ஆழம் அறியாமல் காலை விட்டு விட்டேன் போலிருக்கிறது. பிரபுதேவா, நயன்தாரா விவகாரத்தை சினிமா சார்ந்து மட்டும் எழுதி முடித்திருக்கலாம். ஆனால் காதலை விசாரணை செய்ய முற்பட்டது பெரும் தலைவலியாகப் போய் விட்டது.
எந்தக் கட்டுரை எழுதுகின்ற பொழுது இத்தனை குழப்பங்கள் எனக்குள் வந்தது இல்லை. நானே தெளிவாக இல்லாத ஒரு விடயத்தைப் பற்றி எப்படி எழுத முடியும்?
ஓரிரு நாட்களில் மிகுதியை எழுதுகிறேன் என்று வேறு சொல்லித் தொலைத்து விட்டேன். உண்மையில் ஒவ்வொருமுறையும் இக் கட்டுரையின் தொடர்ச்சியை எழுத உட்காருவதும், சில பந்திகள் எழுதி விட்டு திருப்தி இல்லாமல் அப்படியே வைத்து விட்டு போவதுமாகத்தான் நிலைமை இருக்கிறது.
நான் கட்டுரை எழுது ஆரம்பித்தால், அதை எழுதி முடித்து விட்டுத்தான் எழுந்திருப்பேன். நிறைய நேரங்களும் எடுத்துக் கொள்வது இல்லை. ஆனால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் மிகவும் திணறிக் கொண்டிருக்கிறேன்.
பிரபுதேவா பற்றிய கட்டுரையை முடிக்காமல் அடுத்த கட்டுரைக்குள் போக விரும்பாததால் மீண்டும் ஒரு வார இடைவெளி விழுந்து விட்டது. காதல் பற்றி சொல்வதற்கு எனக்கு நிறைய அனுபங்கள் இருக்கின்றன. நிறைய அவதானிப்புகள் இருக்கின்றன.
அதே வேளை காதல் என்கின்ற உணர்வு பற்றிய தேடல்களும் கேள்விகளும் எனக்குள் இருக்கின்றன.
ஆனாலும் நிச்சயமாக பிரபுதேவா கட்டுரையை நான் எழுதி முடிப்பேன். ஓரிரு நாட்களில் அல்ல, ஓரிரு வாரங்களில். குழப்பம் இல்லாமல் ஒரு தெளிவான முடிவைத் தர விரும்புகிறேன். அதற்கே ஓரிரு வாரங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன.
அதுவரை இந்தக் கட்டுரையை ஒத்திப்போட்டு விட்டு வேறு கட்டுரைகளை தருகிறேன். அடுத்ததாக என்னுடைய தயக்கங்களை தள்ளி வைத்து விட்டு ஒரு முக்கிய அரசியல் கட்டுரையை தருவதற்கு எண்ணியிருக்கிறேன்.
அந்தக் கட்டுரையோடு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.
- வி.சபேசன் B.A.Pol.Sci