வருகின்ற விடயம். 

……………………

 
இப்படியான உணர்வுகள் இருப்பது இந்திய அதிகார வர்க்கத்திற்கு தெரியாமல் இல்லை. அது தன்னுடைய பங்கிற்கு „தேச பக்தியை“ ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகளில், புத்தகங்களில், தொலைக்காட்சிகளில், திரைப்படங்களில் என்று எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தேசபக்தியை அது விளம்பரம் செய்கின்றது.
 
அண்மையில் „பசங்க“ என்று ஒரு படம் பார்த்தேன். சிறுவர்கள் கதை நாயகர்களாக நடித்த ஒரு நல்ல படம். ஆனால் படம் முழுவதும் ஒரே இந்திய தேசிய மயம். இந்தியக் கொடிகள், ராஜீவ்காந்தி படங்கள், சிறுவர்களின் சண்டையை நிறுத்துவதற்கு ஜனகணமண என்கின்ற உச்சக்கட்ட நகைச்சுவை என படம் முழுவதும் இந்திய வாந்தி மயம். படம் முடிவதற்குள் எனக்கு அடிக்கடி குமட்டி விட்டது.
 
„பசங்க“, „உன்னைப் போல் ஒருவன்“ என்று இந்திய அதிகார வர்க்கம் தன்னுடைய பரப்புரையில் திறைமையாகத்தான் இருக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழ் தேசிய சிந்தனை வளரக் கூடிய நேரத்தில் இப்படியான திரைப்படங்கள் தொடர்ந்து வருவதை கவனித்துப் பார்க்க வேண்டும்.
 
திரைப்படங்கள் என்று இல்லை. ஏற்கனவே சொன்னது போன்று அனைத்து வழிகளிலும் இந்திய அதிகார வர்க்கம் தன்னுடைய வாந்தியை மக்கள் மீது எடுக்கிறது. இதை சுத்தம் செய்ய யாராவது புறப்பட்டால் „தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்“ உள்ளே செல்ல வேண்டியதுதான்.
 
சிறிலங்காவின் பயங்கரவாதச் சட்டத்திற்கு இணையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புச் சட்டம். ஒருவரை விசாரணை இன்றியே ஓராண்டு காலம் உள்ளே வைத்திருக்கலாம். ஆனால் இதுவரை யாரும் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு இந்திய உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு துணியவில்லை. அப்படிச் செல்பவர்களை „தேசத் துரோகிகளாக“ இந்திய அதிகார வர்க்கம் முத்திரை குத்தி விடும்.
 
ஆனால் இவைகளை எல்லாம் மீறி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் விடுதலையை நாடி நிற்கின்ற மக்கள் இருக்கின்றார்கள்.
 
…………………… 
 
வழமையாக நான் எழுதுவது போன்று இல்லாமல் என்னுடைய சில அனுபவங்களையும் கருத்துக்களையும் சேர்த்து இங்கே எழுதியிருப்பதற்கு காரணம் இருக்கின்றது.
 
„இந்தியா எமக்குப் பக்கத்தில் இருக்கின்ற வரை தமிழீழத்தை எம்மால் பெற முடியாது“ என்று சிலர் சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. உலகத்திலே இருக்கின்ற மிகப் பெரிய உண்மைகளில் இதுவும் ஒன்று. இந்தியா எமக்கு அருகில் இருக்கின்ற வரை எம்மால் தமிழீழத்தை அமைக்க முடியாது. இந்தியாவோடு நாம் கெஞ்சினாலும் சரி, கொஞ்சினாலும் சரி, அது தமிழீழத்தை அமைக்க விடாது.
 
ஆகவே இந்தியா எமக்கு அருகில் இருக்கக் கூடாது. தமிழீழம் அமைக்க வேண்டும் என்ற சிந்தனையோடு யாராவது இருந்தால் அவர்கள் இதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். 
 

இந்து சமுத்திரத்தில் இருந்து இந்தியாவை எப்படி பெயர்த்து எடுக்கலாம் என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இதை நோக்கி எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். இந்த நலன் சார்ந்து எமது நட்புக் கூட்டணியை உருவாக்க வேண்டும்.
 
இதைப் பற்றி ஆழமாக விரிவாக எழுத வேண்டும். ஒரு வரைவை உருவாக்க வேண்டும். அப்படி எழுதுவதற்கான முன்னுரையின் ஒரு சிறிய பகுpதியே மேலே எழுதியிருப்பது. இத்தனை இழப்புகளுக்குப் பின்னரும் தோல்விகளுக்குப் பின்னரும் தமிழீழம் அமைவதற்காக மிச்சம் இருக்கின்ற வழிகளைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுவோம்.

- வி.சபேசன்

Posted in தமிழீழம் | Read More »

Comments

yoga on 17 October, 2009 at 7:27 pm #

athu onrum naam perithaaka aladdi kozha theavai illai seenaakkaaran paaththukuvaan


k.pathi on 18 October, 2009 at 3:44 am #

இப்போதுதான், நீங்கள் என்னைப்போல் சிந்த்திக்கிறீர்கள்!
இந்தியா உடைவதுதான்,உலகத்தின் பரந்துபட்டு வாழும் தமிழ் இனத்துக்கு நல்லது!
பூனைக்கு யார் மனி கட்டுவது?
நாம் நமது பங்குக்கு,இப்படி யோசிப்பதே,ஒரு நல்ல ஆரம்பம்!
தெலுங்கனாகிய,எனக்கு இருக்கும் ஆர்வம்,தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழ் இனத்து மக்களுக்கு இல்லாமல் போனது சற்று துரதிர்ஷ்டமான விடயம்


வெண்காட்டான் on 18 October, 2009 at 10:07 am #

என் மனதில் என்ன இருக்கிறதோஅதை அப்படியே எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.


k.pathi on 18 October, 2009 at 12:48 pm #

(திரு)வெண்காட்டான் - அதாவது மங்கைமடம் அருகில்?


thamilmullai on 18 October, 2009 at 1:03 pm #

இந்திய உடைவு தமிழினத்திற்கு மட்டும்மல்ல, தெற்காசியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் விடுதலையைப் பெற்றுத்தரும்…


thamilmullai on 18 October, 2009 at 1:06 pm #

இந்திய உடைவு தமிழினத்திற்கு மட்டும்மல்ல, தெற்காசியாவில் உள்ள அனைத்து ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் விடுதலையைப் பெற்றுத்தரும்…


தமிழ் குரல் on 19 October, 2009 at 7:03 pm #

இந்தியா என்பது வாந்தி அல்ல… பிச்சைகாரனின் வாந்தி…

எவனெல்லாம் ‘ஹிந்தி’ய இறையாண்மை பேசுகிறானோ அவனெல்லாம் தமிழினத்தின் எதிரி…


k.pathi on 23 October, 2009 at 1:46 pm #

மஞ்சள் துண்டு தமிழக பேருந்துகளில் எல்லாம் இப்படி சொதப்பி இருக்கும்:
நான் ,நீ என்று சொன்னால், உதடுகள் ஒட்டாது:நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்:

மஞ்சள் துண்டு கவனத்துக்கு:
இந்தியன் என்று சொன்னாலும் உதடுகள் ஒட்டாது!
தமிழன் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்


somas on 24 October, 2009 at 2:52 am #

economic growth and awareness of protecting natural resources in varius states ,especialy southern part of india is going to be the factors, which may cause the end of indian federation.wait and see.


on 24 October, 2009 at 5:18 pm #

இப்படி தான் புலி வெல்லும் அடிக்குன்னு பீலா வுட்டு திருந்தீர்
இப்ப இதான் புது மேட்டரா
ஆனா என்ன ஒன்னு உமக்கும் ஈழம் கிடைக்க போவதில்லை அதோடு இந்தியாவும் என்றைக்கும் உடைய போவதில்லை

உங்களை போல இணைய தட்ட்சச்சு வீரர்களை வைத்து என்றைகோ ஈழம் வாங்கிய கதை தான்

இப்படி அடிக்கடி எழுதுங்க காமேடியாக இருக்கும் நாங்களும் உங்களை பார்த்து சிரித்து விட்டு போவோம்

உண்மையான இந்தியன்


ஆர்.செல்வக்குமார் on 24 October, 2009 at 5:20 pm #

இந்தியாவை மட்டுமல்ல, எந்த நாட்டை பகைத்துக் கொண்டாலும், இன்றைய சூழலில் தனி ஈழம் என்பது கனவாகவே போய்விடக் கூடிய அபாயம் உள்ளது. ஈழத்தமிழர்கள் தங்கள் நிலை குறித்து சோர்ந்து போயிருக்கும் இந்த நேரத்தில், சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமிது.


Meikandan on 24 October, 2009 at 5:56 pm #

Sabesan annah, you are reflecting the same thoughts I have been developing for the last few months. India does not deserve to be a united country or super power. The time has come to fragment India not only for the better lives of eelam tamils, but also for the oppressed people in India’s states. While China can help this course, the people inside need to be more active. I think the Maoist movement is starting to give good leadership on this count.


siruthaai on 24 October, 2009 at 10:12 pm #

சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!.


kumar on 25 October, 2009 at 11:25 am #

இந்தியாவை பகைத்துக் கொண்டல் ஈழம் கிடைக்காதாம்…. இது இந்திய பசளிகளின் வாதம்… புலிகள் இந்தியாவுக்காக(தமிழ்நாட்டுக்காக) மற்ற இந்தியாவின் எதிரி நாடுகளுடன் ஒத்துழைக்க முடியாமல் போனதுதான் புலிகளின் தோல்விக்கு ஒரு காரணமாக விளங்கியது… இனியும் இந்தியாவை நம்பினால் உள்ளதும் நாசமாகி விடும்… இந்தியா துரோகத்தின் முழு வடிவம்…


kumar on 25 October, 2009 at 11:43 am #

இந்தியாவை நம்புங்கள்…. என்ன அறிவு கெட்ட வாதம் இது? இந்தியா எந்த நாட்டுடனுமே உண்மையாக நேர்மையுடன் நடந்து கொண்டதில்லை …பாகிஸ்தானுடன் நட்பு பேசிக்கொண்டே உள்நாட்டு கலவரத்திற்கு காரணமாக இருப்பது…. நேபாளத்திலும் உல் விவகாரங்களில் தேவை இன்றி தலைஇடுவது …பங்களாதேஷிலும் இதே நிலைப்பாடு தான்… இந்தியா தன்னை சுற்றியுள்ள அணைத்து நடுகளுடனுமே நேர்மையாக இல்லாமல் பகையையே கொண்டுள்ளது….


kumar on 25 October, 2009 at 11:44 am #

இந்தியாவால் அதன் சொந்த மக்களிடமே உண்மையாக இருக்க முடியாது.. இந்திய அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களை காப்பதில் கூட உண்மையாக இருக்க முடியாது… அப்படிப்பட்ட இந்தியாவுடன் நட்பு வைப்பதை விட… அதன் நட்பை ஒதுக்குவதே ஈழம் அமைய உதவியாக இருக்கும்….


Anpalagan on 27 October, 2009 at 3:08 am #

Every single tamils are against india, we wouldn’t say
externally because its not time to say about it.
Internally we tamils are hate india,if any state try to get freedom from india we must help them there is no quation about it.


kumar on 27 October, 2009 at 11:56 am #

தமிழ் நாட்டில், இந்தியாவை ஆதரிப்போர் அல்லது வெறுப்போர் மொத்த தொகையை கூட்டினாலே 30 சதவீதம் கூட வராது… மற்ற 70 சதவீதம் பேருக்கும் இந்தியாவைப் பற்றி அவர்களுக்கு என்ன கருத்து என்று அவர்களுக்கே தெரியாது… இந்த நிலையில் தான் தமிழ் நாடு மக்கள் இருக்கின்றனர்.

தமிழ் நாட்டு மக்களுக்கு என்ன தெரியும்..? காலையில் எழுந்து அவசரமாக வேலைக்கு செல்வர்கள்..நன்றாக சாப்பிடுவார்கள் … நன்றாக தூங்குவார்கள்… இதை தவிர அவர்களுக்கு என்ன தெரியும்? இடைவேளை நேரங்களில் சினிமா பார்பார்கள் இல்லையெனில் டிவி பார்பார்கள்…

இதை தவிர அவர்களுக்கு ஏதாவது நாட்டு நடப்புக்கள் தெரிய 2 வழிகள் தான் உள்ளது..
1. பத்திரிகை 2.டிவி .. தமிழ் நாட்டின் எந்த பத்திகையுமே அல்லது டிவி யிமே தமிழர்களுக்ககவோ அல்லது தமிழ்நாட்டுக்ககவோ நடத்தப்படுவதில்லை …நடுநிலை பத்திரிகைகள் என்று எதுவுமே இல்லை..


kumar on 27 October, 2009 at 11:56 am #

ஒவ்வொரு பத்திரிகைகளுக்கும் ஒவ்வொரு காரணங்கள்..கேரளாவிற்கு ஒரு மலையாள மனோரமா போன்று.. நடுநிலையாக தமிழ்நாட்டு நலனுக்கான பத்திரிகை என்று ஒன்று கிடையாது….

தமிழ்நாட்டில் டிவி யிலோ அல்லது பத்திரிக்கையிலோ தமிழ் பற்றியோ தமிழர் நலன் பற்றியோ …தமிழினம் பற்றியோ எந்த தகவலும் வருவதில்லை… தமிழினம் என்றால் என்ன அர்த்தம் என்றே தமிழ் நாட்டில் பாதி பேருக்கு தெரியாது…. அப்படி இருக்க என்றாவது போர் நடக்கும் போதோ அல்லது ஏதோ காரணத்திற்காக..ஈழம் பற்றிய தகவல்கள் பத்திரிக்கையிலும் டிவி யிலும் வரும்…பத்திரிகையில் அரை பக்க செய்தி …டிவி யில் 2 1/2 நிமிட செய்தி அவ்வளவுதான்… இதை படிக்கும் அல்லது பார்க்கும் தமிழக தமிழனுக்கு எத்தகைய உணர்வு வரும் என்று எதிர் பார்க்கின்றீர்கள்…


kumar from chennai on 27 October, 2009 at 11:57 am #

பெரும்பாலான தமிழ் நாட்டு தமிழர்களுக்கு ஈழம் பற்றியோ அல்லது ஈழப்போராட்டம் பற்றியோ தெளிவான ஒரு அறிவோ கிடையாது.. they really don’t know even abcd about eelam struggle… First they have to be taught what’s eelam before that who r they? what is ethnic tamil…. First let tamil nadu people know eelam understand about struggle …… now tamilnadu people understanding all problems of eelam tamil….. then only we can blame tamilnadu people for not supporting 4 eelam cause…


k.pathi on 29 October, 2009 at 3:41 pm #

நான் இத்தாலி துணிகளை சலவை செய்யும் பாங்கு அளவிடற்கரியது:
மனிமொழி பேசும் கனிமொழி நங்கையை அமைச்சர் ஆக்க நான் எடுக்கும் முயற்ச்சிக்கு….
மானம் போனால் என்ன?மயிர் போனால் என்ன, பதவிதானே எனக்கு முக்கியம்?


Meikandan on 5 November, 2009 at 12:00 am #

Pathi,

Latest news is, that Manjal thundu’s daughter has purchased 250 acres of land in Sri Lanka (rumoured to be in sinhala area) when she came to see the imprisoned eelam Tamils. Now I see why they showered Mahinda with ‘ponnadai’. These guys cannot forget about their business deals even when coming to see the hardships of their brothers and sisters. I suspect now Mr. Manjal Thundu has started taking bribe from Mahinda as well for not to speak for eelam tamils in exchange of ‘business leads’ and property.

First Manjal thundu needs to be put in his place by Tamilnadu people to forge good tamil unity. Compare Manjal thundu with MGR or Annathurai. MGR and Annathurai are true champions of the rights of world tamils. Manjal thundu — just good for selling his people.


Pudukkottaiyan on 5 November, 2009 at 4:45 am #

Nanbargal Meikandar, Pathi, etc.
Annathurai- Thannudaiya Thamil arivaiyum pechu aatralaiyum payanpaduthi katchiyai valarkkavum ariyanai era mattume seithavar. Unmaiayaana tamil unarvaalar allar. Tamil Nadu ippadi adimaippattu kidappatharrku mukkiya kaarana karthaakkalul oruvar!!!

Kayamainidhi, Kolaignan, ‘Karuna’, Dabur Mama endru ithanai peyargal irukka why Manjal Thundu? Kani iruppa kaai kavarvathu en?


k.pathi on 6 November, 2009 at 2:21 pm #

it is not a surprise to see “kanimuzhi” got lands @ srilanka:they will go to any extend to “earn” their daily bread…sometimes,they will sell THEMSELVES!
Oh, what a shame?


ravi on 2 January, 2010 at 2:55 pm #

ungal kadduraikku valthu
palamoli sollava vayithu kuthai nambinaalum vadakkanai nambakudathu .nanri
ravi from some where


k.pathi on 3 March, 2010 at 6:02 am #

come on brothers!
don’t be tired:
we will teach a lesson to those who betrayed us


k.pathi on 9 July, 2010 at 2:45 pm #

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் ?
ஒரு பக்கம் கேபரா டான்சர் :மறுபக்கம் மஞ்சள் துண்டு மாவீரன் :
இரண்டுபேரும் மாறி மாறி தமிழனை பலிகடாவாக்கி ……
மக்கள் மனது மாறும்போது ஒடி ஒழிய முடியாது


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99