இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.
விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட
என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது.
மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது.
சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது.
அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலகச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட, அவுஸ்ரேலியாவிலேயே உள்ள சிட்னியில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்ட அலங்கோலமும் நடந்தேறியது.
விடுதலைப் புலிகளின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு விடுதலைப் புலிகளின் துறைகள் ஒன்றின் உப பிரிவான அனைத்துலகப் பணியகம் கட்டுப்பட மறுப்பதோடு தலைமைக்கு சவாலும் விடுகிறது என்கின்ற பாரதூரமான செய்தியை இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தின.
இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் பற்றி கூறியாக வேண்டும். மே 2009 வரை தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு பின்பு தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலை இழந்த தலைமைச் செயலகம் குறிப்பிட்ட காலத்திற்கு தன்னுடைய செயற்பாட்டையும் இழந்து போயிருந்தது.
ஆயினும் சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்து வெளியேறிய போராளிகள் மீண்டும் தலைமைச் செயலகத்தை புறநிலை நாடுகளில் இருந்து செயற்பட வைத்தார்கள். பல மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டு விட்டாலும், ஆளுமை மிக்க சில தளபதிகள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் எனக் குறிப்பிடத்தக்க சிலர் தப்பி வந்து இந்த தலைமைச் செயலகத்தை மீள உருவாக்கி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியமைக்கும் பணியில் இறங்கினார்கள்.
ஆனால் இந்தப் பணியில் இவர்களுக்கு ஒரு பெரும் சவால் காத்திருந்தது. தலைமைச் செயலகத்தை உருவாக்கிய போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் நன்கு அறிமுகமானவர்களாகவே இருந்தார்கள். வெளிநாட்டுக் கிளைகளின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான் அவர்கள். ஆனால் புலம்பெயர் வாழ் மக்களுடன் அவர்களுக்கு அறிமுகம் இருந்திருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர் வாழ் மக்களிற்கும் பாலமாக செயற்பட்டு வந்த அனைத்துலகப் பணியகம் சிலருடைய தவறான வழிநடத்தலால் குளறுபடியாக நடக்கத் தொடங்கியது. புலம்பெயர் மக்களுடன் தமக்கு இருக்கும் நேரடித் தொடர்பை தமது பலமாக கருதிய குறிப்பிட்ட நபர்கள் சில விடயங்களில் தான் தோன்றித்தனமாக நடக்கத் தொடங்கினார்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தரவுகள் சிலவற்றை செயற்படுத்தவும் இவர்கள் மறுத்தார்கள்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்துலகப் பணியகத்தின் செல்வாக்கில் செயற்படுகின்ற ஊடகங்களாகிய பதிவு, ஈழமுரசு, கருப்பு போன்றவற்றில் விடுதலைச் செயற்பாட்டாளர்களை கொச்சைப்படுத்துகின்ற “திறந்த மடல்”, கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் வெளிவரத் தொடங்கிய பொழுது, அவைகளை நிறுத்தும்படி கண்டிப்பான உத்தரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து சென்றது.
ஆனால் அவற்றை நிறுத்துவதற்குப் பதிலாக போராளிகளைக் காட்டிக் கொடுக்கின்ற கைங்கர்யத்தில் இந்த ஊடகங்கள் இறங்கின. ரகசியமாக செயற்பட்டு வந்த போராளிகள் சிலரின் பெயர்களையும் இருப்பிடங்களையும் வெளியிட்டு கட்டுரை வரைந்து பெரும் துரோகச் செயலை இந்த ஊடகங்கள் செய்தன. இந்தக் காட்டிக்கொடுப்பின் காரணமாக சில நெருக்கடிகளையும் போராளிகள் சந்திக்க நேர்ந்தது.
பேச்சுக்களின் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அதுவரை சிலரிடம் இருந்த நம்பிக்கையின் மீது இந்தச் சம்பவம் கல்லைத் தூக்கிப் போட்டது. அனைத்துலப் பணியகம் நவம்பர் 26 அன்று மாவீரர் நாள் அறிக்கை விட்டு செய்த மலிவான அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.
இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. தலைமைச் செயலகம் சார்பில் குறிப்பிட்ட நாடுகளுக்கு போராளிகள் அனுப்பப்பட்டு நிர்வாக மாற்றங்களுக்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் தமது ஊடக பலத்தை பயன்படுத்தி போராளிகளை “மர்ம நபர்கள்”, “கேபியின் ஆட்கள்” என்று பரப்புரை மேற்கொள்ளவும், எதிரியிடம் காட்டிக் கொடுக்கவும் தயங்காத கூட்டத்தை கையாள்வது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்மையிலேயே சவாலான விடயமாகவே இருக்கப் போகிறது.
ஆயினும் தலைமைச் செயலகத்தில் செயற்படுகின்ற போராளிகள் புலிகளுக்கே உரிய உறுதியோடு இருக்கிறார்கள். நிலைமையை ஒழுங்குபடுத்தி புலிகள் இயக்கத்தை துடிப்போடு செயற்பட வைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
வரும் வாரங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளில் பல மட்டங்களில் பலவிதமாக விளங்கிக் கொள்ளப்படும். குழப்பங்களுக்கு இடம் அளிக்காது மக்களும் விடுதலைச் செயற்பாட்டாளர்களும் தெளிவாக இருக்க வேண்டியது இந்த இடத்தில் மிக முக்கியமானதாகும்
சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காது, சொந்த மூளையைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். சில பொய்ப் பரப்புரைகளுக்கு பலியானால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியை இல்லாமல் செய்வதிலேயே போய் முடியும்.
ஆகவே வரும் வாரங்களில் புலம்பெயர் ஊடகங்களின் வெளிவர இருக்கின்ற செய்திகள் குறித்து மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.
புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தீர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்திறன் மிக்க ஒரு இயக்கமாக மீண்டும் உருவெடுக்க இருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.
முக்கிய குறிப்பு: இக் கட்டுரையில் பல விடயங்கள் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விரிவாக பேச முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் காலத்தின் தேவை கருதி தவிர்க்கப்பட்டுள்ளன. நிலைமை அனுமதித்தால் முழு விபரங்களோடு விரிவான கட்டுரை வெளிவரும்.
- வி.சபேசன் B.A.Pol.Sci
போராளிகளின் முயற்சி வெற்றி பெற்று விடுதலைப் புலிகள் மிண்டும் பலமான இயக்கமாக மாற வேண்டும்
ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்…
தலமைசெயலகம் நாட்டிலிருந்து தான் வரமுடியும், அது அமைதி காக்கும் பட்சத்தில் நாட்டில் இயங்கிய தலமைசெயலகம்
புலம்பெயர் நாடுகளில் அமைத்த அனைத்துலக தலமைசெயலகம் தான் அடுத்த நிலை பொறுப்பில் இருக்கிறது, அது தான் யதார்த்தம்.
அதை மீறி செயல்படுபவர்கள் சந்தேகத்துடன் தான் பார்க்கப்படுவார்கள். இவர்களை ஏன் சிறி லங்கா அரசு அனுப்பி இருக்ககூடாது? அவர்களின் செய்திட்டங்கள் ஆரம்பத்தில் இருந்து பிரிவினையை வளர்பதலில் முக்கியம் காட்டுகிறது
TH; You are right. I have some experience in dealing with some people who came to EU. How did they come to EU by spending several millions. 1. to get release 2. to make arrangments to obtain visa 3. secure their arrival in one of EU country
Who funds/ is it stolen money from LTTE or SL govnts money
பொன்னையா எங்களுக்கும் உந்த சந்தேகம் இருக்கிறது. அனைத்துலகத் தொடர்பகத்தின் நந்தகோபனும் அறிவும் எப்படி வந்தவை என்று. கேபியண்ணைதான் காம்பில இருந்து எடுத்துவிட்டவை அவையளை எண்டு உங்களுக்கு தெரியாதோ. தம்பி TH தலைமைச் செயலகத்திற்கு கட்டுப்பட்ட ஒரு பிரிவுதான் அனைத்துலகத் தொடர்பகமே தவிர தலைமைச் செயலகமாக இயங்குவதற்கு அவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. அனைத்துப் பிரிவுகளையும் ஒருங்கிணைப்பது தான் தலைமைச் செயலகம். அதற்கு கட்டுப்பட்டவர்கள்தான் அனைத்துப்படையணிகளும்.
uNmai:we have lot of challnges:unless we have serious tamil feelingswe will land in wrong path!
போராளிகளின் முயற்சி வெற்றி பெற்று விடுதலைப் புலிகள் மிண்டும் பலமான இயக்கமாக மாற வேண்டும்!
velvadhu nichchayam!!
சிங்கள எதிரிகளுக்காக போராட இயக்கம் தேவை என்பதை விட மதலில் இங்கே புலம் பெயர்ந்து தெருக்களில் திரியும் தமிழ் ரவுடிகளை அடித்து அடக்குவதற்க என்றாலும் ஒரு அமைப்பு வேண்டும்.