தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்கின்ற விவாதம் ஒரு மாதம் கடந்தும் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று சொன்னவர்களே அதை பின்பு மறுத்து விட்ட பிற்பாடும், தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று நம்புபவர்கள் குறிப்பிடத்தக்களவு இருக்கின்றார்கள்.

தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை. ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு “தேசியத் தலைவர் வருவார்” என்று காத்து நிற்கிறார்கள்

அதே வேளை ஈழத் தமிழர்களிடம் இருந்து “தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார்” என்பது போன்ற அறிக்கைகளும், ஆய்வுகளும் வருவது தற்பொழுது மிகவும் குறைந்து விட்டது. புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளிடமும் தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதில் இன்றைக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை. அவர் இல்லை என்பதை மக்களிடம் சொல்வதா? வேண்டாமா என்பதில்தான் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமல் நிற்கின்றார்கள்.

ஆனால் தமிழ்நாட்டின் சில தலைவர்களும், ஊடகங்களும் உறுதியான முறையில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றார்கள்.

நக்கீரன் போன்ற ஊடகங்களும் பழ.நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்களும் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக அடித்துக் கூறுகிறார்கள். நக்கீரன் தேசியத் தலைவர் எப்படித் தப்பித்து வெளியேறினார் என்று கண்ணால் கண்டது போன்று ஒரு கதையை எழுதியது. தேனிசை செல்லப்பா அதை பாட்டாகவே பாடிவிட்டார்.

தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக கதைகளை எழுதுவதற்கு நக்கீரன் போன்ற ஊடகங்களுக்கு வியாபாரம் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்கள் உண்மையாகவே தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

………………………

சில மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸில் இருந்து ஒலிபரப்பாகின்ற தமிழ்ஒலி வானொலியில் தோழர் மதிமாறன் பகுத்தறிவு நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நாடி சோதிடம் (காண்டம்) என்பது மோசடியான ஒன்று என தோழர் மதிமாறன் கூறிய பொழுது, தொலைபேசயில் தொடர்பு கொண்ட ஒருவர் நாடிசோதிடம் என்பது உண்மையானது என உறுதியாக வாதிட்டார். தான் இதைப் பற்றி மிக நீண்ட ஆராய்ச்சி செய்திருப்பதாக கூறிய அவர் ஒரு செய்தியையும் சொல்லிச் சென்றார்.

நாடி சோதிடத்தின்படி 2011இல் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்பதுதான் அவர் சொல்லிச் சென்று செய்தி.

இப்படியான நேரங்களில் பகுத்தறிவாளர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. 2011இல் தமிழீழம் மலராது என்று வாதிட முடியாது. நாளையே தமிழீழம் மலர வேண்டும் என்ற சிந்தனையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள் 2011இல் தமிழீழம் மலராது என்று வாதிட்டால், அது பொருத்தமாகவா இருக்கும்?

நாடி சோதிடத்தைப் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்திருப்பதாக கூறி, அதற்காக வாதிட்ட அந்த நபர் பெங்களுரைச் சேர்ந்தவர், ஒரு சிறந்த தமிழினப் பற்றாளர். தற்பொழுது ஜேர்மனியில் வசிக்கின்றார். அவருடைய குடும்பமே தமிழீழ விடுதலைக்கு பல உதவிகளை செய்திருக்கின்றது. பல விடுதலைப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததோடு தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைமையோடு நெருங்கிய தொடர்பையும் அவருடைய குடும்பம் கொண்டிருந்தது.

இப்படியான பெருமை மிகுந்த குடும்பத்தை சேர்ந்த அவர் நாடி சோதிடத்தின் மிகப் பெரிய விசுவாசி. கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், கிரக சோதிடம் என்று எதை வேண்டுமானாலும் பொய் என்று அவருடன் வாதிடலாம். அதை அவர் ஏற்றுக் கொள்ளவும் செய்வார். ஆனால் நாடி சோதிடத்தை மட்டும் பொய் என்று அவர் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

தமிழ்நாட்டின் தலைவர்கள் சிலரோடு மிக நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கின்ற அவர், அவர்களையும் தன்னுடைய வாதத்திறமையால் நாடி சோதிடத்தை நம்பும்படி செய்திருக்கிறார்.

நாடி சோதிடம் குறித்து நானும் அவருடன் பேசியிருக்கிறேன். அப்பொழுது அவர் எமது தேசியத் தலைவர் பற்றி நாடி சோதிடத்தில் உள்ளதைப் எனக்கு வாசித்துக் காட்டினார். தேசியத் தலைவரின் ஊர், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்கின்ற அனைத்து விவரங்களும் அதில் அப்படியே இருந்தன. அத்துடன் 2011இல் தேசியத் தலைவர் வெற்றி பெற்று தன்னுடைய இலக்கை அடைவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

அவருடைய வீட்டிற்கு சென்ற வேறு சிலரிடம் தேசியத் தலைவர் பற்றி நாடி சோதிடம் கூறுவதை வாசித்துக் காட்டியிருக்கிறார்.

இப்படியான நம்பிக்கைகள் சில வேளைகளில் தனிப்பட்ட நன்மைகளையும் கொடுக்கும். கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை நாம் படுகின்ற மனத் துன்பங்களை இவரைப் போன்றவர்கள் பட்டிருக்க மாட்டார்கள். சோதிடத்தை வாசித்து விட்டு தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று உறுதியாக நம்பிக் கொண்டு நிம்மதியாக உறங்குகின்றார்கள். நாம் நிம்மதி இழந்து அல்லலுறுகிறோம்.

………………………

மே மாதம் 17ஆம் திகதி இரவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் இருந்து எந்த ஒரு தகவலும் யாருக்கும் வரவில்லை. ஆயினும் பழ. நெடுமாறன் போன்றவர்கள் தொடர்ந்தும் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக அறிக்கை விடுகின்றார்கள்.

எத்தனையோ தமிழர்களால் தேசியத் தலைவர் இல்லாத ஒரு நிலையை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களுடைய மனம் அவர் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளாது. பல நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு இனத்தை விடிவிக்க வந்த ஒருவர் திடீரென்று இல்லாமல் போய்விட்டார் என்பதை இனப் பற்றுள்ளவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

தேசியத் தலைவரின் வீரச் சாவை நம்புவதற்கு பல தமிழர்களின் மனங்கள் தயாராக இல்லை.

பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்களும் தேசியத் தலைவரின் மறைவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். “மனதின் விருப்பம்” என்கின்ற காரணத்தோடு ஜேர்மனியில் வாழ்கின்ற பெங்களுரைச் சேர்ந்த அந்த நபர் இவர்களின் நெருங்கிய நண்பர் என்கின்ற காரணமும் இருக்கின்றது.

ஆகவே ஆகக் குறைந்தது 2011 வரையாவது தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறனின் அறிக்கைகளும் “எம் தலைவர் சாகவில்லை” போன்ற தேனிசை செல்லப்பாவின் பாடல்களும் வந்து தமிழர்களைக் குழப்பிக் கொண்டுதான் இருக்கும்.

- வி.சபேசன் (21.06.09)

Posted in தமிழீழம், தமிழ்நாடு, பகுத்தறிவு | Read More »

Comments

suram on 22 June, 2009 at 7:16 am #

nee muthalil vaya mudu.ellam sariya irukkum


Pakutharivu on 22 June, 2009 at 7:42 am #

தலைவர் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களில் நானும் ஒருவன் தான். தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை என்பதற்காக வெளிப்படுத்தப்படும் செய்திகளை வைத்து நம்பிக்கையை இழக்க விரும்பவில்லை!


k.pathi on 22 June, 2009 at 12:41 pm #

நான் தூங்கும்போதும்,எனது நிறுவனத்தின் பொறுட்கள் விற்பனை ஆகும்:இது ஒரு உத்தி:
அதுபோல,பிரபா தூங்கும்போதும்,வேலை நடக்கவேண்டும்……
அதை எப்படி செய்யபோகிரோம் என்பதுதான், நமது அடுத்த திட்டமாக இருக்கவேண்டும்


கொண்டோடி on 23 June, 2009 at 12:14 pm #

சபேசன்,
உங்கள் இடுகையின்படி நெடுமாறன், வை.கோ, செல்லப்பா போன்றொர் அனுதாபத்துக்குரியவர்களாக சித்தரித்திருக்கிறீர்கள். அதாவது அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் இப்படி நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இருக்கட்டும்.

இப்போது நெடுமாறன், வை.கோ, சு.ப.வீ, திருமாவளவன் போன்றோரின் பேச்சைக்கேட்டால் எரிச்சல் தாங்க முடியவில்லை.
தலைவர் இருக்கிறார் என்பதே ஒரு கிறுக்குத்தனமான உளறலாக இருக்கையில் இவர்கள் அதற்கும்மேலே போய் புலிகள் பாய்வார்கள், படைநடத்துவார்கள், வாகை சூடுவார்கள் என்று வண்டில் விட்டுக் கொண்டிருப்பது அயோக்கியத்தனம். இதை இவர்கள் அறியாமற் செய்யவில்லை என்பது மட்டும் உண்மை. பொய்யென்று தெரிந்தே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆக, இவர்கள் மட்டில் பரிதாபம் கொள்ளவது மடத்தனம் என்பது என் கருத்து.

சு.ப.வீ போன்ற பகுத்தறிவு வாதிகள் உளறுவதைப் பாருங்கள். இன்னமும் இவர்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?

———————–
அடுத்ததாக இவர்கள் ஏதோ பிரபாகரனைப் புகழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் தலைவனையும், போராட்டத்தையும் இவர்களைப் போல் யாரும் கொச்சைப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. தலைவனைச் சரியாக விளங்கியவர்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்க வாய்ப்பேயில்லை. இதுதான் நடந்திருக்குமென்பதை ஊகிப்பதொன்றும் கடினமேயன்று. இந்தக் கோமாளிகள், போராட்டத்தின் அடிப்படையையே கேலி செய்துகொண்டிருக்கிறார்கள்.

———————–
சரி, இந்த மாவீரர் நாளோடயெண்டாலும் எல்லாம் அடங்குமெண்டு நினைச்சா, இப்ப நீங்கள் சொல்லிறியள் 2011 வரை காத்திருக்க வேணுமெண்டு. நல்ல கூத்துத்தான்.


k.pathi on 23 June, 2009 at 1:48 pm #

தமிழன் வளர வேண்டுமானால் தமிழ் நாட்டில் உள்ள மலையாளிகளை உடனே அப்புரப்படுத்தவேண்டும்!
மலயாளிகல்தான் நமது தமிழ் இனத்தின் கழுத்தை திறுகி சாகடித்த ஜாலக்காரர்கள்!
இதை செய்வீர்களா,திருமா?


chozhan on 23 June, 2009 at 6:57 pm #

Dear Brother / Sister
I’m a Tamil youth from TN.Before our leader hidden we feel ,he is the legend.After ward also We Imagine he is the one and only legent.So Kindly avoid to discuss on the same circle.We must setup our own time table for to help them as usual.Every tamil youths set thier individual coal to serve thier aim to serve by new innovation and moral support.
Any time , Any where donot fear about Any thing.

Set your indiviual coal,Try , Try to help us by scientific way ,,,,,,,,
Innavation in all your happennings,

With out our chief records Noone cant say about Tamils .Feel about Tamils.Try with in your Life cycle

I am also keep trying ,,,,,,,

Nandri
Chozhan


சாத்திரி on 24 June, 2009 at 12:17 am #

தமிழ்நாட்டு அரசியல் தலைமைகள் மட்டுமல்ல தமிழ் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எல்லாருமே கையாலாகத பரதேசி பன்னாடைகள்.. இந்த வசனத்திற்காக எந்த அமைப்பை சார்ந்தவர்களாவது கொதித்தெழுந்தாலும் அவர்களிற்கான பதில்தர நான் தயாராகவேயுள்ளேன்.ஏனெனில் ஈழத்தின் இறுதியுத்த நாட்களான சித்திரை 15 தொடக்கம் 17 வரை அனைத்து தலைவர்களும் தங்கள் தொ.பேசிகளை நிறுத்தி வைத்து விட்டு ஒழித்து திரிந்த வீரமறவர்கள்தான் ..


k.pathi on 24 June, 2009 at 9:46 am #

மே மாதம் 16 ஆம் தேதி….காலை
எமது தமிழ் இனம் இந்திய+சின்கல+வெள்ளைக்கார ராணுவம் குழி தோண்டி புதைத்தபோது……
தமிழ் கடவுள் முருகன்
ஆன்கிலக்கடவுள் ஜீசச்…
அரேபியக் கடவுள் அல்லா..
இவர்கள் அனைவரும் எங்கே போனார்கள்?


tamilsvoice on 24 June, 2009 at 8:28 pm #

சபேசன் நீங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டீர்கள்

தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா ? இல்லையா ? இரண்டு விதத்திலும் யாரும் நிரூபிக்கவில்லை சிறிலங்கா கூட எல்லாமே ஆய்வுகளாகவே இருக்கின்றது

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறை என்று விட்ட அறிக்கையில் கூட தமக்கு கால அவகாசம் தேவைப்பட்டது என்று சுட்டிக் காட்டியது

ஆனால் அதற்கு முன்னமே அவர் இல்லை என்று விடுதலைப்புலிகள் சார்பிலும் சார்பு இல்லாதவர்களும் ஆதாரங்கள் இல்லாமலே ஆணித்தரமாக பிரச்சாரம் செய்தது ஏன் ?

QUOTE
தான் உயிரோடு இருப்பதாக நம்பி, போராட்டத்தை தமது கையில் எடுக்காது, தனக்காக தமிழர்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகத்தான் தேசியத் தலைவர் தன்னுடைய உடலை எதிரியின் கையில் அகப்படும்படி செய்தாரோ தெரியவில்லை.

QUOTE
ஆனால் சில தமிழர்கள் அந்த உடலை ஆராய்ந்து தமக்கு ஆறுதல் தரக்கூடிய முடிவை எடுத்து விட்டு “தேசியத் தலைவர் வருவார்” என்று காத்து நிற்கிறார்கள்

நீங்கள் இறந்த உடலைப் பார்த்தீர்களா ??
எப்படி உறுதியாக சொல்கின்றீர்கள் ?

QUOTE
செய்தாரோ தெரியவில்லை.

நீங்கள் உங்களது ஊகங்களை ஆதாரமாக காட்ட முட்படுவது ஏன் ??

QUOTE
புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளிடமும் தேசியத் தலைவர் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதில் இன்றைக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை.

QUOTE
அவர் இல்லை என்பதை மக்களிடம் சொல்வதா? வேண்டாமா என்பதில்தான் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாமல் நிற்கின்றார்கள்.

இவை எல்லாம் கூட உங்கள் ஊகம் தான்

QUOTE
ஆனால் தமிழ்நாட்டின் சில தலைவர்களும், ஊடகங்களும் உறுதியான முறையில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக கூறி வருகின்றார்கள்.

QUOTE
மே மாதம் 17ஆம் திகதி இரவுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் இருந்து எந்த ஒரு தகவலும் யாருக்கும் வரவில்லை

யாருக்கும் வரவில்லை என்று எப்படி அடித்துக் கூறுகின்றீர்கள்
அப்படி அனுப்பியிருந்தால் தகவல் கிடைத்தவர்கள் எல்லாம் உங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்களா ??? எதற்காக உங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ???

இது வரை தலைவர் நேரடியாக யாருக்காவது தகவல் அனுப்பியது உண்டா ??? மாவீரர் உரையைத் தவிர

QUOTE
நக்கீரன் தேசியத் தலைவர் எப்படித் தப்பித்து வெளியேறினார் என்று கண்ணால் கண்டது போன்று ஒரு கதையை எழுதியது.

ஆய்வு எழுதுபவர்கள் உங்களையும் சேர்த்து யாரும் நேரில் கண்டு ஆய்வு செய்வதில்லை அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் எல்லோரும் கம்புயூட்டர் ஜெரனல்கள் தான் இதுவே நீங்கள் செய்த ஆய்வின் பொய்த்தன்மை வெளிப்பட்டு விட்டது

QUOTE
பழ. நெடுமாறன், தேனிசை செல்லப்பா போன்றவர்களும் தேசியத் தலைவரின் மறைவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். “மனதின் விருப்பம்” என்கின்ற காரணத்தோடு ஜேர்மனியில் வாழ்கின்ற பெங்களுரைச் சேர்ந்த அந்த நபர் இவர்களின் நெருங்கிய நண்பர் என்கின்ற காரணமும் இருக்கின்றது.

என்ன புது கதை

நீங்கள் திரைக்கதை வசனம் சபேசன் என்று இறுதியில் எழுத மறந்து விட்டீர்கள்

இந்த ஆய்வாளர்களின் வெத்து வேட்டு ஆய்வுகளால் தான் புலம்பெயர் தமிழினம் சுயமாக சிந்திக்கும் திறனற்ற முடமானது
மீண்டும் மீண்டும் உங்கள் ஆய்வுகளால் தமிழர்களை முடமாக்கியது போதும்

இனியாவது சிறிலங்காவின் வலைப்பின்னலுக்குள் முடங்கி கிடக்காமல் தமிழர்களை சுயமாக சிந்திக்க விடுங்கள்

படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில்

கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு தாமே சீருடையை அணிவித்ததாக சிறீலங்காவின் 53 ஆவது படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா தெரிவித்துள்ளது தொடர்பாக?

பதில்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக சிறீலங்கா அரசு தெரிவித்துவரும் கருத்துக்களும், புகைப்படங்களும், நடைபெற்ற சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று பல முரண்பாடுகளை கொண்டவை. அதாவது சிறீலங்கா அரசின் பின்னைய தகவல்கள் அவர்களின் முன்னைய தகவல்களை பொய்யாக்கி வருகின்றன.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சீருடையை இராணுவம் அணிவித்திருந்தால் அவரின் கைத்துப்பாக்கி அங்கு எவ்வாறு வந்தது என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. மேலும் விடுதலைப் புலிகளின் தலைவரின் கைத்துப்பாக்கி என காண்பிக்கப்பட்ட துப்பாக்கியும் அவருடைய பிரத்தியோக துப்பாக்கியல்ல.

வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான் ஆகியோரினது கைத்துப்பாக்கிகள் தனித்துவமானவை. அவை லேசர் மூலம் வழிநடத்தப்படும் துVரங்களை கணிப்பிடும் கருவிகளை கொண்டவை. நீங்கள் முன்னைய புகைப்படங்களில் இருந்து அவற்றை ஆராய்ந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாது அவரின் துப்பாக்கி உறையும் உலோகத்திலானது. அதாவது பட்டனை அமுக்கியதும் துப்பாக்கியை வெளியே தள்ளும் பொறிமுறை கொண்டது. ஆனால் காண்பிக்கப்பட்டவை சாதாரண 9 மி.மீ கைத்துப்பாக்கியும், உறையும் தான். இவ்வாறு நுVறு காரணங்களை முன்வைக்க முடியும். அவற்றை இங்கு கூறுவதாக இருந்தால் அது பல பக்கங்களை நிரப்பிவிடும்.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை சிறீலங்கா அரசு தனது பிரச்சாரத்திற்கு பல ஒப்பனைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதுடன் பல தகவலகளை மறைக்கவும் முற்படுகின்றது. ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்று தான், அது தமிழ் மக்களின் விடுதலைப் போரை முற்றாக மழுங்கடித்து விடுவதேயாகும்.

http://tamilthesiyam.blogspot.com/2009/06/…-post_6508.html

QUOTE
5ம் ஈழப்போர் வரும் என்று கற்பனையில் வாழ்பவர்களினால்

இது தமிழ்நாட்டு உணர்வாளரால் சொல்லப்பட்டது இதற்குள் புலம்பெயர் தமிழர்களை இழுத்து விடுவது உங்கள் பாணியாக்கும்

இனிவரும் போர் ராஜ தந்திரப்போர் ஒழிய ஆயுதப் போரல்ல அதனுடைய ஆரம்பபம் தான் நாடு கடந்த தமிழீழ அரசு
இவை எல்லாம் எப்போதோ வரையப்பட்ட தலைமையின் வெவ்வேறு உத்திகள் என்று சில வட்டாரங்கள் கூறுகின்றன

தலைமை பற்றிய விவாதங்களை விட்டு விடுவோம் அவருடைய இலட்சியத்தினைத் தொடருவோம்


webeelam on 25 June, 2009 at 5:01 pm #

பழ.நெடுமாறன் போன்றவர்கள் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்வதினால், தேசியத் தலைவர் இருப்பதற்கான ஆதாரத்தை அவர்கள் வைத்திருப்பதாக பலர் நம்புகிறார்கள்.

நெடுமாறனுக்கு தெரிந்த ஒரு இடத்தில்தான் தேசியத் தலைவர் நிற்பதாகக் கூட சிலர் நினைக்கின்றார்கள்.

அப்படி எதுவுமே இல்லை என்பதைக் கூறுவதுதான் என்னுடைய முதன் நோக்கம்.

நெடுமாறன் போன்றவர்களிடம் தற்பொழுது இருப்பது நம்பிக்கைகள் மட்டுமே!

மற்றைய கேள்விகளுக்கு பின்பு தனியாக பதில் எழுதுகிறேன்.


கொண்டோடி on 26 June, 2009 at 2:51 am #

tamilsvoice,

ஆய்வாளர்களைச் சாடும் நீங்கள் அருஷின் செவ்வியை மேற்கோளிட்டு உங்கள் வாதத்தைப் பலப்படுத்துவது கோமாளித்தனமாக இல்லை?

அருஷ் சொன்னதில் அந்தக் கைத்துப்பாக்கித் தகவல் உண்மைதான். சிறிலங்கா அரசு காட்டிய கைத்துப்பாக்கி தலைவருடையதன்று. இந்தக் குழப்பங்களை முதன்மைப்படுத்தி தலைவர் இருக்கிறார் என்று யாரும் வாதிட்டுவிட முடியாது.

கடற்பாதை மூடப்படும்வரை தலைவர் வன்னியில்தான் இருந்தார் என்பதற்கான ஆதாரங்களுள்ளன. இறுதி நேரத்தில் அவர் தளபதிகளைத் தன்னோடு வைத்திருக்காமல் அவர்களுக்குத் தனித்தனிப் பணிகள் கொடுத்திருந்தார் என்பதாகவே அறிகிறோம். தளபதி சூசையின் தலைமையில் வண்டிகள், வாகனங்கள், கனரகப் பீரங்கிகள், கவசவூர்தி, ஆவணங்கள் என்பன கொளுத்தப்பட்ட நிகழ்வோடு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதி இரண்டு நாட்களில் இயக்கக் கட்டமைப்பு இயங்கவில்லை; தளபதிகளோ பொறுப்பாளர்களோ தனித்தே முடிவெடுத்தார்கள்.
=======================
முதலில், தலைவர் தப்பியோடி ஒளிந்திருக்கிறார் என்பதை எப்படி உங்களால் கற்பனை பண்ண முடிகிறது?
அப்படிப்பட்ட தலைவனையா நாங்கள் கொண்டிருந்தோம்? அப்படிப்பட்ட தலைவனை நம்பியா 25000 மாவீரர்கள் மாண்டார்கள்?

ஈராக் முழுவதும் வீழ்ச்சியுற்ற நிலையில் சதாம் உசேனை அமெரிக்கா தேடிக்கொண்டிருந்த காலத்திலும் சதாம் உசேன் கைதுசெய்யப்பட்டபோதும் தலைவன் தெரிவித்த கருத்துக்களே எமது தலைவனையும், அவனுக்கு என்ன நடந்திருக்குமென்பதையும் அடையாளங்காணப் போதுமானது. கே.பி யாரினதோ அவ்வப்போது இணையத்தளங்களில் புலனாய்வுத்துறையின் பெயரால் விளையாடிக்கொண்டிருக்கும் நபர்களினதோ அறிக்கைகள்கூட இரண்டாம் பட்சமே.


கொண்டோடி on 26 June, 2009 at 3:07 am #

வெளிநாட்டுப் புலனாய்வுத் துறை பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன்.
‘நாய் பாக்கிற வேலைய நாய் பாக்க வேணும், கழுதை பாக்கிற வேலைய கழுதை பாக்க வேணும்’ எண்டு ஒரு சொலவடை இருக்கு. அந்தமாதிரி அவையவை தங்கட வேலையப் பாக்கிறதுதான் சரி. அதுவும் புலனாய்வு அமைப்பு எண்டு பேர் வைச்சுக்கொண்டு, அறிக்கை விடுறது தங்கட வேலையெண்டு நினைச்சுக்கொண்டிருந்தா என்னத்தைச் சொல்லிறது? இப்பிடித்தான் இவ்வளவுநாளும் புலனாய்வு செய்தினமோ என்னவோ?

உலகத்தரம் வாய்ந்த புலனாய்வு அமைப்பு எண்டு நாங்கள் இறுமாந்திருக்கும் புலிகளின்ர புலனாய்வு அமைப்பைக் கேலிக்குள்ளாக்கிற வேலையத்தான் இந்த அறிக்கைப் புலனாய்வுக்காரர் செய்யினம். கடைசியா மூக்குடைஞ்சு போய் நிக்கினம். (ஆனாலும் அதையும் வெளிப்படையாச் சொன்னதிலதான் கொஞ்சம் மரியாதையெண்டாலும் காப்பாத்தியிருக்கினம்).

அவையள் அவசரப்பட்டு தமிழ்நெற்றுக்கு அறிக்கை விட்டதெல்லாம் வெறும் அரசியல் விளையாட்டுத்தான். கே.பி தலைவரின்ர வீரச்சாவுச் செய்தியை வெளியிடப்போறார் எண்ட கதையைக் கேள்விப்பட்டு, தாங்கள் அவருக்கு முந்தி ‘தலைவர் இருக்கிறார்’ எண்டு அறிக்கை விட்டா அவரின்ர வாயைப் பொத்தீடலாம் எண்டு ஒரு கீழ்த்தரமான உள்நோக்கோட அவசர அவசரமா வந்ததுதான் தமிழ்நெற்றில அந்தச் செய்தி.
ஆனா கே.பி யார் துணிஞ்சு செய்தியை வெளியிட்டதை இந்த அறிக்கைப் புலனாய்வுக் கோஷ்டி எதிர்பார்க்கேல. இயக்கத்தைச் சாட்டிப் பிழைக்கிற மற்றக் கும்பல்களையும் சேத்துக்கொண்டு கொஞ்சநாள் இழுத்துப்பாத்தினம், நிலைமை கைமீறிப் போறதைப் பாத்திட்டு உசாராகீட்டினம். இனிமேல் தாங்கள் சொல்லிற எதுக்கும் மதிப்பில்லாமற் போகுமெண்டதை உணர்ந்து இப்ப விழுந்த பாட்டுக்குக் குறிசுடுற மாதிரி கே.பி அறிவிச்சதை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கினம்.

இந்தநேரம் ஒண்டு ஞாபகம் வருது.
யுத்தநிறுத்த காலப்பகுதியில அரச புலனாய்வுப் பணியாளர்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்ப ரணில் மாத்தையா தான் பிரதமர். அவரிட்ட ‘இப்படி புலனாய்வாளர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே, நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?’ எண்டு கேட்டாங்கள்.
ரணில் ஒரு விளக்கம் குடுத்தார் பாருங்கோ.

“கொல்லப்பட்டவர்கள் புலனாய்வாளர்களில்லை. ‘புலனாய்வாளர்களெண்டா தாங்கள் புலனாய்வாளர்களெண்டு வெளிய தெரியத்தக்கதா வேலை செய்திருக்க மாட்டினம்’. அதாவல உவையள் புலனாய்வாளர்கள் எண்டு நான் நினைக்கவில்லை”.

அட அட அட….
என்னவொரு வசனம்?
மோட்டுச் சிங்களவன் எண்டு சொல்லிச் சொல்லி நாங்கள் இப்ப மோட்டு வளையைப் பாத்துக்கொண்டு நிக்கிறம்.
சாதாரண ஓர் அரசியல்வாதிக்குத் தெரிஞ்சது எங்களுக்குத் தெரியாமற் போயிட்டுது.


k.pathi on 27 June, 2009 at 10:04 am #

இந்தியாவிற்க்கு சு(தந்திரம்) வாங்கி கொடுத்தது யார்?
1)கனிமுழி 2)பவுடர் பாண்டி 3)அடிதொண்டயில் பேசும் அதிசய மிருகம்!


k.pathi on 30 July, 2009 at 8:00 am #

கருனானிதி+சுப்ரமனிய சாமி+துக்லக் சோ+ஜெயா-நீங்கள் அனைவரும்,புலியால் ஆபத்து என்ட்று பொய் உரைத்து பூனைப்படை காவல் கேட்டு வாங்கினீர்கள்:
இப்போது புலிகள் இல்லை!
இருந்தாலும்,உங்களுக்கு காவல் வேண்டும்-
உங்களுக்கு தமிழர்களால் ஆபத்து!


தமிழ்செல்வன் on 13 August, 2009 at 8:16 am #

தமிழீழத்திற்காக முழக்கமிடும் தமிழகப் போராளிகள் என்றும்போல் ஃபாசிஸத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்குள்ள ஃபாசிஸத்திடம் தங்களை அடகுவைத்திடாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். இந்துத்தவா சக்திகள் தங்களது நேச சக்திகளாகல் உங்களை அடையாளம் கண்டுள்ளனர். நேச சக்தி எது? வேஷ சக்தி எது என்பதை பிரித்தறிவதில் தமிழன் சளைத்தவன் அல்லன்


Post a Comment
Name:
Email:
Website:
Comments: ஆங்கிலம் பாமினி அஞ்சல் தமிழ் 99