இளையராஜா எங்களின் சொத்து
ஒரு தனித்துவமான பண்பாட்டின் நல்ல அடையாளம் அதன் தனித்துவமான இசை.  தனித்துவமான பண்பாடு இல்லாமல் இனமோ, தேசியமோ இருக்க முடியாது. தனித்துவம்  மிக்க தூய்மையான இசையை தருபவன் அந்த இனத்தின், தேசியத்தின் பெரும் சொத்து.

இளையராஜா எங்களின் சொத்து

ஒரு நாள் என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். „உங்களுக்கு இளையராஜாவை நேரில்  சந்தித்து பேச விருப்பமா?’. உடனடியாகவே என்னுடய பதில் ‘இல்லை’ என்பதாகவே  இருந்தது.

அந்த மனிதன் தன்னுடைய இசை மூலம் எங்களுடன் தினமும் பேசிக்  கொண்டிருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் எங்களுடன் கூடவே பயணித்துக்  கொண்டிருக்கிறது. நாங்கள் துள்ளிக் குதிக்கும் போது அவன் இசை எங்களோடு  சேர்ந்து துள்ளுகிறது. சோர்ந்து வாடி இருக்கும் போது அவன் இசை தலை கோதிச்  செல்கிறது.

என்னுடன் தினமும் பேசுகின்ற ஒருவனோடு எதற்கு நான் நேரில் சந்தித்து தனியாகப் பேச வேண்டும்?

நான் நேரில் சந்திக்கின்ற மனிதன் ராசையாவாகத்தான் இருப்பான். அந்த மனிதனை எனக்குப் பிடிக்காமல் கூடப் போகலாம்.

அவன் இளையராஜாவாக மட்டும் மேடையில் நின்று இசை மீட்ட, கூடி நின்று அமைதியாக  தலையாட்டி ரசிக்கும் பல இலட்சம் பேர்களில் ஒருவன் நான் என்பதுதான் எனக்கு  வேண்டும்.

இசை என்பதைத் தாண்டி வேறு எதுவாகவும் அவனைப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.

தாழ்த்தப்பட்ட மக்களின் மத்தியிலே இருந்து வந்தான். ஆயினும் அவர்களுக்காக  அவன் தெருவில் இறங்கிப் போராடியது இல்லை. அவர்களின் வாயில் மலம்  திணிக்கப்பட்ட போதும், வல்லுறவுக்கு உட்பட்ட போதும் அவன் கொதித்து  எழவில்லை.

அதற்காக அந்த மக்கள் அவனுடன் என்றைக்கும் கோபித்தது இல்லை. புறக்கணித்ததும் இல்லை.

ஆயினும் இப்படி ஒரு காட்சி திரையில் ஓடுகின்ற போது, எல்லாவற்றிற்கும்  சேர்த்து அவன் தன்னுடைய இசையால் ஓவென்று கதறி அழுவான். அவனால் அதை  மட்டும்தான் செய்ய முடியும். இவன் தனக்காகத்தான் அழுகிறான் என்பது  சம்பந்தப்பட்டவனுக்கு நிச்சயம் புரியும்.

பழசிராஜா என்று ஒரு படம். மலையாளத்தில் எடுக்கப்பட்டு பின் தமிழிலும் மொழி  மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் படத்திலே ஒரு காட்சி. மன்னன் போரிலே தோற்று,  நாடு இழந்து, மனைவி மக்களோடு காட்டுக்குள் பின்வாங்குவான். காட்டுக்குள்  நின்றபடி போரை நடத்தப் போகிறான் என்பதை சொல்கின்ற ஒரு வீரம் மிகுந்த  காட்சி.

அந்தக் காட்சியில் வீரத்தைச் சொல்லாமல் சோகத்தை அவன் பாடினான். கதறி  அழுதபடி ஒப்பாரி வைத்தான். இப்படிக் காட்டுக்குள் பின்வாங்காமல் தன்னுடைய  ஒட்டுமொத்த குடும்பத்தோடு வீரச்சாவை அடைந்த இன்னொரு மன்னனுக்காக அவன்  அழுகிறான் என்பது அவனை சுவாசிக்கின்ற எங்களுக்கு மட்டுமே புரியும்.

இதை விட அவனால் வேறு என்ன செய்ய முடியும்? அவன் ஒரு கவிஞன் என்றிருந்தால்,  வார்த்தைகளில் தன் சோகத்தையும், கோபத்தையும் வடித்திருப்பான். ஆனால் இவனோ  இசையை படைப்பதற்காய் வந்திருப்பவன்.

வரிகளைத் தாண்டிய இசையால்தான் இவற்றை எல்லாம் வெளிப்படுத்துவான்.

அவனுடைய பாடல்கள் பெண் விடுதலையையும் சொல்லும், பெண்ணை அடங்கவும் சொல்லும்,  சாமியை பாடும், சாமி இருந்திட்டா காமி என்றும் சொல்லும், தமிழைப்  போற்றும், ‘ஓம் சிவோகம்’ என்று வடமொழியிலும் அதிரும், காதலை ஒரு நேரம்  போற்றும், மறு நேரம் தூற்றும். இப்படி அனைத்தையுமே அவனுடைய பாடல்கள்  கொண்டிருக்கும்.

ஆயினும் அவனுடைய இசை எங்களுடையதாய் இருக்கிறது.

எதைப் பாடினாலும், அது சொல்லுகின்ற கருத்தை புறந்தள்ளி விட்டு, இசையை  மட்டும் கொண்டாடுகின்ற பண்பாடு மிகுந்த கூட்டத்தை படைத்த அற்புதம் அவன்.

‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா’ என்று அவன் பாடுவான்.  தாயகம் தானாக கண் முன் விரியும். ஊரைப் பற்றிப் பாடாத மற்றைய பாடல்களும்  ஊரையே ஞாபகப் படுத்தும்.

எங்கள் ஊரையும், காலத்தையும், அதைச் சுற்றிய ஞாபகங்களையும் அவனின் பாடல்களைக் கொண்டே நாங்கள் நிரப்பி வைத்திருக்கிறோம்.

கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி அவனின் அன்பு மனைவி இறந்தார் என்னும்  செய்தி வந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஒரு புத்தகத்தில் ‘மனைவி  இறந்த பின்பு ஆண்கள் நீண்ட காலம் உயிர் வாழ்வது இல்லை’ என்கின்ற ஒரு  ஆய்வைப் படித்துத் தொலைத்திருந்தேன்.

இந்த சோகத்தில் இருந்து அவன் எப்படி மீளப் போகிறான் என்று மனம் தவியாய் கிடந்து தவித்தது.

அவனுக்கு தெரிந்தது எல்லாம் இசைதானே. அவன் தன்னுடைய ஆர்மோனியப் பெட்டியை  தூக்கிக் கொண்டு புறப்பட்டான். அதுவரை தனக்குத்தானே போட்டு வைத்திருந்த  கட்டுப்பாடுகளை விலக்கி விட்டு, தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கப்  புறப்பட்டான்.

தன்னுடைய தாலாட்டை கேட்டு வளர்ந்த பிள்ளைகளை பார்ப்பதற்காய் கடந்த ஒரு ஆண்டாக உலகத்தை தொடர்ச்சியாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.

அவன் எங்கள் வீட்டிலே ஒருவன். எங்களின் உறவாய் இருப்பவன். எத்தனையோ தடவைகள்  எங்களுக்கு பைத்தியம் பிடித்து விடாமல் காப்பாற்றி வருகின்ற வைத்தியன்.  மூன்று தலைமுறைகளாய் நாம் அவனுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

வெறும் கூலி கொடுத்து இந்த கடனை நாங்கள் அடைத்து விட முடியாது.

அவன் எங்களுக்காய் தெருவில் இறங்கவில்லை, கொடி பிடிக்கவில்லை, அறிக்கை  விடவில்லை என்று அவன் மீது எந்தக் கோபமும் எனக்கு இல்லை. இதை நாங்கள்  அவனிடம் கேட்கவும் இல்லை. இசையால் மனதிற்கு ஆறுதலைக் கொடுக்கின்ற  வேலையைத்தான் அவனுக்கு கொடுத்தோம்.

அவன் தன்னுடைய வேலையை மிகச் சரியாகவே செய்கிறான்.

எங்களின் போராட்டத்தின் நியாயங்களை அவன் பேசாது விட்டாலும், நியாயங்களில்  அவனுடைய இசையும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பண்பாடு மிக்க, நாகரீகம் மிக்க  தனித்துவமான இனம் என்பதை அவனுடைய இசை சொல்லிக் கொண்டே இருக்கிறது.

இளையராஜா எங்களின் சொத்து.

புலிகள் இயக்கம் - ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் போராளிகள்
இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட

என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது.

சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் மெல்பேர்ணில நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலகச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட, அவுஸ்ரேலியாவிலேயே உள்ள சிட்னியில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வில் அனைத்துலப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்ட அலங்கோலமும் நடந்தேறியது.

விடுதலைப் புலிகளின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு விடுதலைப் புலிகளின் துறைகள் ஒன்றின் உப பிரிவான அனைத்துலகப் பணியகம் கட்டுப்பட மறுப்பதோடு தலைமைக்கு சவாலும் விடுகிறது என்கின்ற பாரதூரமான செய்தியை இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தின.

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் பற்றி கூறியாக வேண்டும். மே 2009 வரை தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு பின்பு தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலை இழந்த தலைமைச் செயலகம் குறிப்பிட்ட காலத்திற்கு தன்னுடைய செயற்பாட்டையும் இழந்து போயிருந்தது.

ஆயினும் சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்து வெளியேறிய போராளிகள் மீண்டும் தலைமைச் செயலகத்தை புறநிலை நாடுகளில் இருந்து செயற்பட வைத்தார்கள். பல மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டு விட்டாலும், ஆளுமை மிக்க சில தளபதிகள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் எனக் குறிப்பிடத்தக்க சிலர் தப்பி வந்து இந்த தலைமைச் செயலகத்தை மீள உருவாக்கி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியமைக்கும் பணியில் இறங்கினார்கள்.

ஆனால் இந்தப் பணியில் இவர்களுக்கு ஒரு பெரும் சவால் காத்திருந்தது. தலைமைச் செயலகத்தை உருவாக்கிய போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் நன்கு அறிமுகமானவர்களாகவே இருந்தார்கள். வெளிநாட்டுக் கிளைகளின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான் அவர்கள். ஆனால் புலம்பெயர் வாழ் மக்களுடன் அவர்களுக்கு அறிமுகம் இருந்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர் வாழ் மக்களிற்கும் பாலமாக செயற்பட்டு வந்த அனைத்துலகப் பணியகம் சிலருடைய தவறான வழிநடத்தலால் குளறுபடியாக நடக்கத் தொடங்கியது. புலம்பெயர் மக்களுடன் தமக்கு இருக்கும் நேரடித் தொடர்பை தமது பலமாக கருதிய குறிப்பிட்ட நபர்கள் சில விடயங்களில் தான் தோன்றித்தனமாக நடக்கத் தொடங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தரவுகள் சிலவற்றை செயற்படுத்தவும் இவர்கள் மறுத்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்துலகப் பணியகத்தின் செல்வாக்கில் செயற்படுகின்ற ஊடகங்களாகிய பதிவு, ஈழமுரசு, கருப்பு போன்றவற்றில் விடுதலைச் செயற்பாட்டாளர்களை கொச்சைப்படுத்துகின்ற “திறந்த மடல்”, கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் வெளிவரத் தொடங்கிய பொழுது, அவைகளை நிறுத்தும்படி கண்டிப்பான உத்தரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து சென்றது.

ஆனால் அவற்றை நிறுத்துவதற்குப் பதிலாக போராளிகளைக் காட்டிக் கொடுக்கின்ற கைங்கர்யத்தில் இந்த ஊடகங்கள் இறங்கின. ரகசியமாக செயற்பட்டு வந்த போராளிகள் சிலரின் பெயர்களையும் இருப்பிடங்களையும் வெளியிட்டு கட்டுரை வரைந்து பெரும் துரோகச் செயலை இந்த ஊடகங்கள் செய்தன. இந்தக் காட்டிக்கொடுப்பின் காரணமாக சில நெருக்கடிகளையும் போராளிகள் சந்திக்க நேர்ந்தது.

பேச்சுக்களின் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அதுவரை சிலரிடம் இருந்த நம்பிக்கையின் மீது இந்தச் சம்பவம் கல்லைத் தூக்கிப் போட்டது. அனைத்துலப் பணியகம் நவம்பர் 26 அன்று மாவீரர் நாள் அறிக்கை விட்டு செய்த மலிவான அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.

இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. தலைமைச் செயலகம் சார்பில் குறிப்பிட்ட நாடுகளுக்கு போராளிகள் அனுப்பப்பட்டு நிர்வாக மாற்றங்களுக்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தமது ஊடக பலத்தை பயன்படுத்தி போராளிகளை “மர்ம நபர்கள்”, “கேபியின் ஆட்கள்” என்று பரப்புரை மேற்கொள்ளவும், எதிரியிடம் காட்டிக் கொடுக்கவும் தயங்காத கூட்டத்தை கையாள்வது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்மையிலேயே சவாலான விடயமாகவே இருக்கப் போகிறது.

ஆயினும் தலைமைச் செயலகத்தில் செயற்படுகின்ற போராளிகள் புலிகளுக்கே உரிய உறுதியோடு இருக்கிறார்கள். நிலைமையை ஒழுங்குபடுத்தி புலிகள் இயக்கத்தை துடிப்போடு செயற்பட வைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

வரும் வாரங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளில் பல மட்டங்களில் பலவிதமாக விளங்கிக் கொள்ளப்படும். குழப்பங்களுக்கு இடம் அளிக்காது மக்களும் விடுதலைச் செயற்பாட்டாளர்களும் தெளிவாக இருக்க வேண்டியது இந்த இடத்தில் மிக முக்கியமானதாகும்

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காது, சொந்த மூளையைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். சில பொய்ப் பரப்புரைகளுக்கு பலியானால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியை இல்லாமல் செய்வதிலேயே போய் முடியும்.

ஆகவே வரும் வாரங்களில் புலம்பெயர் ஊடகங்களின் வெளிவர இருக்கின்ற செய்திகள் குறித்து மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.

புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தீர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்திறன் மிக்க ஒரு இயக்கமாக மீண்டும் உருவெடுக்க இருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

முக்கிய குறிப்பு: இக் கட்டுரையில் பல விடயங்கள் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விரிவாக பேச முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் காலத்தின் தேவை கருதி தவிர்க்கப்பட்டுள்ளன. நிலைமை அனுமதித்தால் முழு விபரங்களோடு விரிவான கட்டுரை வெளிவரும்.

- வி.சபேசன் B.A.Pol.Sci

என்னை உனக்கு தெரிகிறதா???!!!!
<object classid="clsid:cfcdaa03-8be4-11cf-b84b-0020afbbccfa" width="425" height="350" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="src" value="http://www.youtube.com/v/iP6ZK7MhLBk&feature" /><embed type="audio/x-pn-realaudio-plugin" width="425" height="350" src="http://www.youtube.com/v/iP6ZK7MhLBk&feature"></embed></object>

தேசியத் தலைவருக்கு அக வணக்கம் செலுத்துவது பற்றி….
எமது போராட்டத்தை முடக்கிப் போட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக தேசியத் தலைவரின் இருப்பு அல்லது இறப்புப் பற்றிய குழப்பமே எம்மை மொத்தமாக முடக்கிப் போட்டது.

நவம்பர் மாதம் வந்து விட்டது. புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் “நாடு கடந்த அரசு” மாவீரர் நாள் நிகழ்வுகளை பொறுப்பெடுத்து நடத்தியிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கான முனைப்புகளில் நாடு கடந்த அரசு ஈடுபடுவதாக தெரியவில்லை.

தமிழர்களின் மிக முக்கியமான நிகழ்வு ஒன்றில் நாடு கடந்த அரசு வெறும் பார்வையாளராக மட்டும் இருக்க முடியாது. ஆனால் நாடு கடந்த அரசு எல்லோரையும் அனுசரித்துப் போக விரும்புகிறது. இந்த அணுகு முறை பயன்தராது என்பதை நாடு கடந்த அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும்.

இந்த விடயம் பற்றிப் பின்பு பார்ப்போம். இப்பொழுது இந்தக் கட்டுரையின் தலைப்பு பேசுகின்ற மிக முக்கியமான விடயத்திற்கு வருவோம்.

தேசியத் தலைவரை விட்டு விட்டு எமது போராட்டம் அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. எமது போராட்டத்தை முடக்கிப் போட்டிருப்பது முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்வி அல்ல, மாறாக தேசியத் தலைவரின் இருப்பு அல்லது இறப்புப் பற்றிய குழப்பமே எம்மை மொத்தமாக முடக்கிப் போட்டது.

தேசியத் தலைவர் வீரச் சாவு அடைந்தார் என்கின்ற உண்மையை தமிழினம் ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றைக்குப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கும். தமிழினம் தேசியத் தலைவரின் பெயரில் ஒற்றுமையாக நின்று சிறிலங்கா அரசுக்கு சவால் விட்டிருக்கும்.

குழப்பத்திற்கு சிறிலங்கா அரசே காரணம்

தேசியத் தலைவர் பற்றிய குழப்பத்தை சிறிலங்கா அரசே உருவாக்கியது. இந்தக் குழப்பம் இன்று வரை தீர்ந்து விடாமல் சிறிலங்கா அரசு மிகக் கவனமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதலில் மே 18ஆம் திகதி தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று சிறிலங்கா அரசு கூறியது. பின்பு மே 19ஆம் திகதி கொல்லப்பட்டதாகக் கூறி அவரின் உடலைக் காட்டியது. தொழில் நுட்பம் குறைந்த கமெராவினால் எடுக்கப்பட்ட காட்சிகளை முதலில் வெளியிட்டது. இதிலானேயே பெரும் குழப்பம் தமிழர்களிடம் உருவானது. பின்பு வெளியிடப்பட்ட மிகத் தெளிவான காட்சிகளும் புகைப்படங்களும் இந்தக் குழப்பத்தை முற்று முழுதாக தீர்க்கவில்லை.

இருக்கிறார் என்றும் இல்லை என்றும் இரு தரப்பு தமிழர்களிடம் உருவாகி விட்டது.

தேசியத் தலைவருக்கு எதிரான வழக்குகள் இலங்கை, இந்திய நீதிமன்றங்களில் இருந்து நீக்கப்பட்ட்டன. ஆனால் இறப்புச் சான்றிதழை சிறிலங்கா அரசு இன்று வரை உத்தியோகபூர்வமாக இந்தியாவிடம் வழங்கவில்லை.

இப்படி திட்டமிட்டு குழப்பங்களை உருவாக்கி தமிழர்களை பிளவுபடுத்தி போராட்டத்தை ஒட்டு மொத்தமாக சிறிலங்கா அரசு முடக்கிப் போட்டிருக்கிறது.

நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்று வாதிடுவதற்கு அடிப்படையாக சிறிலங்கா அரசு தருகின்ற ஆதாரங்களே இருக்கின்றன. தேசியத் தலைவர் இருக்கிறார் என்று சொல்வதற்கும் சிறிலங்கா அரசு தருகின்ற ஆதாரங்களே காரணமாக இருக்கின்றன. இப்படி இரண்டு வாதங்களின் அடித்தளமும் சிறிலங்கா அரசிடமே இருக்கின்றன.

இவற்றை தாண்டி எம்மிடம் எதுவுமே இல்லை. ஆகவே சிறிலங்கா அரசு தான் நினைத்தபடி தமிழர்களின் மத்தியில் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

ஆயினும் பெரும்பாலான தமிழர்கள் மெது மெதுவாக உண்மையை உணர்ந்து வருகிறார்கள். அந்த உண்மை தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பதே. ஒரு சில மோசடிப் பேர்வழிகள் தமது சுயநலன்களுக்காக தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பல தமிழர்களுக்கு உண்மை புரிய ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் மாவீரர் நாளில் தேசியத் தலைவர் நினைவுகூரப்பட்டு அவருக்கு அக வணக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற சிந்தனை குறிப்பிட்டளவிலான தமிழர்களிடம் இருக்கின்றது.

கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம்

உண்மையில் கடந்த ஆண்டு மாவீரர் நாளிலேயே தேசியத் தலைவருக்கு அகவணக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிக நீண்ட விவாதங்களிற்குப் பிறகு அனைத்து வெளிநாட்டுக் கட்டமைப்புகளும் இதற்கு இணங்கியிருந்தன.

தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்கின்ற உண்மை அனைத்து வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்பாளர்களுக்கும் தெரியும். தேசியத் தலைவரின் வீரச் சாவினை அடுத்து வெளிநாட்டுக் கிளைகளின் பொறுப்புகளில் இருந்த பலர் கதறி அழுதார்கள். சிலர் தமது சக பொறுப்பாளர்களின் முன்பு அழுதார்கள். சிலர் தனி அறையில் அழுதார்கள்.

ஆனால் தேசியத் தலைவரை நேசித்த மக்களிற்கு மட்டும் அழுவதற்கான உரிமையை மறுத்தார்கள்.

ஆயினும் கேபி போன்றவர்களின் அழுத்தங்கள் காரணமாக மக்களிடம் உண்மையை சொல்லி மாவீரர் தினத்தில் தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒத்துக் கொண்டார்கள். நவம்பர் 26 அன்று தேசியத் தலைவர் வீரச் சாவடைந்ததை மக்களிடம் அறிவிப்பது என்றும், நவம்பர் 27 அன்று தேசியத் தலைவருக்கான அஞ்சலியை செய்வது என்றும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

கேபியின் கைதை அடுத்து இந்த இணக்கப்பாடு குப்பையில் தூக்கிப் போடப்பட்டது. அது கூடப் பரவாயில்லை. நவம்பர் 26 அன்று கேக் வெட்டி களியாட்டம் ஆடிய ஆபாசமும் நடந்தது.

தன்னுடைய இனத்திற்காக வாழ்ந்து தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் அந்த இனத்திற்காக கொடுத்த ஒரு பெரு மனிதனுடைய இறப்பை மூடி மறைப்பது மாத்திரம் அன்றி, அந்த மனிதன் உயிரோடு இருப்பதாக பொய் சொல்லியபடி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவது எனக்கு அருவருப்பை ஏற்படுத்துகிறது.

தேசியத் தலைவரின் பிறந்த நாளை நினைவு கூருவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதற்கு முன்பு அந்த மனிதனின் இறந்த நாளை நினைவு கூர வேண்டும். மாவீரர் தினத்தில் மரியாதை செய்ய வேண்டும்.

இது நடைபெறாதவரை தமிழர்களால் நடத்தப்படுகின்ற அனைத்து மற்றைய நினைவுகூரல்களும் முழுமையடையாத ஒன்றாகவே இருக்கும்.

கலைஞர்கள் விடுத்த வேண்டுகோள்

ஆனாலும் தேசியத் தலைவருக்கு அஞ்சலி செலுத்துவது என்பது சாதரணமாக செய்து விட்டுப் போகின்ற ஒரு விடயம் இல்லை. அது மிகவும் சவாலான விடயம். பெரும் வலிகளை ஒவ்வொரு தமிழனுக்கும் கொடுக்கின்ற ஒரு நிகழ்வு அது.

சாவே வராத ஒரு மனிதனாக நம்பப்பட்டவர் தேசியத் தலைவர். அவரால் மட்டுமே தமிழர்களை மீட்க முடியும் என்கின்ற உறுதியான நம்பிக்கை தமிழர்களிடம் இருந்தது. அவருக்கு சாவு வந்தது என்பதையும் தமிழர்களின் விடுதலை தள்ளிப் போய் விட்டது என்பதையும் ஏற்றுக் கொள்வதற்கு தமிழர்களின் மனம் ஒப்பாது.

அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்பவர்களில் கூட பலரும் இன்னும் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தமது மனதை தயார்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடு ஒன்றில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான கலைஞர்களின் கூட்டம் நடந்தது. சில மாதங்களிற்கு முன்பு தேசியத் தலைவருக்கு மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்துவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் பற்றி அக் கூட்டத்திற்கு வந்திருந்த ஓரிரு கலைஞர்கள் அறிந்திருந்தார்கள்.

அவர்கள் அங்கே அது பற்றிய பிரச்சனையை எழுப்பினார்கள். உணர்ச்சிபூர்வமான உரையாடல்கள் அங்கே நடந்தன. பெரும்பாலான கலைஞாகள் ஒரு விடயத்தில் உறுதியாக நின்றார்கள். எக் காரணம் கொண்டும் தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பது போன்ற எந்த அறிவிப்பும் மாவீரர் நாள் மேடையில் செய்யப்படக் கூடாது என்று அவர்கள் விடாப்பிடியாக கூறினார்கள்.

அப்படி ஒரு அறிவிப்பு அங்கே நடைபெறுமாகில் அதன் பின்பு நிகழ்ச்சிகளை தரக் கூடிய மனநிலையில் நாம் இருக்க மாட்டோம் என்றும் அந்த வலியினை எம்மால் தாங்க முடியாது என்றும் அவர்கள் கூறினார்கள். தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும், ஆனால் அப்படி ஒரு அறிவிப்பை ஏற்றுக் கொள்ளுகின்ற மனத் தைரியம் எம்மிடம் இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.

தேசியத் தலைவரின் இறப்பை அறிவிப்பது இல்லை என்கின்ற முடிவு ஏற்கனவே அதிகாரம் மிக்கவர்களினால் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு வெறும் சுயநலன் மட்டுமே காரணமாக இருந்தது. இந்த நிலையில் இந்தக் கலைஞர்களின் வேண்டுகோளும அவர்களுக்கு ஒரு

காரணமாக வாய்த்து விட்டது.

இந்தச் சம்பவத்தை இங்கே குறிப்பிடுவதன் காரணம் தேசியத் தலைவரின் இறப்பை ஏற்றுக் கொள்கின்ற மனநிலை பெரும்பாலான தமிழர்களுக்கு இன்னும் உருவாவில்லை என்பதை விளக்கவே.

கசப்பான உண்மையை விட இனிமையான பொய்யை மனித மனம் விரும்புகிறது. பின்பு அதை நம்புகிறது. பொய்யர்களுக்கு இது ஒரு வசதியாகப் போய்விட்டது.

சுயநலனுக்காக தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக பொய் சொல்பவர்கள் தற்போதைக்கு மாறப் போவது இல்லை. அவர்களை மாற்ற வேண்டிய தேவையும் இல்லை. மக்கள் மாறியதன் பின்பு தமது வியாபாரத்தின் பொருட்டு இந்த சுயநலவாதிகளும் மாறி விடுவார்கள்.

ஆனால் தேசியத் தலைவருக்கு அக வணக்கம் செலுத்துகின்ற மனத் தைரியத்தை சாதாரண தமிழர்களுக்கு உருவாக்கவதற்கான வேலைத் திட்டங்களை செய்தாக வேண்டும்.

யார் தடுத்தாலும் அடுத்த ஆண்டு அகவணக்கம் செலுத்தியே தீருவோம்

தமிழினம் தேசியத் தலைவரின் வீரச் சாவை ஏற்று அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற அந்த வலி மிகுந்த கட்டத்தை தாண்டினால் மட்டும்தான் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். போராட்டம் புது வடிவம் பெறும்.

ஆகவே தமிழினத்தின் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விரும்புகின்றவர்கள் தேசியத் தலைவர் வீரச் சாவடைந்தார் என்கின்ற உண்மையை மீண்டும் மீண்டும் பேச வேண்டும். அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற மனத் தைரியத்தை தமிழர்களுக்கு வரச் செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு மாவீரர் நாளுக்குள் இதைச் சாதிக்க முடியாது. ஆயினும் 2011ஆம் ஆண்டின் மாவீரர் நாளுக்குள் இதைச் செய்ய முடியும். இன்னும் கடுமையாக முயன்றால் மே 19க்குள் இதைச் செய்ய முடியும்.

இந்த 2010இல் மாவீரர் நாள் முழுமையாடையாத ஒரு நினைவுகூரலாக நடைபெறுவதை பொறுத்துக் கொள்வோம். நவம்பர் 26இல் நடைபெறக் கூடிய களியாட்டங்களையும் சகித்துக் கொள்வோம். வேறு வழியில்லை.

ஆனால் 2011இல் மே 17இல் இருந்து மே 19வரை எமது மக்களையும் தளபதிகளையும் தேசியத் தலைவரையும் நினைவுகூருவோம். உண்மையையும் தலைவனையும் நேசிப்பவர்கள் இதைச் செய்வோம். அப்படியே 2011ம் ஆண்டின் மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்கு தக்க மரியாதை அளிக்கும்படி அழுத்தங்களை கொடுப்போம்.

இது முடியாது போனால் 2011இல் தலைவனை நேசிப்பவர்கள் தனித்து வேறொரு இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடுக்க முடியாது போகும்.

- வி.சபேசன் B.A.Pol.Sci

பகுத்தறிவாளர்களின் திருமணங்கள் - சர்ச்சைகளும் குழப்பங்களும்
“பெற்றோர்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல் இந்தத் திருமணம் பகுத்தறிவுத் திருமணமாக நடைபெறும் என்றால் மட்டும் நான் வருகிறேன், அவர்களின் சம்பிரதாய நம்பிக்கைகளை அனுசரித்து செய்ய வேண்டும் என்றால், முற்று முழுதாக ஒரு புரோகிதத் திருமணமாகவே அதை நடத்தி விடுங்கள்” என்று சொன்னேன்.

பகுத்தறிவாளனாக சிந்திப்பதும் பேசுவதும் எழுதுவதும் மிகவும் இலகுவானவை. ஆனால் பகுத்தறிவாளனாக வாழ்வது மிகவும் கடினமானது. நிர்வாணமாக நிற்பவர்களுக்கு மத்தியில் ஆடை அணிந்திருப்பவன் போன்ற நிலைமை அது. சில நேரங்களில் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாமும் நிர்வாணமாக நின்று தொலைக்க வேண்டிய தருணங்களும் வரும்.

அப்படி நிற்க வேண்டி வருகின்ற தருணங்களில் திருமணம் என்பது முக்கியமான ஒன்று. இதில் இருந்து எல்லோராலும் தப்பிக்க முடிவது இல்லை.

திருமணம் என்பது இருவர் சம்பந்தப்பட்டது. அதுவும் காதலித்து, பெற்றோரின் விருப்பத்தை மீறி, திருமணம் செய்கின்ற பொழுது மட்டும்தான் அது இருவர் சம்பந்தப்பட்டது. பேச்சுத் திருமணம் என்றாலோ, பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற காதல் திருமணம் என்றாலோ அது இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஆகி விடுகின்றது.

இதில் மணமக்களில் ஒருவர் மட்டும் பகுத்தறிவுச் சிந்தனையோடு இருந்தால் அவருடைய பாடு திண்டாட்டமாகி விடும். இருவர் மட்டும் சம்பந்தப்பட்டுள்ள காதல் திருமணத்தில் மற்றவரை தெளிவுபடுத்தியோ, சமாதானப்படுத்தியோ, சமரசங்களைச் செய்தோ பகுத்தறிவுத் திருமணத்தற்கு சம்மதிக்கச் செய்து விடலாம்.

பேச்சுத் திருமணங்களிலும், பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற காதல் திருமணங்களிலும்தான் பிரச்சனை ஆரம்பமாகின்றது. அங்கே தனித்து நின்று பகுத்தறிவு பேசுகின்ற மணமகனின் குரலோ மணமகளின் குரலோ எடுபடாமல் போய் விடுகிறது.

பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற காதல் திருமணத்தில் வேறொரு பிரச்சனையும் பகுத்தறிவாளனுக்கு வந்து சேரும். காதலை ஏற்றுக்கொண்டு நல்ல மனதோடு நடந்து கொண்ட பெற்றோர்களின் விருப்பப்படி திருமண நிகழ்வை நடத்தி கைமாறு செய்ய வேண்டிய நிலைக்கு பகுத்தறிவாளன் தள்ளப்படுகின்ற சங்கடமான நிலைமை முன்னே வந்து நிற்கும்.

என்னுடைய திருமணம்

நான் காதல் திருமணம் செய்தவன். சில விடயங்களில் சமரசம் செய்து கொள்ளாத என்னுடைய உறுதி பற்றி பெற்றோர் தரப்பிற்கு தெரிந்திருந்ததால் அவர்கள் எதிலும் தலையிடவில்லை.

திருமண அழைப்பிதழிலும் “பெற்றோர்கள் நிச்சயித்திருப்பதால்”, “சுப முகூர்த்தத்தில்” போன்ற பொய்கள் இடம்பெறவில்லை.

எப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று நானே எழுதிக் கொடுத்தேன். அதில் இருந்தபடி பெற்றோர் தரப்பினர் புரிந்துணர்வோடு நடந்து கொண்டார்கள். எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.

ஆனால் பார்வையாளர்களுக்கு “தமிழ் நெறித் திருமணத்தை” பரப்புகின்ற நோக்கம் எனக்கு முக்கியமாக இருந்ததனால், அந்த இடங்களில் நான் சில சமரசங்களை செய்து கொண்டேன். திருமணம் நடைபெறுகின்ற உணர்வை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயத்தில் என்னால் தாலியை தவிர்க்க முடியாமல் இருந்தது.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் இந்த திருமண முறையை பின்பற்றுகின்ற சிந்தனையைப் பெற வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு பொருத்தமான தேவாரங்களையும் ஓதச் செய்தேன்.

(இதைப் பற்றிய மேலதிக விடயம் இந்தப் பேட்டியில் இருக்கிறது)

ஆனால் இவைகளுக்காக நான் என்னுடன்தான் வாதாட வேண்டி இருந்தது. போராட வேண்டி இருந்தது. வாதாடிப் போராடி ஒரு தெளிவான முடிவுக்கு வந்தேன். எந்த சஞ்சலமும் இன்றி மகிழ்ச்சியோடு என்ன செய்கிறேன், ஏன் செய்கிறேன் என்கின்ற தெளிவோடு என்னுடைய திருணமத்தை செய்தேன்.

என் நண்பனின் திருமணம்

என்னைப் போலவே அவனும் ஒரு பகுத்தறிவாளன். இல்லை, அப்படிச் சொல்ல முடியாது. என்னை விட அவன் தீவிரமானவன். சமூகத்தின் மீது மிகுந்த கோபத்தோடு பகுத்தறிவுக் கருத்துகளை பேசுவான்.

அவனுடைய திருமணம் பேச்சுத் திருமணமாக அமைந்து விட்டது. திருமணம் நடப்பது உறுதியாகி, நிச்சயிக்கப்பட்டவளோடு தொடர்ந்து பேசியதில் அங்கே காதலும் அரும்பி விட்டது.

ஒரு புரோகிதர் இல்லாது, தமிழில் மந்திரங்களை சொல்லி, திருமணம் செய்வதற்கு குடும்பத்தினரிடம் அனுமதி பெறுவதற்குள் அவனுக்கு மூச்சு வாங்கிவிட்டது. முதலில் அவனுக்கு துணையாகப் போகின்ற மணப்பெண்தான் சம்மதித்தார். அவனுடைய விளக்கங்களைக் கேட்டு முழுமனதுடனேயே அவர் சம்மதித்தார்.

ஆனால் பெற்றோர்கள் புரோகிதர் இல்லாமல், சமஸ்கிருத மந்திரங்கள் இல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதற்கு மிகவும் தயங்கினார்கள். நீண்ட விவாதங்களின் பின்பு புரோகிதரும், சமஸ்கிருத மந்திரங்களும் இல்லாமல், ஆனால் மற்றைய சடங்குகள் இருப்பது போன்ற ஒரு முறைக்கு சம்மதித்தார்கள்.

கடைசியில் இந்தத் திருமணம் ஒரு இரண்டுங் கெட்டான் திருமணமாக நடந்து முடிந்தது. பார்ப்பான் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சூத்திரன் அமர்ந்து கொண்டான். சூத்திரன் கடவுளின் மொழியான சமஸ்கிருதத்தை கற்பதோ, ஓதுவதோ பாவம் என்பதனால் சமஸ்கிருதம் அங்கே ஒலிக்கவில்லை. மற்றையபடி அனைத்து மூடச் சடங்குகளும் நடந்து முடிந்தன.

திருமணம் நடந்த முறை பற்றி பகுத்தறிவுச் சிந்தனையுள்ள என்னுடைய நண்பனும் திருப்தி அடையவில்லை. மணமக்களின் பெற்றோரும் முழுமையான மகிழ்ச்சி அடையவில்லை.

இன்னொரு தமிழ்நெறித் திருமணமும் என்னுடைய நிபந்தனையும்

இந்தத் திருமணம் நடந்து சில மாதங்களின் பின்பு ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து “தமிழ்நெறித் திருமணம்” ஒன்றை நடத்தித் தரும்படி எனக்கு அழைப்பு வந்தது. பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெறுகின்ற ஒரு திருமணம் அது.

நான் ஒரு விடயத்தை தெளிவாகச் சொன்னேன். “பெற்றோர்களின் அழுத்தங்களுக்குப் பணியாமல் இந்தத் திருமணம் பகுத்தறிவுத் திருமணமாக நடைபெறும் என்றால் மட்டும் நான் வருகிறேன், அவர்களின் சம்பிரதாய நம்பிக்கைகளை அனுசரித்து செய்ய வேண்டும் என்றால், முற்று முழுதாக ஒரு புரோகிதத் திருமணமாகவே அதை நடத்தி விடுங்கள்” என்று சொன்னேன்.

திருமணம் என்பது இனிமையாக மகிழ்ச்சியாக நடக்க வேண்டிய ஒரு நிகழ்வு என்பது என்னுடைய கருத்து. பகுத்தறிவுச் சிந்தனையுள்ள மணமக்கள் தரப்போ, மத நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் தரப்போ, ஆகக் குறைந்தது ஒரு தரப்பாவது திருமணம் நடந்த முறை பற்றி மகிழ்ச்சி அடைய வேண்டும். இரு தரப்புமே அதிருப்தியோடு திருமணத்தை நடத்துவது என்பது சரியானது அல்ல. அது பகுத்தறிவும் அல்ல.

பெற்றோர்களின் முற்று முழுதான ஆதரவோடு அந்தத் தமிழ்நெறித் திருமணத்தை நானும் பலரும் அறிந்த ரவி அருணாச்சலாம் அவர்களும் இணைந்து நடத்திக் கொடுத்தோம்.

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்பது பலரும் நினைப்பது போன்று, எழுதப்பட்டிருக்கும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டது அல்ல. காலத்திற்கும் சூழலிற்கும் ஏற்றபடி ஒழுங்குகளை அமைக்க கோருவதுதான் பகுத்தறிவு.

பகுத்தறிவாளனுக்கு எந்தச் சட்டங்களும் இல்லை. இன்றைக்கு சரி என்பதை நாளைக்கு பிழை என்று சொல்வான். இன்றைக்கு பிழை என்று சொன்னதை நாளைக்கு சரி என்று சொல்வான். அனைத்திற்குமே அவனிடம் நியாயமான காரணங்கள் இருக்கும். தந்தை பெரியார் சொன்னதையும் அவன் காரணத்தோடு மறுத்துச் சொல்வான்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் எழுதி வைத்ததை கட்டிப்பிடித்துக் கொண்டு திரிய மாட்டான். பூணூல் கட்டியிருப்பதனாலேயே அவன் சொல்வது எல்லாம் சரி என்று நம்பிக் கொண்டு வாழ மாட்டான். என்ன செய்தாலும், ஏன், எதற்கு என்று தெரிந்து கொண்டு செய்வான்.

ஒரு செயல் ஒரு இடத்தில் அவனுக்கு மூடநம்பிக்கையாக தெரியும், அதே செயல் இன்னொரு இடத்தில் அவனுக்கு பகுத்தறிவாக இருக்கும்.

கணவனை இழந்த பெண்ணிற்கு அத்துடன் வாழ்க்கை முடிந்தது என்று சொல்லி சமூகத்தின் சொல்லைக் கேட்டு அந்தப் பெண் தாலியை கழற்றினால் அது மூட நம்பிக்கையாக இருக்கிறது. பொருந்தாக் கணவன் வேண்டாம் என்று சமூகத்தை எதிர்த்து இன்னொரு பெண் தாலியைக் கழற்றினால் அது பகுத்தறிவுச் சிந்தனையாக இருக்கிறது.

கடவுள் என்று ஒரு சிலையை உருவாக்கி அதற்கு வழிபாடு நடத்துவது மூடநம்பிக்கையாக இருக்கிறது. அந்தச் சிலைக்கு மக்களின் மொழியில் வழிபாடு செய் என்பது பகுத்தறிவு மிக்க போராட்டமாக இருக்கிறது.

இப்படி பகுத்தறிவு என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. உடைக்க முடியாத விதிகளையும் சட்டங்களையும் செய்து பின்பற்றுவதற்கு பகுத்தறிவு என்பது ஒரு மதமும் இல்லை, அதன் கடவுள் தந்தை பெரியாரும் இல்லை.

இதை உணராத சில மூடர்கள் ஏன் அப்படிச் செய்தாய், ஏன் இப்படிச் செய்தாய் என்று பகுத்தறிவாளர்களை விசாரணை செய்து கொண்டே இருப்பார்கள்.

ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். என்னுடைய துணைவியை புரோகிதத் திருமணத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்ற நிலை எனக்கு ஏற்பட்டிருந்தால், அந்த புரோகிதத் திருமணத்தை செய்து என்னவளை அடைந்திருப்பேன். என்னை மிகவும் நேசிக்கின்ற எனக்கு மிகவும் பொருத்தமான என் துணைவியை அடைவதுதான் பகுத்தறிவே தவிர, தமிழ்நெறித் திருமணம் செய்வதற்காக அவளை இழப்பது அல்ல.

- வி.சபேசன் B.A.Pol.Sci