லண்டனில் இருந்து வெளிவருகின்ற “ஒரு பேப்பர்” என்னும் பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் நிறைய இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். கட்டுரை எழுதி அனுப்பிய பிற்பாடுதான் „அவரும் இந்தியாவைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார், இவரும் இந்தியா சம்பந்தமாகத்தான் எழுதியிருக்கிறார்“ என்று சொல்வார்கள். அந்த அந்த நேரங்களில் பரப்பாக இருக்கின்ற விடயங்கள் பற்றி பலரும் எழுதுவது இயல்பான விடயம்தான்.
இப்படித்தான் „நாடு கடந்த அரசு“ பற்றிய அறிவிப்பு வந்தவுடன் ஒரு பேப்பரில் அதைப் பற்றி ஏழு கட்டுரைகள் வந்தன. என்னுடைய கட்டுரையும் அதற்குள் அடக்கம். அதே போன்று கடந்த முறை பல இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் ஒரு பேப்பரில் இடம் பெற்று விட்டன. இந்திய எதிர்ப்புப் பரப்புரையை ஒரு பேப்பர் முன்னின்று நடத்துவது போன்று ஒரு தோற்றத்தையும் இது ஏற்படுத்தியிருக்கலாம்.
இதில் அப்படி ஒன்றும் தவறும் இல்லை. இந்தியா பற்றிய தெளிவை தமிழ் மக்களுக்கு வழங்குவது ஊடகங்களின் கடமை. இந்தியாவின் காலில் விழுந்தால் தமிழ் மக்களின் உரிமை கிடைத்து விடும் என்று நம்புகின்ற அரசியல் அறிவிலிகள் பல மட்டங்களில் காணப்படுகின்ற நிலையில் இது மிகவும் தேவையானது.
…………………………….
„இந்தியா என்கின்ற வந்தி“ என்று நான் எழுதிய கட்டுரைக்கு பல தமிழ்நாட்டுத் தோழர்கள் வரவேற்பை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் சில ஈழத் தமிழர்களுக்கு ஒரு அச்சம் வந்து விட்டது. இப்படி தொடர்ந்து இந்தியாவை எதிர்த்து எழுதிக் கொண்டிருந்தால்;, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சுற்றுலா செல்வதற்கு விசா பெறுவது சிக்கலாகி விடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
இப்படியான மனிதர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. தினம் தினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் விடுதலை பற்றியும்;, இந்திய வல்லாதிக்கத்தின் பிடியில் சிக்குப்பட்டிருக்கும் பல இனங்களின் விடுதலை பற்றியும் பேசுகின்ற பொழுது தமது சுற்றுலா பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று எண்ணுகின்ற மனிதர்களும் எமக்குள் இருக்கின்றார்கள் என்பது வேதனையானது.
…………………………….
தமிழீழத்திற்கான ஆயதப் போராட்டம் முழு வீச்சுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தவர்கள் சொன்ன காரணங்களில் ஒன்று „இந்தியாவை மீறி தமிழீழத்தை எம்மால் அடைய முடியாது“ என்பது. ஆகவே தமிழீழப் போராட்டத்தைக் கைவிட்டு இந்தியா அனுமதிக்கின்ற ஒரு அரைகுறைத் தீர்வோடு தமிழர்களை இணங்கிப் போகும்படி இவர்கள் அறிவுறித்தினார்கள்.
அரைகுறைத் தீர்வுகள் தமிழினத்திற்கு நீண்ட கால நோக்கில் பலத்த அழிவையே கொடுக்கும் என்பதை உணர்ந்திருந்த விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் உறுதியாக நின்றார்கள். இப்பொழுதும் அப்பொழுதும் இந்தியாவை மீறி தமிழீழத்தை அமைப்பதற்கு இரண்டு வழிகள்தான் இருந்தன.
இந்தியாவால் வெல்லப்பட முடியாத ஒரு படையணியை கட்டி எழுப்புவது என்பது அதில் ஒரு வழி. இதையே விடுதலைப் புலிகள் முயற்சித்தார்கள் என்று சொல்ல வேண்டும். இந்தியா தமிழீழத்தை அமைக்க விடாது என்பதிலும் ஒரு நேரத்தில் இந்தியாவோடு மோத வேண்டி வரும் என்பதில் தேசியத் தலைவர் தெளிவாகவே இருந்தார்.
முடிந்தவரை மோதலை தவிர்க்க முயல்வது என்பதன் அடிப்படையில் சில விட்டுக் கொடுப்புக்களையும் அவர் செய்தார். ஆயினும் 87இல் இந்திய ஈழப் போர் மூண்டது. கரந்தடிப் போர் முறையில் சண்டையிட்டபடி ராஜதந்திர வழிகளையும் கையாண்டு அந்த நெருக்கடியில் இருந்து தமிழீழப் போராட்டத்தை தேசியத் தலைவர் காப்பாற்றினார்.
அதன் பின்பு நடைபெற்ற ராஜீவ்காந்தி அழித்தொழிப்பு நடவடிக்கையின் பயனாக இந்தியா ஒரு பத்தாண்டு காலம் தமிழீழப் போராட்டத்தில் தலையிடாமல் சற்றுத் தள்ளியே நின்றது. இந்தக் காலகட்டத்தில் தமிழீழப் விடுதலைப் புலிகளின் படைபலத்தை தேசியத் தலைவர் அதிகரித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா மீண்டும் தலையிட்டு தமிழீழப் போராட்டத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கத் தொடங்கியது. ஓயாத அலைகள் மூன்றில் இந்தியாவின் தலையீட்டை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியாவோடு முடிந்தளவு நட்பாக போவதற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்தனர். இந்தியாவால் வெல்லப்பட முடியாத பலத்தை அடையும் வரை இந்தியாவுடனான மோதலை தவிர்ப்பதற்கு விடுதலைப் புலிகள் அனைத்து வழிகளையும் கையாண்டனர். வெல்லப்பட முடியாத பலம் என்கின்ற இலக்கை அடைந்து விட்டால் இந்தியா வேறு வழியின்றி தமிழீழத்தை சகித்துக் கொள்ளும் என்பது விடுதலைப் புலிகளின் கணிப்பாக இருந்திருக்கக் கூடும்
…………………………….
இன்றைக்கு இந்தியா சொந்தம் கொண்டாடும் காஸ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் வைத்திருக்கிறது. ஒரு பகுதியை சீனா வைத்திருக்கிறது. இந்தியா வாயை மூடிக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவாவது இந்தியாவை விட பலமானது. ஆனால் பாகிஸ்தான் இந்தியா அளவிற்கு பலமானது அல்ல. அப்படியிருந்தும் பாகிஸ்தானுடனான போரில் தனக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை கணக்குப் போட்டு விட்டு இந்தியா வாயை மூடிக் கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் காஸ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு நின்று விடவில்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு போராளிகளை பயிற்சி கொடுத்து அனுப்புகிறது. மும்பை போன்ற இடங்களில் நடத்தப்படுகின்ற தீவிரவாதத் தாக்குதல்களுக்கான ஏற்பாடுகள் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. ஆனால் இந்தியா பாகிஸ்தானோடு போருக்குப் போகவில்லை.
இந்தியா என்பது ஒரு நாடு இல்லை என்பதற்கும், இந்தியா என்பதற்கு இறைமை இல்லை என்பதற்கும் காஸ்மீர் விவாகாரமே ஒரு உதாரணம். பல நாடுகளை ஒன்றாக இணைத்து வெள்ளையர்கள் நிர்வாகித்தார்கள். அந்த நிலப் பகுதியை இந்தியா என்று சொன்னார்கள். அவ்வளவுதான். இன்றைக்கு தன்னை இந்தியன் என்று மார்தட்டுபவனின் தாத்தாவின் தாத்தாவிற்கு இந்தியா என்றாலே என்னவென்று தெரிந்திருக்காது.
இதைப் பற்றி பின்பு பார்ப்போம். இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். வெல்லுவது கடினம் என்றாலோ, போரில் தனக்கு ஈடு செய்ய முடியாத அழிவு வரும் என்றாலோ எதிரியை சகித்துக் கொண்டு இந்தியா பேசாது இருந்து விடும். தமிழீழ தேசத்தையும் வெல்லப்பட முடியாத ஒரு நாடாக விடுதலைப் புலிகள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றமும், தமிழீழப் போராட்டத்தை இல்லாமல் செய்வதில் இந்தியா காட்டிய உறுதியும் எமது இலக்கை நாம் அடைய முடியாதபடி செய்து விட்டது.
…………………………….
இந்தியாவை அனுசரித்தும் சமாளித்தும் குறுக்கால் ஓடி தமிழீழத்தை உருவாக்கும் எமது முயற்சி வெற்றியை தரவில்லை. மிகப் பெரிய அழிவுகளைத்தான் எமக்கு தந்திருக்கின்றது. இப்பொழுது மீண்டும் சிலர் இந்தியாவின் மனதை மாற்ற முடியும் என்று புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வெளியுறவு பற்றி வகுப்பெடுக்க முனைகின்றார்கள்.
சீனா சிறிலங்காவை பயன்படுத்தி இந்தியாவின் தென்பகுதியை அச்சுறுத்துமாம். ஆகவே இந்தியா தமிழீழத்தை ஆதரிக்க வேண்டுமாம் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் எழுதியும் கூறியும் வருகிறார்கள். இதனால் இந்தியாவின் மனது மாறி விடும் என்று நம்புகின்றார்கள். இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காத ஒன்றை தாம் சிந்தித்து விட்டதாகவும் இவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவினை ஆள்கின்ற ஆரிய பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையை பற்றி சிந்திக்காது, இந்தியாவை தமிழீழத்திற்கு ஆதரவாக மாற்றலாம் என்று நம்புவது மிகப் பெரும் ஏமாற்றத்தையே மீண்டும் கொடுக்கும்.
இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி தமிழீழத்தை ஆதரிக்கும் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகளுக்கு இருந்தது இல்லை. அவர்கள் இந்தியா பற்றி தெளிவாகவே இருந்தார்கள். கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி பலர் பலவிதமாகப் பேசுவார்கள். காங்கிரஸ் கட்சி தோற்று பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இந்தியா தம்மை ஆதரிக்கும் என்று விடுதலைப் புலிகள் நம்பியதாக சிலர் கூறுகிறார்கள். இது மிகப் பெரிய தவறான கூற்று. விடுதலைப் புலிகள் ஒருபோதும் அப்படி நம்பியிருக்கவில்லை.
இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டில் பெரிதான மாற்றம் எதுவும் வந்துவிடப் போவது இல்லை என்பது விடுதலைப் புலிகளுக்கு நன்கு தெரியும். ஆயினும் விடுதலைப் புலிகள் காங்கிரஸ் கட்சி தோற்பதை விரும்பினார்கள் என்பது ஒருவகையில் உண்மைதான். தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தை ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிடுவது போன்று அறைகூவலும் விடுத்தார்கள். ஆனால் இதற்கான காரணம் வேறு. காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களைப் பெறுவதன் மூலம் ஒரு வலுவற்ற ஆட்சி இந்தியாவில் உருவாகும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்தியாவில் வலுவற்ற ஆட்சி உருவானால் அப்பொழுது ஏற்படும் குழப்பங்களை சமாளிப்பதற்கே இந்தியாவிற்கு நேரம் போதுமாக இருக்கும். இந்த நிலையில் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஈழப் பிரச்சனையில் தலையிடுவதற்கு துணியும் என்றும் அவர்கள் கணித்திருந்தார்கள். மேற்குலக நாடுகள் தலையிடுவதன் மூலம் அழிவுகளை தடுப்பதோடு ஒரு தற்காலிக ஓய்வையும் அமைதியையும் உருவாக்க முடியும் என்று விடுதலைப் புலிகள் நினைத்தார்கள். ஆனால் முன்பு இருந்ததை விட இந்;தியாவில் ஒரு வலுவான ஆட்சியே உருவானது. இதனால் மேற்குலக நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்னடித்தன.
…………………………….
மொத்தத்தில் இந்தியாவை அருகில் வைத்துக் கொண்டே அதைக் கையாள்வதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் பலனைத் தரவில்லை. எமது முதலாவது வழி முறை தோல்வியை தழுவி விட்டது. பலத்த அழிவையும் தந்து விட்டது. இதை ஏற்றுக் கொள்ளாது மீண்டும் இந்தியாவை நம்பிக் கொண்டு யாராவது புறப்பட்டால் அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தான் தெரிவிக்க முடியும்.
இப்பொழுது இரண்டாவது வழி பற்றி நாம் பேச வேண்டும். இரண்டாவது வழி என்பது இந்தியாவை இல்லாமல் செய்வதுதான். ஏற்கனவே சொன்னது போன்று இந்தியா தமிழீழத்திற்குப் பக்கத்தில் இருக்கக் கூடாது. தமிழீழ தேசத்திற்கு இன்றைக்கு இருப்பது இரண்டு எதிரிகள்தான். ஒன்று சிறிலங்கா மற்றது இந்தியா. இந்தியாவை வெற்றி கொள்ளாது எம்மால் சிறிலங்காவை வெற்றி கொள்ள முடியாது.
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. பல நாடுகள் விருப்பத்தோடும் கட்டாயத்தோடும் இணைக்கப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் இந்தியா. தென்பகுதியில் உள்ள தமிழ்நாட்டில் இருந்து வடபகுதியில் உள்ள காஸ்மீர் வரை விடுதலை வேண்டிப் போராடும் மக்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள். ஒரிசாவில் இருந்து புதுடில்லிக்குப் போவதை “இந்தியாவிற்கு போகிறோம்” என்று சொல்கின்ற மக்கள் வாழ்கின்ற நிலப்பரப்புதான் இந்தியா.
பீகாரில் இருந்து ஆந்திரா வரை மாவோயிச தீவிரவாதிகளின் ஆதிக்கம் வேறு இருக்கின்றது. இந்தியாத் துணைக் கண்டத்தின் பல காடுகளும் கிராமங்களும் இவர்களின் செல்வாக்கில்தான் இருக்கின்றன. சிறிலங்காப் படைகளின் முற்றுகை இறுக்கமடைந்திருந்த நிலையில் தேசியத் தலைவர் தப்பிச் செல்லக் கூடிய இடமாக மாவோயிச தீவிரவாதிகளின் காடுகள் சிலரால் சுட்டிக்காட்ப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் அவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருக்கின்றார்கள்.
ஆயினும் விடுதலைப் புலிகள் இந்தியாவில் உள்ள போராளி இயக்கங்களோடு சரியான முறையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை. அவர்களின் காடுகளில் தமது தளங்களை உருவாக்கியருக்கவில்லை. இந்தியாவைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும், இந்தியாவை அதிகம் கோபப்படுத்தக் கூடாது என்ற சிந்தனையில் இவைகளை தவிர்த்து விட்டார்கள்.
இப்பொழுது நாம் விடுதலைப் புலிகள் செய்யத் தவறியவைகள் பற்றியும் பேச வேண்டும். இந்தியாவில் விடுதலைக்குப் போராடும் மக்களோடு இணைந்து வேலை செய்வது பற்றி நாம் விவாதிக்க வேண்டும். தமிழீழ தாகத்தை கைவிடாது விடுதலைக்கான வழிகள் பற்றி தொடர்ந்து பேசுவோம்.
-வி.சபேசன்
No bastard can or could take a single bit from MOTHER INDIA
If you want freedom you fight against your country
இதேதான் என்னோட முடிவும். ஆனால் இதன் தொடக்கப்புள்ளிதான் பிரச்சனையே. எங்க எதில இருந்து ஆரம்பிக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நாம் இலங்கையுடன் இணைந்து செயப்பட வேண்டிய காலமிது. இந்தியாவை எதிர்த்து இலங்கையுடன் இணைந்து செயப்பட வேண்டும். தமிழர் எதிரி (இந்தியா) முடிந்தவுடன், ஈழ எதிரியுடன் அதன் அப்போதய காலகட்ட மொழியில் பேசலாம். இவை எல்லாத்துக்கும் மேலாக புதிய தலைமை மிக மிக அவசிய்ம்.
தமிழர் நாட்டை ஈழ தமிழர் ஏன் ஆதரிக்க வேண்டும்?
ஈழத்தை போலவே தமிழ்நாட்டை, இந்தியா தனது காலனியாகத்தான் நடத்துகிறது. போர் நிறுத்தம் கோரி நாம் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, படையினரை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்கும் போரை இயக்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளவில்லை.மாவீரன் முத்துக்குமார் தொடங்கி 14 தமிழகத் தமிழர்கள் தீக்குளித்து சாவைத் தழுவியும் இந்தியா மனமிரங்கவில்லை. தமிழ் இனத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள பகை, வரலாற்று வழி வந்த தமிழர் - ஆாியர் பகையின் தொடர்ச்சியே.
நாம் “இந்தியர்” அல்லர்;, தமிழர்களே! நாம் “திராவிடர்கள்” அல்லர், தமிழர்களே!
தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம். இறையாண்மை யுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்காக இருக்கவேண்டும்.ஈழம் தனி நாடாகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்ற கருத்து, சமூக அறிவியலுக்கும், இயங்கியல் விதிகளுக்கும் புறம்பான நிலைபாடு. ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்புாியுமே அன்றி ஒன்றுக்குப்பின் இன்னொன்று செயல்படும் என்பது பிழையான கோட்பாடு. ஏனெனில் இரண்டு போராட்டங்களுக்குமே பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது. எனவே இரு தமிழினங்களும் இணைந்து செயல்பட அருமையான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.. அந்த காலம் முதல் ஈழதமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நாம் மறுக்க முடியாது..
ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழகத் தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். தமிழகத்தின் தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தை “ஈழத்தமிழர்கள்” ஆதரிக்கவேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றின் தாக்கம் இன்னொன்றை ஊக்கப்படுத்தும். ஈழ விடுதலைப் போர் முன்னேறிச் சென்றால் களிப்படைவது, அதில் பின்னடைவு நேர்ந்தால் துயரப்படுவது என்பது மட்டும் போதாது. ஈழ விடுதலைப்போர் கிாிக்கெட் விளையாட்டல்ல. நாம் காலரியில் உட்கார்ந்து கையொலி எழுப்புவோரும் அல்லர். அது இன விடுதலைப்போர். விடுதலைப் புலிகள், தங்கள் தாயகத்திற்குப் போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்குப் போராட வேண்டாமா? தமிழ்மொழி உணர்ச்சி மட்டும் போதாது, தமிழ் இன உணர்ச்சியும் வேண்டும். தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டத்தைத் தேர்தல் கட்சிகளால் நடத்த முடியாது. தமிழர்களிடையே இன உணர்ச்சி எழுச்சி கொள்வதற்கேற்ப, அதற்கு ஈடு கொடுத்துத் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, போலியாக இன முழக்கங்களை எழுப்பி, உணர்வாளர்களைத் திசைதிருப்பிவிடும் அக்கட்சிகள்.
தேர்தலுக்கு வெளியேதான் தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டக்களம் இருக்கிறது. அப்போராட்டம் தமிழ்நாட்டில் மக்கள் திரள் போராட்டமாக எழுந்தால்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆயுதக் குழுப்போராட்டம் இங்கு மக்களை ஈர்க்காது. பணம் - பதவி - விளம்பரம் மூன்றிற்கும் ஆசைப்படாத இளைஞர்கள் இந்தப் போராட்டத்திற்கு முன்வரவேண்டும்.
தேனீக்கு அஞ்சினால் தேனெடுக்க முடியாது. தியாகத்திற்கு அஞ்சினால் தேசம் அமைக்க முடியாது. அன்னையின் மடியில் அனாதையாய், சொந்த மண்ணில் ஏதிலியாய் இழிவடையக் கூடாது. தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் தேவை. நேரடியாகப் போராட்டங்களில் பங்கு பெறுவோர், சிறைக்கஞ்சாதவர், முழுநேரச் செயல்வீரர்கள், பகுதி நேரச் செயல்வீரர்கள்;, ஓய்வு நேரத்தில் பணிபுாிவோர், ஒதுங்கி நின்று உதவி புாிவோர், கருத்துரை வழங்குவோர், கலை இலக்கியப் படைப்பாளிகள், இவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ளும் மக்கள்; இவ்வாறான தேசியச் சமூக ஒருங்கிணைப்பு தேவை.
புரட்சிகரதமிழ்தேசியன்
தமிழர் நாட்டை ஈழ தமிழர் ஏன் ஆதரிக்க வேண்டும்?
ஈழத்தை போலவே தமிழ்நாட்டை, இந்தியா தனது காலனியாகத்தான் நடத்துகிறது. போர் நிறுத்தம் கோரி நாம் எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும், இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, படையினரை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்கும் போரை இயக்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளவில்லை.மாவீரன் முத்துக்குமார் தொடங்கி 14 தமிழகத் தமிழர்கள் தீக்குளித்து சாவைத் தழுவியும் இந்தியா மனமிரங்கவில்லை. தமிழ் இனத்தின் மீது இந்தியாவுக்கு உள்ள பகை, வரலாற்று வழி வந்த தமிழர் - ஆாியர் பகையின் தொடர்ச்சியே.
நாம் “இந்தியர்” அல்லர்;, தமிழர்களே! நாம் “திராவிடர்கள்” அல்லர், தமிழர்களே!
தமிழ்நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத் தமிழர்களை இன அழிவிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். தமிழ்நாட்டில் ஆறரைக்கோடி மக்கள் இருக்கிறோம். இறையாண்மை யுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதே நமது இலக்காக இருக்கவேண்டும்.ஈழம் தனி நாடாகட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம், என்ற கருத்து, சமூக அறிவியலுக்கும், இயங்கியல் விதிகளுக்கும் புறம்பான நிலைபாடு. ஒன்றின் ஊடாக இன்னொன்று செயல்புாியுமே அன்றி ஒன்றுக்குப்பின் இன்னொன்று செயல்படும் என்பது பிழையான கோட்பாடு. ஏனெனில் இரண்டு போராட்டங்களுக்குமே பகை அரசாக இந்திய அரசு இருக்கிறது. எனவே இரு தமிழினங்களும் இணைந்து செயல்பட அருமையான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.. அந்த காலம் முதல் ஈழதமிழருக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நாம் மறுக்க முடியாது..
ஈழ விடுதலைப் போராட்டத்தைத் தமிழகத் தமிழர்கள் ஆதரிக்கவேண்டும். தமிழகத்தின் தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்தை “ஈழத்தமிழர்கள்” ஆதரிக்கவேண்டும். ஒரே நேரத்தில் ஒன்றின் தாக்கம் இன்னொன்றை ஊக்கப்படுத்தும். ஈழ விடுதலைப் போர் முன்னேறிச் சென்றால் களிப்படைவது, அதில் பின்னடைவு நேர்ந்தால் துயரப்படுவது என்பது மட்டும் போதாது. ஈழ விடுதலைப்போர் கிாிக்கெட் விளையாட்டல்ல. நாம் காலரியில் உட்கார்ந்து கையொலி எழுப்புவோரும் அல்லர். அது இன விடுதலைப்போர். விடுதலைப் புலிகள், தங்கள் தாயகத்திற்குப் போராடுகிறார்கள்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் தாயகத்திற்குப் போராட வேண்டாமா? தமிழ்மொழி உணர்ச்சி மட்டும் போதாது, தமிழ் இன உணர்ச்சியும் வேண்டும். தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டத்தைத் தேர்தல் கட்சிகளால் நடத்த முடியாது. தமிழர்களிடையே இன உணர்ச்சி எழுச்சி கொள்வதற்கேற்ப, அதற்கு ஈடு கொடுத்துத் தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, போலியாக இன முழக்கங்களை எழுப்பி, உணர்வாளர்களைத் திசைதிருப்பிவிடும் அக்கட்சிகள்.
தேர்தலுக்கு வெளியேதான் தமிழ்த் தேசத் தாயகத்திற்கான போராட்டக்களம் இருக்கிறது. அப்போராட்டம் தமிழ்நாட்டில் மக்கள் திரள் போராட்டமாக எழுந்தால்தான் இங்கு வெற்றி பெற முடியும். ஆயுதக் குழுப்போராட்டம் இங்கு மக்களை ஈர்க்காது. பணம் - பதவி - விளம்பரம் மூன்றிற்கும் ஆசைப்படாத இளைஞர்கள் இந்தப் போராட்டத்திற்கு முன்வரவேண்டும்.
தேனீக்கு அஞ்சினால் தேனெடுக்க முடியாது. தியாகத்திற்கு அஞ்சினால் தேசம் அமைக்க முடியாது. அன்னையின் மடியில் அனாதையாய், சொந்த மண்ணில் ஏதிலியாய் இழிவடையக் கூடாது. தமிழ்த் தேசத் தாயகப் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் தேவை. நேரடியாகப் போராட்டங்களில் பங்கு பெறுவோர், சிறைக்கஞ்சாதவர், முழுநேரச் செயல்வீரர்கள், பகுதி நேரச் செயல்வீரர்கள்;, ஓய்வு நேரத்தில் பணிபுாிவோர், ஒதுங்கி நின்று உதவி புாிவோர், கருத்துரை வழங்குவோர், கலை இலக்கியப் படைப்பாளிகள், இவர்கள் அனைவரையும் ஏந்திக்கொள்ளும் மக்கள்; இவ்வாறான தேசியச் சமூக ஒருங்கிணைப்பு தேவை.
புரட்சிகரதமிழ்தேசியன்(http://siruthai.wordpress.com)
சுண்டக்காய் சிறீலங்காவையே ஒன்னும் புடிங்கமுடியலயாம். இதுல இந்தியாவை ஒழிச்சாத்தான் சிறீலங்காவை வெல்லமுடியுமாம். நல்ல அறிவு ஜீவிங்க நிறைஞ்ச சபைதான் தமிழீழம் போல இருக்கு. தலைவன் எவ்வழி, மக்கள் அவ்வழி. போய் பொழக்க வழியப்பாருங்கப்பா.
சுண்டைக்காய் சிறிலங்காவை ஒன்றும் புடுங்க முடியாமல் போனதற்குக் காரணம் இந்தியாதான். இந்தியா இருக்கும் வரை சுண்டைக்காய் சிறிலங்காவை ஒன்றும் செய்ய முடியாதுதான். அதைப் பற்றித்தான் இங்கே பேசப்படுகிறது
dey sakthi and indian, where is your india, if your india is one country why tamil nadu not geting water from your unity indian states, why your india not stoping our poor fishermen life, india c’t andw’t because india not giving equal rights to all,
if you are tamils, think these first
My brothers & sisters of patriotic tamilnadu(INDIA).Before, u throw your (S)words on Eelam. Think one thing India is unity because of Dream world Merchants(cinema, drama and Cricket). They are the only one who tells about patriotism to the citizens. Can u think India with one religion, no cast, two languages.If punjabies can bring a referandum to seperate from so called India, they going to do that through UN, because their community is very strong through bond and well established in first world countries. So, be patience Dragon country already started its shadow government through western provinces of India. Arunachal Pradesh(born)citizens all considered as Chinese. Do u all know that? Ask your Corrupted politicians about this. China calling India Administered Kashmir has a Independent State(country). So,”STOP” worrying about us.Rather than spending money on space science, try to bring the poor peoples life better. Do u know Andhra pradesh is top province where Farmers do suicide. Last two years only there is more than 1lakh death. All because of your politicians. Thirupathi temple is one of the world richest MONEY COW. Why they cannot channel those income to the poo farmers or basic facilities like hospital, drainage, electricity, infrastructure. As Kavizar Thamarais Quote, Indias unity is hanging on SHITY RELIGION,DIRTYCAST, LANGUAGE and Corrupted politicians. So, My neighbours your unity is FRAGILE. It can break any time. As a Eelam tamil, we always thank you for your support,” not the interference”.
Tamil community in Tamilnadu used to second fiddle Delhi Dharbar!
curse , we had a cabara dancer/script writer as chief ministers for TN:
if TN is so powerful,we he couldnot go against the keral malayali team,which tilted the balance in favour of singala rogues?
time will come india will pay HEAVILY for having eradicated tamil community in srilanka!
Now india wants to adjust with eezham tamils to support india’s behind the screen tactics: NO TAMILMEN will tolerate india’s dirty role!
உங்கள் கட்டுரை எனது உணர்வுகளை தூண்டிவிட்டது!
தெலுங்கை தாய் மொழியாக கொண்டபோதிலும்,எனது முழு மூச்சும் தமிழ் ஈழம் மலர அனைத்து வழிகளிலும் உதவும்:
துரோகிகளை இனம் காணுவோம்:அப்புறப்படுத்துவோம்:
பதி
காரைக்கால்
உங்கள் கட்டுரை கற்பனை வாதமல்ல நனவாக நிறைவேறக்கூடியது. இதற்கு வர்க்க பேதங்களில் ஊறிப்போயிருக்கும் தமிழ்பேசும் மக்களிடம் ஆதரவு தேடமுடியாது. தமிழ்பேசும் மக்களிடம் அபிப்பிராயம் கேட்டிருந்தால் பிரபாகரனை முளையிலேயே கிள்ளியிருப்பார்கள், இப்போது பிரபாகரன்போல் தலைவன் வேண்டுமென்கிறார்கள். யாராவது ஒரு பொருள்வளம் கொண்ட தமிழன் உங்கள் சிந்தனையை செயல்படுத்த முன்வந்தால் ஏனைய தமிழ் மக்களும், தமிழ்பேசும் மக்களும் பின்வருவார்கள். இது யதார்த்தமானது. தமிழ்இனம் விடுதலை அடைய புதியவாசல் திறக்கும்.
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவித்த indian அவர்களது கருத்தே எனது கருத்தாக இருந்திருக்கும்.
இந்தியா தமிழ்நாட்டு மீனவர்களை அக்கறையுடன் காத்திருக்குமானால், மற்ற மாநிலங்களுடனான நீர் பிரச்சினையில் தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் நடுநிலைமையுடன் நடந்திருக்குமானால், ஹிந்தியை திணித்து தமிழை அழிக்க துணிந்திருக்காவிட்டால் ,தமிழர்கள் தங்கள் மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்க துணை புரிந்திருக்குமேயானால், அருகில் ஈழத்தை அழிக்க நினைத்திருக்காவிட்டால், கடல் கடந்து துபாய், மலேசியா நாடுகளில் பிரச்சினைகளில் சிக்கி அவதிப்படுவோரை காட்டிக்கொடுக்காமல் காப்பாற்றி இருக்குமானால், எல்லா இனத்துக்கும் சம உரிமை கொடுத்து, ஹிந்தியை மட்டும் தூக்கிப் பிடிக்காமல் இருந்திருக்குமேயானால் ………………….
இந்த பட்டியல் தொடரும்………..
Kumar from chennai,
You said it well. People who like to show themselves as ‘Indian’ patriots, remember one thing. There is no such thing as Indian anymore. Because, the Indian government does not promote equal treatment of its people and it is not honest in solving disputes between its states. Especially the India Congress prefers a ’slave’ Tamil chief minister in Tamilnadu who will betray his own people as well as his thoppul kodi uravukal in eelam for a business deal. This is how the current Indian central government treats its citizens. It exploits its own citizens and does not treat them with dignity.
Even many north indians analysts say now that the Kerala policy group does not formulate Indian security policy based on ‘long term’ vision for India, but rather accordign to their personal grudges and ‘whims’ just like they dealt with LTTE. When the terrorists from Pakistan or the threat from China is the real threat, M K Narayanan howls continuously about LTTE threat (which is non existent). Even now, Indian intelligence wastes its time spreading false news like “LTTE gave arms to Indian maoists” than addressing threat from China or from Pakistan.
The rulers and policy makers of India are making fools out of Indian public. Don’t be surprised if one day, Chinese claim MK Narayanan and Shiv Menon helped them to weaken India’s hold (and who knows by that time some Indian states will have gained independence) by continuously ranting about ‘LTTE threat’ than looking at real threats.
MK Narayanan and Shiv Menon along with Sonia Gandhi (who is not 5% concerned about the long term interests of India, rather just wants power), have a ‘perfect’ puppet prime minister in Manmohan Singh whose economic knowledge is like a mountain but lacks depth in political vision.
Imagine, Indira Gandhi sitting in Manmohan’s place, I am not sure MK and Shiv Menon will have the same power as they do now.
People like MK Narayanan, Sonia Gandhi and Shiv Shankar Menon are sowing the seeds to destroy Indian unity. That is all.
Dear Meikantan!
One more thing to add:
the entire media has been against tamil community:even Daily Thanthi,second fiddles Delhi pajanai gang!
time will come,china will fire india in all fronts and people like The Hindu Ram will get foriegn currencies from china!
Meikandaare!
Are you joking by saying that Vilakkennai Manmookan’s economic knowledge is mountain high?
Intha pudungi enna saathichittan Landia-vula, ivanoda knowledge vachu? Or with that great economic expertiise, did he help his masters Washington and London see the recession coming? My father says he is the most arrogant human being with the most innocent face!
Another thing Meikandaare! Why do everyone of you including Nedumaaran say if Motta pappathi Indra had been there, Eezhathai thattula vachu thanthuruppannu? Please friends, no more beating around the bush! Like the great helmsman said, identify and prioritize your enemienes.
our number one enemies are Kayamainidhi and his cronies
second our historical enemies vadakathiyaan and paarppan
third is of course singalan.
there is a 4th category that is the most irritating: sudra tamil crowd that drinks paarppan and vadakkathiyaan’s siruneer. we need to awaken this crowd.
then if somebody is really serious about tamil nadu and eelam liberation, then please you need to learn to loathe tamil cinema. Tamil cinema has castrated the entire tamil population. Unlike American GIs spread porno material to their enemy revolutionaries in every war, our enemies did not need one.
Dear Mr.Pudukottaiyan!
u have told”patriotic”indian tamils drinks north indian urine:ofcourse people like karunanidhi eats italian shit sandwitched with north indian shit!
atleaset.atleast people like us aware,what is happening to tamil community!
thank u pudukottaiyan,continue u to post ur comments!
Pudukottayan,
Thanks for the update on ‘Indira Gandhi’, Manmohan and Annathurai. I knew that Annathurai had his limitations. But what I wanted to say was, he was not rank dirty like ‘Kolaignar’ to sell his people or ‘help’ kill his people for some business deals. He had better principles than Kolaignar. However, I agree Anna was not prepared to resign from his position when it was clear he could not achieve ‘Dravida Nadu’ from India.
MGR had his own problems (like any human beings). But let me tell you something. He loved eelam tamils as he loved TN tamils. He told Prabhakaran once ” Thambi naan padathil than herovaha vanthen, anal nee nijathileye adakkappatta makkalukkaha poradum hero “. Not only that, Prabhakaran himself opened his heart in an interview about 5-6 years ago, saying “without annan MGR’s great financial help ‘when we really needed financing for struggle’ in 1984, and thereafter, we wouldn’t have been able to launch the struggle at full force and build our army”. The eelam tamil diaspora was very small in number at that time. It was puratchi thalaivar’s help at the beginning that set the struggle straight when needed.
We all knew in 1987, that when we heard the death news of MGR, we lost a great patron and unrelenting moral supporter of our struggle. His personal weaknesses and other some issues aside, no one can deny he was a better voice of the oppressed than any other TN leader. That is my opinion.
நான் நீதி, நேர்மை,உண்மை,நன்மை,கடவுள் …. போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.. அனால் , மே 17 க்கு பின்பு, i’m depressed much… எனக்கு இவைகளில் நம்பிக்கை போய் விட்டது…. நாம் தமிழர்கள் என்பதில் மட்டுமே நம்பிக்கை உள்ளது… ஈழம் அடைய யார் எதை செய்தாலும் அவர்களை வரவேற்க வேண்டும்… மீண்டும் நீதி, நேர்மை பேசித் திரியக்கூடாது… இது சத்தியமாக எனது கருத்து கிடையாது…. காலமும், இந்த உலகும் நம்மிடம் திணித்த கருத்து..
I expect ur comments….
தலைவர் பிரபாகரன் அவர்கள், இந்திய எதிரிகளுடன் கை கோர்த்தாவது (தமிழ்நாட்டுக்காக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால்) ஈழம் நிச்சயம் கிடைத்திருக்கும் … என்ற கருத்து என்னை தூங்க விடாமல் செய்ததின் விளைவே மேற்கூறிய எனது கருத்து..
என்னைப் பொறுத்த வரையில், தமிழர்களின் நலன்(எந்த நாடாகிலும்) தமிழர்களுக்கென்று ஒரு நாடு (ஈழம்) அமைவதிலேயே உள்ளது… அதுவே தமிழர் நலன் என்ற கருத்தின் மையம் …. எனவே, ஈழத்திற்காக எதையும் செய்ய வேண்டும்… அதில் சமரசம் (நீதி, நேர்மை,….) கூடாது என்பதே என் கருத்து…
Kumar from Chennai,
Not only you, but also many Tamils think like that now. There is no place for manu neethi, justice, and right and wrong in this ‘Kali yuham’. It is all about, achieving your aim without worrying about neethi, kadavul, etc.
There is another side to our setback. That is the ‘ettappar’ koottam. It is very unfortunate and shameful that a third grade ettappan like ‘Kolai Nithy’ is ruling TN now. Likewise our struggle has seen so many ettappans in eelam — Karuna,Douglas, Siddharthan, Sangaree … the list goes on. But how many ettappans you see among sinhalese?? Virtually none (except few middle level sinhala army officers who gave intelligence to LTTE about military assets in exchange for money — but not to the extent of tamil ettappans).
Even the good sinhalese who sympathize with us, do not stoop low towards betraying their people. But, our ettappans?? Will do anything for money (Douglas) and woman (Karuna).
Kanimozhi goes to Sri Lanka to meet the imprisoned refugees and what she does?? Buys 250 acres land (I suspect, it was ‘anbalippu’ from Mahinda). When our people are doing business on the misery of their own, who else we can blame.
History will not forgive Karunanithy and his cohorts with his eelam brothers Karuna, Douglas, et. al. If we (TN public and diaspora tamils) unitedly work together and continue to agitate, and use the world geopolitics wisely these scoundrels will be relegated to the dust bin of history.
But first of all, many TN tamils and diaspora tamils need to get out of their cheap cinema moham. Because Tamil cinema does not speak for tamil existence nowadays (Unless someone changes the face of it)
பல நாள் தேடலுக்கு விடை கிடைத்தது.இந்திய தமிழின அழிப்பை தூண்டியது,தமிழீழம் அமைத்தால் காஷ்மீர்,பஞ்சாப் ,பல மற்றய போராட்டங்கள் கேள்வி கேட்க தொடக்கி விடும் என்பதே.இத்தகு ஒரேபட்ட வழி தமிழர் நாம் otumoththama ஒன்று சேர்ந்து தொடர்ச்சியாக போராடினால் மேலை நாடுகள் இந்தியாவை தாண்டி தீர்வு காணும்!அதற்கு இந்தியாவின் அட்சியில் நிலையற்ற தன்மையும்,இலங்கை பொருளாதாரம் பலவீனம் அடைய வேண்டும் !இது ரெண்டும் கூடிவரும் சந்தர்பத்தில் மிக உகிரமாக போராட வேண்டும் .அபோதுதான் நமக்கு விடிவு !!!
India DON’t NEED enemies to destroy India while they have enough so called leaders already destroying the BRITISH MADE India.
Like the Chinese Political Scientist recently wrote about the USELESS India, The British Made India can be divided into several pieces as they were before the British.
That is, by aiding the Chinese and all Liberation organistations in India- Manipur, Nagaland, MIsoram, Tripura, Boda, Telungana, Kashmir, Arunachal and NOW TAMILNADU- India can be PRE BRITISH state EASILY.
Indian economy is SERVICE BASED not Manufacture based like the Chinese, India can be made bankrupt by co-ordinated actions by the above liberation orgs.
I ALWAYS CALL INDIA AS THE STATE WHICK KILLED THE MAHATMA AS SOON AS THE BRITISH LEFT INSTEAD OF GANDHI DESAM.
PATHETIC INDIA- STATE WHO KILLED THE MAHATMA
katturaiyaalarum, karuthu koorubavargalum
ulaga arasiyalaiyum indhiya ilangai arasiyal soolalaiyum mulumaiyaaga vulvaangaamal vivaathippathaaga karuthugiren.
aathirippadaamal aakkapoorvamaaga sindhikkavendum tholargalee….
veerathi vida soolchi vendrathagathaan ulaga arasiyal varalaaru paadam solgiradhu.thamilargal innamum unarchinilaiyileye irkkirom.arivu nilaikku yendru varappogiromo theriyavillai….?
Dear friends please support tamil eelam…
We will get another good leader soon…
Don’t worry…
I hope that the past stability will come to tigers…
Suerely they’ll get tamileelam…
Tamilanku kuruke nirkum India. Innum 5 varudathil Biharilirundhu andhravarai chinavidam thanthuvidathan pokuthu.
“தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழர் நாட்டையும், தமிழ் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான்.தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தன்னுடைய மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்”
- குடிஅரசு 17.09.1939
naan mudhalil indian. pirage tamilan. athe nerathil, ealam pratchinail enadhu karuthu, tamil eala desame. pala desangal inaindhadhe india enbadhu poi. mozhigal veraga irundhalum, anmigathal edhu ore desamthan. idhil lankavumthan. tamil eala porattathil “indian government” adharavu kodukavillai enbatharkaga inge engal thesathin ottrumaiyai keli pesuvathai naan etrukollavillai. ungal kopathai naan mathikiren.
As a Tamil from Tamindu, I lost my affection to my Home country india . How india /Tamilnadu CM allowed this genocide ignoring 70 million Tamil, a question i could not find answer till date . It is very painful and disturbing my every day life .
Mr.Mohan!
there are so many reasons for this
1)Mu.Ka,muthu’s sun in law,Renganathan(owner of chick shampoo) opening a big factory@ Srilanka
2)there are other concealed business proposals with manjal thundu