“பெற்றோர்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல் இந்தத் திருமணம் பகுத்தறிவுத் திருமணமாக நடைபெறும் என்றால் மட்டும் நான் வருகிறேன், அவர்களின் சம்பிரதாய நம்பிக்கைகளை அனுசரித்து செய்ய வேண்டும் என்றால், முற்று முழுதாக ஒரு புரோகிதத் திருமணமாகவே அதை நடத்தி விடுங்கள்” என்று சொன்னேன்.
அடே, நீ தமிழனாவே இருடா! அது பிரச்சனை இல்லை. ஆனால் உனக்கு எங்கேயடா கலாச்சாரம் இருக்கிறது? எங்கேயடா சமயம் இருக்கிறது? சொல்லடா மடையா!
“மௌனராகம்” என்று ஒரு திரைப் படம். மணிரத்தினம் என்று ஒரு நல்ல இயக்குனர் அப்பொழுது இருந்தார். பெரும் வெற்றி பெற்ற “மௌனராகம்” திரைப் படத்தை அவர்தான் இயக்கியிருந்தார்.