தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் நடிகர் சத்தியராஜ் அவர்கள் எமக்கு சென்ற வாரம் புதன் கிழமை அன்று பேட்டி வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதியை கடந்த வாரம் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது பேட்டியின் மிகுதியை தருகிறோம்.

நீங்கள் திடீரென்று படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டீர்கள் போன்று தெரிகிறது. இதற்கு ஏதும் விசேட காரணங்கள் உள்ளதா?
விசேடமான காரணம் எதுவும் இல்லை. இந்த வருடம் என்னுடைய மகள் திவ்யாக்கும் அதன் பிறகு மகன் சிபிக்கும் திருமணம் நடந்தது. இந்தத் திருமண வேலைகள், குறிப்பாக சொல்வது என்றால் திருமணத்தில் பெரிய வேலையே எல்லோரையும் நேரில் பார்த்து அழைப்புக் கொடுப்பதுதான், 30 வருடம் நான் சினிமாத் துறையில் இருப்பதால் இதற்கு பெரிய ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது, அதனால் படங்களைக் கொஞ்சம் குறைக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் இந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து நிறையப்; படங்களை ஒத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஒரு நாலைந்து வருடங்களாக பார்த்தீர்கள் என்றால், அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன் சத்தியராஜ் என்று பெயர் வரும். அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும் அப்படி வருகின்ற அளவிற்கு நிறைய படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்.
சினிமாத்துறையைப் பொறுத்தவரை நடிகர் ரஜனிகாந்தும் நீங்களும் ஒருவர் மீது ஒருவர் மதிப்போடும் புரிந்துணர்வோம் பழகுபவர்களாக அறியப்பட்டவர்கள். ஆனால் இடையில் நீங்கள் தெரிவித்த சில காட்டமான கருத்துகள் நடிகர் ரஜனிகாந்தையே குறிப்பிடுவதாக பலரால் புரிந்து கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஈழத் தமிழருக்கான உண்ணாவிரத மேடையில் ரஜனிகாந்தின் உரையின் முடிவில் அவரை மேடையில் வைத்தே பாராட்டினீர்கள்? நடிகர் ரஜனிகாந்த் பற்றி உங்களுடைய கருத்து என்ன? சற்று விரிவாக சொல்ல முடியுமா?
ரஜனி அவர்கள் என்னுடைய மிகச் சிறந்த நண்பர். என்னுடைய வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ளவர். கர்நாடகாத் தமிழர்கள் பிரச்சனை என்று வருகின்ற பொழுது, அவர் கர்நாடகாக்காரர்களிடம் மன்னிப்போ வருத்தமோ தெரிவித்த பொழுது, அதற்குத்தான் நான் எதிர்ப்புத் தெரிவித்தேன். மேடையில் நான் பேசிய பேச்சுக்கள் ரஜனிகாந்த் அவர்களுக்கு எதிராக பேசியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதே சமயம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவர் தைரியமாக குரல் கொடுத்த பொழுது அவரைப் போய் பாராட்டினேன். அப்படி பாராட்டுவது ஒரு தமிழனுடைய கடமை என்ற முறையில் அவரை பாராட்டினேன்.
ரஜனிகாந்த் அவர்கள் பற்றி என்னுடைய கருத்தை கேட்டிருக்கிறீர்கள். மிகவும் வசீகரமான ஒரு நடிகர். தமிழ் சினிமாவின் பார்வையாளர்களை அதிகப்படுத்திய பெருமை ரஜனி படத்தை சாரும். இதை நாம் மறுக்கவே முடியாது. தமிழ் படத்தினுடைய வியாபாரம், பார்வையாளர்கள் பன்மடங்கு பெருகியதற்கு முக்கியமான காரணம் ரஜனி அவர்களுடைய படங்கள். அந்த வகையில் அவரை நான் மிகவும் பாராட்டுகிறேன். ஒரு அற்புதமான நடிகர் அவர். நாம் பார்க்கிற ரஜனிகாந்தை தாண்டி ஒரு ரஜனி இருக்கிறார். ஒன்பது ருபாய் நோட்டு மாதவப்படையாச்சி மாதிரி வேடம் எல்லாம் மிகச் சிறப்பாக அவரால் செய்ய முடியும். ஆனால் ஒரு வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டதால் அவரால் வெளியில் வர முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் என் வளர்ச்சியில் மிகவும் அக்கறை உள்ள ஒரு நல்ல நண்பர்.
திரையில் மட்டுமே பார்த்த நடிகர்களை அரசியலுக்கு வரும்படி நெருக்குதல் கொடுக்கும் ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் தவறு யார் பக்கம்?
இந்த அப்பாவித்தனத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வர வேண்டும். என்றைக்குமே தவறு சம்பந்தப்பட்டவர்கள் மீதுதான். இங்கே ரசிகர்கள் மேல்தான் தவறு. சினிமாவில் பார்க்கின்ற கதாநாயகனை உண்மையிலேயே ஒரு வீரன் சூரன் என்று நீங்கள் நம்பக் கூடாது. நடிகர்களுடைய சமுதாயப் பார்வை என்ன? சமூகநீதியைப் பற்றி அவர்களுடைய சிந்தனை எப்படி இருக்கிறது? இதை எல்லாம் தெரிந்து கொண்டுதான் நீங்கள் உங்களுடைய அபிமான நடிகரை தலைவனாக நினைக்கலாமே தவிர மற்றையபடி வெறும் நடிகராகத்தான் அவர்களைப் பார்க்க வேண்டும். ஒரு நடிகர் மீது வெறும் நடிகராக அபிமானம் வைப்பது தவறு அல்ல. ஆனால் இவரால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும் அரசியில் மாற்றம் ஏற்படும், இவர்தான் எம்மை எல்லாம் காப்பாற்றுவார் என்றெல்லாம் நம்பி ஏமாறுவது உங்களுடைய அப்பாவித்தனம்தான்.
இந்த நேரத்தில் என்னுடைய சகோதர நடிகர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள், அரசியலுக்கு வருகிறேன் அரசியலுக்கு வருகிறேன் என்று வித்தை காட்டி ரசிகர்களை ஏமாற்றாதீர்கள். வருவது என்றால் வந்து விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று சொல்லி விடுங்கள். ஏனென்றால் அந்த ரசிகர்களுக்கு உள்ளுரில் பல பிரச்சனைகள் இருக்கும். அரசியலுக்கு வருவேன் என்பது போன்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ரசிகர்களுக்கு உள்ளுரில் பிரச்சனை வரும். ரசிகனும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பான் “நமது அண்ணன் அரசியலுக்கு வரப் போகிறார்” என்று. அதை உள்ளுரில் சொல்லிக் கொண்டும் திரிவான். வருகிறேன் என்று விட்டு வராமல் விட்டீர்கள் என்றால் அப்பொழுது உள்ளுருக்குள் பல பிரச்சனை ரசிகனுக்கு ஏற்படும். அதனால் அரசியலுக்கு வருவது என்றால் வருகிறேன் என்று சொல்லி விடுங்கள். வரவில்லை என்றால் வரவில்லை என்று முடிவாகச் சொல்லி விடுங்கள்.
ஈழத் தமிழர் பிரச்சனையை தெளிவாக உணர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர். ஆனால் திரையுலகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்துகின்ற போராட்டங்களில் சிலருடைய பேச்சுக்கள், ஈழ மதுரை, இலங்கை வாழ் இந்தியர்கள் போன்றன ஈழப் போராட்ட வரலாற்றுக்கு முரணாக அமைந்து விடுகின்றன. அவர்கள் நல்ல ண்ணத்தில் பேசினாலும், இப்படியான பேச்சுகள் தமிழ்நாட்டு மக்களிடமும் குழப்பமான கருத்துகளை பரப்பி விடும் ஆபத்தும் இருக்கிறது. வரும் காலத்தில் திரையுலகம் நடத்தக் கூடிய போராட்டங்களில் இது போன்ற குழப்பகரமான கருத்துகளை எப்படித் தவிர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள்?
நல்ல யோசனை. நிச்சயமாக பரிசீலிக்க வேண்டிய யோசனை. ஆர்வத்தில் வரலாறு தெரியாமல் சில பேர் குழப்பமாக பேசினாலும் கூட, அதற்கு பிறகு பேசியவர்கள் அருமையான விளக்கத்தையும் பதிலையும் கொடுத்து விடுகிறார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் இப்படி குழப்பமாக சிலர் பேசுவதால் பல உண்மைகள் வெளியில் வருகின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் யாருக்கும் முரண்பாடு கிடையாது. சிலர் வரலாற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் பேசும் பொழுது, உதாரணத்திற்கு தோழர் திருமாவளவன் அங்கு வந்திருந்தார், அவர் அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்தார். இலங்கையில் உள்ள தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் என்ற உண்மையை சொல்வதற்கான சூழ்நிலை அவர்கள் தவறாக பேசியதால்தான் வருகிறது. அதாவது ஒரு வகையில் அந்த மைனஸிலும் ஒரு பிளஸ் கிடைத்திருக்கிறது. என்றாலும் இனிமேல் பேசுவதற்கு முன்னால் நீங்கள் சொன்னது போன்று, ஒரு சிறிய வகுப்பு நடத்தி விடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
ஈழத் தமிழர்களுக்கு ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
இன்று உலகமே வியந்து பாராட்டும் இனம் தமிழினம் என்ற பெயரை தமிழினத்திற்கு வாங்கிக் கொடுத்ததே ஈழத் தமிழினம்தான். அப்படிப்பட்ட தெளிவான சிந்தனை உள்ள ஈழத்தமிழர்களின் போராட்டம் நிச்சயமாக வெல்லும். அதே சமயத்தில் ஈழத் தமிழர்களிடம் இன்னும் ஒரு கோரிக்கையையும் வைக்கின்றேன். உங்களிடம் உள்ள மூடப் பழக்க வழக்கங்களை விட்டு விடுங்கள். தந்தை பெரியாரின் புத்தகங்களை படித்து, அவர் என்ன சொன்னார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை நடத்தும் பொழுது அல்லது ஒரு போராட்டத்தை நடத்தும் பொழுது இன்னும் அது நன்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்படிச் சொல்லி பேட்டியை முடித்துக் கொண்டார் நடிகர் சத்தியராஜ் அவர்கள். அவருடைய வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் எமக்கு நேரம் ஒதுக்கித் தந்து எம்மோடு உரையாடி எமது கேள்விகளுக்கு தயங்காமல் பதில் சொன்னதற்கு நன்றி சொல்லி அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டோம்.
- வி.சபேசன்
//வந்தேறிகளின் கூடாரமான தமிழ்நாடும்-வேடிக்கை பார்க்கும் அடிமை தமிழனும்//
வந்தேறிகளின் ஆட்டம் வரவர தமிழ்நாட்டில் எல்லை மீறி போய்கொண்டுள்ளது..இவ்வளவு நடந்தும் ஏதோ என்னமோ செய்கிறார்கள் தனக்கு ஒன்றுமில்லை என வேடிக்கை பார்கிறான் தமிழன் என்ன காரணம்? ஒரு தமிழின மரபியல் ரீதியான ஆய்வு
இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழி பேசி பல்வேறு இனங்களாக வாழ்ந்து வரும் மாந்த இனம் தொடக்கத்தில் ஒரே இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என மாந்தவியலர் கூறுகின்றனர். ஒரே இடத்தில் வாழ்ந்தபொழுது ஒரு மொழியையே அவர்கள் பேசியிருக்க வேண்டும். பின்பு தான் அவர்கள் பல்கிப் பெருகிப் படிப்படியாக உலகின் பல்வேறிடங்கட்கும் பரவியிருத்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்த பிறகு, இக்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிழந்து தாங்கள் பேசிவந்த முதல் மொழியின் திரிபுகளிலிருந்தும் சிதைவுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளை உருவாக்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.
தென்பெருங் கடலுள் மூழ்கிப்போன குமரிக் கண்டமே மனிதனின் பிறப்பிடமாக இருத்தல் வேண்டும் என மாந்தரியல், மண்ணியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அக் குமரிக்கண்டமே தமிழனின் பிறந்தகம் என்பதைத் தமிழிலக்கியச் சான்றுகள் செவிவழிச் சான்றுகள் கொண்டும் வரலாற்றுச் சான்றுகள் கொண்டும் அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இனி அம்மாந்தர் பேசிய உலக முதன்மொழி தமிழே என்பதும் மொழியியல் அடிப்படையில் மொழி அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது. ஆயினும் தமிழன் நாகரிகமுற்ற முதல் மாந்தனாகக் கருதப்படல் கூடாது என்பது சிலரின் உட்கிடக்கையாக இருப்பதால், அத்தகையோர் மேற்கூறியவற்றுக்கெல்லாம் போதிய சான்றுகள் இல்லை என அவற்றை மறுப்பர்..
உலகிலேயே பிற இனத்தினர் மீது சிறிதும் வெறுப்போ பகைமை உணர்வோ இல்லாத இனம் தமிழினம் ஒன்றே. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது தனிப்பட்ட யாரோ ஒரு தமிழ்ப்புலவரின் உள்ளத்தின் விரிவை மட்டும் காட்டுவதன்று. அது தமிழனின் குருதியிலேயே ஊறிப்போன உணர்வு. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களைக் கூர்ந்து கவனிப்போர் அவர்கள்பால் பிறஇனத்தினரிடம் காணப்படாத இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் காணலாம்.ஒன்று, தங்களிடையே வாழவந்து தங்களையே கீழே தள்ளி மிதக்கும் பிற இனத்தினரின் சூழ்ச்சிகள், சுரண்டல்களினின்றும், கயமைகள் கரவுகளினின்றும், ஏன், வெளிப்படையான சிறுமைகள் அடாவடித்தனங்கள் மேலாண்மைகளின்றும் கூடத் தங்களையும் தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி கடுகளவும் இல்லாமல் இருப்பதாகும். இரண்டு, பிற இனங்களின் மீது கடுகளவும் இனவெறுப்பின்மை. மீண்டும் சொல்வேன் உலகிலேயே பிற இனங்களின் மீது இனவெறுப்பற்ற இனம் தமிழினம் ஒன்றே. மீண்டும் மீண்டும் சொல்வேன், பிற இனத்தவரை வெறுக்காத இனம், பிற இனத்தவரின் சுரண்டல்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி அற்ற இனம் தமிழினம்.
கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியாகத் தமிழன் இருந்தமையால், தொடக்க வழிகளில் அவனை எதிர்க்க வேறு எந்த இனமும் இருந்ததில்லை. அதனால் யாரிடமிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை.பல்வேறு தாக்கங்களால் அவற்றின் இனப்பண்பு மாறிப் போனாலும் சொந்த மண்ணிலேயே தொடர்ந்து பன்னூறு ஊழிக்காலம் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினம் பிறரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வையோ, பிறரைத் தன் எதிரியாகக் கருதி வெறுப்புக் கொள்ளும் இனவேறுபாட்டுணர்வையோ உருவாக்கிக் கொள்ளாமலேயே போய்விட்டது.
படிக்காத, எழுத்தறிவில்லாத ஒரு பொதுநிலையான (சராசரி) கன்னடனை, ஆந்திரனைக், கேரளத்தானை எடுத்துக் கொள்ளுங்கள். தன் இனம், மொழி என்று வரும் பொழுது கொப்புளித்துப் பொங்கி எழுகின்றானே. ஆனால் பொதுநிலையான ஒரு தமிழனை எடுத்துக் கொள்ளுங்கள். இனத்தளவில் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகளவு சூடும் சுரணையின்றி இருக்கின்றானே. பொதுநிலைத்தமிழன் என்ன? படித்துப் பதவி பெற்று வயிறு வளர்க்கும் பெரும்பான்மைத் தமிழனுக்குக் கூட மொழி பற்றிய அக்கறை கடுகளவும் இல்லையே. தன் இனம் இப்படித் தாழ்ந்து கிடக்கின்றதே என்ற சூடு சுரணை இல்லாமல்தானே அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றான்!
மரபு வழியான இனப்பண்பு அல்லது தற்காப்புணர்ச்சி அவன் குருதியில் இல்லை என்பதைத் தவிரத் தமிழன் இப்படி இனவுணர்ச்சி இல்லாதிருப்பதற்கு வேறென்ன அடிப்படைக் காரணம் சொல்ல முடியும்?இவ்வாறு வந்தவர்களை எல்லாம் தனது சகோதர்களாக பார்த்மையால் இன்று தமிழனுக்கு நிகழ்காலத்தில் நேர்ந்துள்ள அவலம் விவரிக்க முடியாதுள்ளது..
ஒரு கன்னடத்து வந்தேறி காந்கிரசு கட்சியின் சார்பில் சொல்கிறது ஈழத்துக்காக போராடுபவர்கள் அங்கு சென்று போராட வேண்டுமாம் தமிழனுடைய தாய் பூமியான தமிழ் நாட்டில் போராடமல் அண்டார்டிக்காவில் சென்றா போராடுவார்கள்?
அதே கட்சியை சேர்ந்த இன்னோரு தெலுங்கு வந்தேறி சொல்கிறது ஈழ போராளிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் தமிழினவிரோதிகளாம்.. வரவர யார் தமிழர்கள் என்ற குழப்பமே மேலிடுகிறது..இன்னும் இந்த ஆரிய வந்தேறிகளை பற்றி நாம் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை சோ+சப்புற மணிசாமி+மணிஆட்டும் ஐயர்+கன்னடத்து பாப்பாத்தி+மவுண்ரோடு மகாவிஷ்ணு பொந்து ராம்+தினமலம் என இவர்கள் பட்டியல் நீளுகிற்து..
வந்தவரை எல்லாம் வாழ வைத்த, தமிழனின் உழைப்பில் தின்று தமிழ் மண்ணின் சோறை தின்று ஆட்சி அதிகாரம் உடையவர்களாக ஆக்கிய தமிழனின் முகத்திலேயே கழியும் இவர்களின் செயலை என்னவென்று சொல்ல?நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது போகிற இடத்துக்கு தான் போகும்..வந்தேறிகளுக்கு தமிழ் ஒரு மொழி மளிகைசாமான் வாங்கவோ அல்லது பேரம் பேசவோ தமிழ்நாட்டில் அது பயன் படுகிறது..அவ்வளவுதான்!ஆனால் பச்சை தமிழனுக்கு அது உயிர் உணர்வு தன்மானம் சுய மரியாதை!வந்தேறிகளை தயவு செய்து தமிழ் படிப்பதை நிறுத்த சொல்லுங்கள் வந்தேறிகளிடம் தமிழரின் வீரம் வரலாறு,பெருமை என அவர்களை படிக்க சொல்வதால் அவர்களுக்கு தமிழ் இனம் என முகமூடியும் கிடைக்கிறது மேலும் தமிழரின் வரலாறு கண்டு பொறாமையும் உண்டாகிறது இவனிடம் போய் ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள் என்றால் சிரிக்கவே செய்வான்..அவன் ரத்தம் எவ்வாறு வேலை செய்யும்?
பேக்கரிகடை டீ கடை முதலாளி மலையாளி!–வாங்கி தின்பவன் தமிழன்
வட்டிக்கு விடுபவன் மார்வாடி–வட்டிகட்டுபவன் தமிழன்
மந்திரம் விடுபவன் ஆரியன் -தட்சணை கொடுப்பவன் தமிழன்
இவ்வாறான் நிலைமைகள் மாறி எமது தமிழ்மண்ணில் ஆள்பவனும் தமிழன் ஆளபடுவனும் தமிழன் என்ற நிலைமை என்று வருகிறதோ அன்றுதான் தமிழ் இனம் உருப்படும்..
I sincerely request all the readers to visit:
http://karthikai27.com
http://november27.net
to make ur light!
thanks